Pavithra Narayanan - Literary Image 129
Pavithra Narayanan - Literary Image 129
Home Book Reviews நிலா முற்றத்து முத்தம்

நிலா முற்றத்து முத்தம்

✍️ பவித்ரா நாராயணன் ★★★★★
#1
நிலா முற்றத்து முத்தம் 

பவித்ரா நாராயணன் 

#திருமதிஅப்சரஸ்பீனா_லோகநாதன் 

#கவிக்குயிலின்_கவி_விமர்சனம்


சர்வமும் சர்வா
சர்வாவை ரசித்து பார்க்கும்
ரசிகை ரசிகா....
ரசிகாவை இசைத்து ரசிக்கும் சர்வா....


தாயின்றி தளர்ந்த மனதை தாங்கிய ரசிகாவுக்கு
தோழனாய் தோள்கொடுத்து துணையாய் நின்றான் சர்வா.....

தவறாகப் புரிந்த அன்பைத் தள்ளிச் சென்ற விதியும்
தொலைந்த இதயங்களைத் திரும்பத் தேடி இணைத்தது.......

தகராறாய் தொடங்கிய சந்திப்பு
தாமரைக் காதலாய்
தினம் பார்த்து 
தவித்து மலர்ந்து மனம்....

தந்தையின் கண்டிப்பிலும் தழைத்த மகள் பாசம்
தான் விரும்பிய வாழ்வைத் தந்த அன்புத் 
தந்தையாக சிவசங்கரன் சிறப்பு.....

தம்பி அண்ணன் பாசமெனத் 
திகழ்ந்த சர்வா பத்ரி 
தாய்களின் செல்லபிள்ளைகள்.....
 
துள்ளி நகைச்சுவை சேர
தினம் காணும் வேளை 
தன் மனைவியுடன் சேர்ந்து தம்பியை கிண்டலுடன் பேச கலகலப்பு தான்...



துவண்ட நேரத்தில் 
தவறை சுட்டிக் காட்டி 
தன்னுடன் பழகும் தோழி 
துயரை துடைத்த
தோழமையின் தூய்மை யுவி–ரசிகா நட்பு


காலம் காயப்படுத்தினாலும் காதலைக் களவாடவில்லை.
காணாமல் போன சர்வா கனவில் ரசிகா உடன் காதல் நினைவில் என்றும் கரைந்து இருக்க....


காத்திருந்த இதயங்கள் காலம் கடந்தும் கலந்தபோதும்
காயங்கள் கரைந்து காதல் கவிதையாய் மலர்ந்தது....

 
அசைத்து இசைத்தது வலக்கரம் தான்
அவளின் பாடலில் 
ரசித்து மயங்கியது
சர்வாவின் இதயம் தான்...

காவியம் போல கசிந்து உருகிய காதல்
காலங்கடந்தும் மனங்களில் ஒலிக்கும் முத்த சத்தம்...
"நிலா முற்றத்தில் முத்தம்"
👏 1
💬 4 Replies
Pavithra Narayanan Admin 4 weeks ago

உங்களுக்குப் கதைப் பிடித்ததில் மகிழ்ச்சி 😍😍😍😍

❤️ 1
more...
Mrs Beena loganathan Reader 4 weeks ago

Thanks ma 💐

❤️ 1
more...
Srichitra Reader 4 weeks ago

Super review 

❤️ 1
more...
Mrs Beena loganathan Reader 4 weeks ago

Thanks Ma 💐🤩

❤️ 1
more...
💬 Leave a Reply
Log in to leave a reply.

🔗 Insert Link

Scroll to Top