May 2, 2026 · 2:23 pm
#1
ஒரு காதல் ஒரு நேசம்
#திருமதி_அப்சரஸ்பீனா_லோகநாதன்
#கவிக்குயிலின்_கவி_விமர்சனம்
இஞ்சி
இளா
தாய்க்காக தலை குனிந்தாள் வஞ்சி,
திருமண பந்தத்தில்
தன் கனவுகளைத்
தியாகம் செய்தாள்....
தந்தை சொல் மீறாமல் தாயில்லாமல்
திருமணத்தை ஏற்று
திடமாக நின்றான்...
திரும்பிப் பார்க்காத
தூரத்தில் இருவரும்
துணையில்லாமல்
தனித்து நின்று வாழ...
தினமும் பேசாத வார்த்தைகள்
நெஞ்சில் நிறைந்து
தங்களுக்குள்
திக்கி சிக்கிக் கொள்ள...
தவிர்க்க முடியாத சூழலில்
தன் அத்தைச் சொல் காயம்
தீண்ட,
தாங்க முடியாமல்
தாலியை தந்து
தள்ளி செல்ல....
தானே வந்த சந்திப்பு தங்கையின் திருமண பேச்சில்
தவிர்க்க முடியாத உணர்வுகள்
தகிக்கும் கண்களில் வழிந்தது....
தினங்கள் கழிந்து மீண்டும்
திடீர் சந்திப்பு,
திரும்ப உயிர் வந்தது போல
இதயம் துடித்தது....
திரண்ட கண்ணீரில் கோபமும் காதலும் கலந்து,
திருத்திக் கொண்டார்கள் தவறுகளைத் தழுவிக் கொண்டு....
தாராளமாக சண்டை போட்டு தங்கள் பக்க உண்மைகள் பேசிக் கொண்டு,
தாங்க முடியாத காதலில் மீண்டும் திளைத்து இணைந்தனர்....
Lovely 😍
உங்களுக்கு கதை பிடிச்சதுல சந்தோஷம் @Mrs Beena loganathan ☺️☺️☺️ Thank you 😊
Really good....thanks sis