Sep 24, 2026 · 11:12 am
#1
#திருமதிஅப்சரஸ்பீனா_லோகநாதன்
#கவிக்குயிலின்_கவி_விமர்சனம்
#பவித்ரா நாராயணன்
#காளிதாசன்_காதல்_காண...
கார்த்தி தாசன் இந்த (காதல்) காளிதாசன்… ❤️
கட்சி எதிரியாகக் காளிதாசன் நின்றாலும்
கார்த்தாயினி மனதைக் காயப்படுத்தவில்லை…
கண்ணுக்குத் தெரியாத காரணமொன்றால்
கார்த்தாயினி அவனுடன்
கடத்தல் இல்லாமல்
கட்டாயத்தின் பேரில்
காளிதாசனுடன் செல்ல
கட்டுப்பாடு இழந்த மனம்
கலங்கித் தவித்தது…
குடும்பமே பெரிதென்று
கல்யாணத்திற்கு
கட்டாயப்படுத்திய அப்பா–அண்ணன்
கல்யாணம் என்ற பெயரில்
கார்த்தாயினியின் சம்மதத்தை கேட்காமல்
கட்டாயப்படுத்த
கடைசி நொடியில் காளிதாசன் வந்து
காப்பாற்றிய அந்த நொடி
காதலாக கைப்பிடித்த
கார்த்தியின் நம்பிக்கை
காலத்திற்கும் அழியாதது!
கார்த்தாயினி
கண்ணீரைக் கண்டவன்
காதலை மட்டும் காணவில்லை…
கண்ணியத்தோடு வாழ வேண்டிய
ஒரு பெண்ணின் உரிமையை, உறுதியை
கண்டான்.
கல்யாணம் முடிந்த பின்னும்
கட்சி, கொள்கை என்று
காளிதாசன் சுற்றிக்கொண்டிருக்க
காதல் மனைவியோ
காலியான வீட்டின் அமைதியில்
கண்ணீரில் தனிமையைத் தழுவித் தவித்தாள்…
காட்டில் தனிக்காட்டு ராஜாவாய் வாழ்ந்தவன்
கணவன் என்ற பொறுப்பில் மட்டும் தவறிட
கண்ணியமான மனிதன்
கடமையை உணர்ந்து
காதல் தாசன்
கவிதை படிக்கும்
கார்த்தி தாசன்
கார்த்தியின்
காளிதாசன் ஆஹா!
காதல் என்பது
கண்ணால் பார்ப்பதல்ல…
கற்பனையால் வாழ்வதுமல்ல…
காத்திருந்து, புரிந்து,
கண்ணியத்தோடு நடத்துவதுதான்....
கார்த்தாயினியைச் சரிபாதியாகக் கண்டவன்
காதல் மனைவியின் மனதை
கண்ணாடிபோல் வாசித்தவன்…
காயப்படுத்தாமல் காத்தவன்
கட்டுப்படுத்தாமல் காதலித்தவன்
கைவிடாமல் நம்பிக்கை கொடுத்தவன்
காளிதாசன்!
காதல் என்றால்
கண்ணதாசன் பாடல் போல
காலம் கடந்தும் இனிமை தர வேண்டும்…
கார்த்தாயினி அல்ல எந்தப் கன்னிப்பெண்ணாக இருந்தாலும்
காதல் உண்மையாக இருந்தால்
காலம் ( வயது) கடந்தாலும்
கல்யாணம் இனிக்கும் காதலாகவே இருக்கும்....
காதல் காப்பது உடலை அல்ல…
காதலித்தவளின் மனதை...
காதல் கவிதை கார்த்தியுடன் படித்த காளிதாசனின் ஹைக்கூ கவிதை வர்த்தினி
தந்தை போலவே
சிந்திக்கும் சிந்தனை அழகு கவிதை❤️
வாழ்க வளத்துடன் 💐 மா
Super review
நன்றி மா 💐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻