Pavithra Narayanan - Literary Image 129
Pavithra Narayanan - Literary Image 129
Home Book Reviews நலமுடன் காதல்

நலமுடன் காதல்

✍️ பவித்ரா நாராயணன் ★★★★★
#1
நலமுடன் காதல்....

நண்பியின் நாவிலே
நிறைந்திருந்த நேசத்தை
நெஞ்சார நம்பியவள்
நாணம் மறந்து
நெருங்கினாள் காதலிடம்...

நேசம் நதியெனப் பெருக
நெறிகள் நொறுங்கின
நியாயம் நினைத்த பெற்றோர்
நிராகரிக்க
நிழலாய் நகர்ந்தது
நிம்மதியான வாழ்க்கை...

நெடுநாள் நெடுந்தூரம்
நொடிகள் நரகமாய்
நினைவுகள் நெஞ்சினுள்
நெருப்பாய் நின்றன...

நவமாத நெகிழ்வின்
நற்செய்தியைக் கூட
நேரில் நுகர முடியாமல்
நொந்து நின்றான்
நேசத்தின் நாயகன்...

நியதி நினைத்த
நிகழ்வொன்றில்
நொடியில் நேர்ந்த
நெருக்கடி வழியே
நீங்கிய இரு மனங்கள்
நெருங்கின மீண்டும்...

நெஞ்சின் நொறுக்கங்கள்
நேசத்தின் நறுமணத்தில்
நீராய் நெகிழ்ந்தன....

நம்பிக்கை நிமிர்ந்தது
நிம்மதி நிலைத்தது...

நிழலாய் நழுவிய காதல்
நித்தமும் நெஞ்சில் நிலைத்து
நல்வாழ்வின் 
நந்தவனத்தில்
நகைச்சுவையாய் 
நிறைவாக மலர்ந்தது...

நேசம் நெஞ்சை வென்றால்
நியதியும் நமக்கே துணை
நழுவிச் சென்ற காதலும்
நலமுடன் மீளும் ஒருநாள்....

நலமுடன் காதல் வாழ்க....

நல்வாழ்த்துக்கள்....📚🍫💌🌷👌🏻❤️🔥💔❤️‍🩹❣️👌🏻✍🏻✍🏻


❤️ 3 👏 1
💬 3 Replies
Srichitra Reader 2 weeks ago

Nice review.

❤️ 2
more...
Mrs Beena loganathan Reader 2 weeks ago

Thanks ma

Anuradha GRSR Reader 1 week ago

மீண்டும் ஒரு முறை படித்து முடித்தேன்…

சௌ…ஜனா அம்மா ரொம்ப பிடிக்கும்…
மலர் பேச்சில் இருக்கும் நிமிர்வு…தெளிவு…அருமை…
India     Pakistan…சண்டையும் பேச்சும் ultimate…
ஆகஸ்ட் மாதம் புதிய கதை க்கு waiting…All the best dear பவிமா…
💬 Leave a Reply
Log in to leave a reply.

🔗 Insert Link

Scroll to Top