Pavithra Narayanan - Literary Image 129
Pavithra Narayanan - Literary Image 129
Episode 1

காளிதாசன் 1

“காதும்மா, சீக்கிரமே வந்துடு. கண்டதையும் பூசி முகத்தைக் கெடுத்துக்காத” என்றார் விசாலாட்சி.

“ம்மா, அதெல்லாம் நல்ல ப்ராக்டக்ட்ஸ்தான். நம்ம அண்ணிக்குப் பண்ணின அதே இடம்தான். டெஸ்ட் மேக் அப் ஓகேன்னா அதை ஃபைனல் பண்ணிடுவேன். நீ டென்ஷன் ஆகாத” என்றாள் புன்னகை முகமாய் கார்த்தியாயினி.

“காது, நீ இப்படியே பேசிட்டு இருக்காம, சீக்கிரம் முடிச்சிட்டு வா. உங்கண்ணா வந்தா உன்னை தனியா அனுப்பினதுக்குத் திட்டுவார் என்னை” என்றாள் அவளின் அண்ணி கயல்விழி.

“அண்ணி, அண்ணாக்கு நான் மெசெஜ் பண்ணிட்டேன். உங்களைத் திட்ட மாட்டார். ஆறு மாசத்துல இன்னொரு வீட்டுக்குத் துரத்தி விட போறீங்க, இன்னும் தனியா அனுப்ப பயப்படுறீங்க. உங்க பாச பாயாசத்துல எனக்கு சுகரே வந்துடும் போல” என்றாள் கிண்டலாக.

“ஷ், என்ன பேச்சு துரத்தி விடுறதுன்னு? இப்படி பேசாத காதும்மா” என்று அதட்டினார் விசாலாட்சி.

“சரி விசாலம், கோச்சுக்காத. நான் போய்ட்டு வந்துடுறேன்” என்று சொல்லி போகும் மகள் வர மாட்டாள் என்று தெரிந்திருந்தால் விசாலாட்சி நிச்சயம் அனுப்பி இருக்க மாட்டார்.

கார்த்தியாயினி ராஜரத்தினம், விசாலாட்சியின் செல்ல மகள். மகள் என்பதை விடவும் ராஜரத்தினத்தின் ராஜகுமாரி அவள்.

பதினைந்து நாளில் கார்த்தியாயினிக்கு நிச்சயம். வீட்டில் பார்த்த மாப்பிள்ளைதான். எல்லாமே கார்த்திக்கு வீட்டில் பார்ப்பதுதான், அவள் விரும்பினாலும் வீட்டினர் மறுப்பு சொல்ல மாட்டார்கள். ஆனாலும், அவள் எதையும் அடம் பிடித்தெல்லாம் கேட்க மாட்டாள். அவ்வளவு பாசம், பிணைப்பு குடும்பத்தினருடன்.

ராஜரத்தினம் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. அவர் மகன் செல்வரத்தினம் அப்பாவின் அரசியல் வாரிசு. அடுத்து கார்த்தியாயினி, எம்பிஏ முடித்து விட்டு அப்பாவின் பிஸ்னஸ் பார்க்கிறாள். அவளுக்குத் துணையாக கார்த்தியின் தம்பி ராஜீவ்ரத்தினம். அண்ணனுக்குத் திருமணமாகி பத்து வயதில் மகன் இருக்கிறான். அண்ணனுக்கும் தம்பி, தங்கைக்கும் வயது இடைவெளி அதிகம்.

கார்த்தியாயினிக்கு இருபத்தேழு வயது. ஜாதகம் சரியில்லாமல் திருமணம் தள்ளிப் போயிருக்க, இப்போது திருப்தியாக ஒரு வரன். இன்று மேக் அப் டெஸ்ட் செய்து விடலாம் என்று பிரபல மாலில் இருக்கும் பார்லருக்குச் சென்றாள் பெண்.

அக்கா கிளம்புவதைப் பார்த்த ராஜீவ், “காது, நான் கூட வரவா?” என்றான்.

“டேய்! உங்க தொல்லைத் தாங்க முடியல. நீ நான் சொன்ன வேலையை முடி. ராயல்ஸ்க்குப் போய் அக்கவுன்ட்ஸ் எல்லாம் முடிச்சு வை. அப்புறம் எங்கேஜ்மெண்ட் முடிஞ்சா நான் நவீன் கூட டைம் ஸ்பெண்ட் பண்ண ஆரம்பிச்சிடுவேன். அக்கா சொக்கான்னு உன்னையெல்லாம் கண்டுக்க மாட்டேன்” என்றாள் சிரிப்புடன்.

“பார்த்தீங்களா அண்ணி, ஒரு பாதுகாப்பா கூட வரேன் சொல்றதுக்கு என்ன பேசுறா இவ?” என்று அண்ணியிடம் ராஜீவ் சொல்ல,

“இந்த பாதுகாப்பு, பந்தோபஸ்து எல்லாம் வேண்டாம்னுதான் நான் அழகா பிஸ்னஸ் மேனைக் கல்யாணம் செஞ்சுக்க போறேன்” என்றாள் கார்த்தியாயினி.

அப்போது பார்த்து செல்வரத்தினம் வீடு வர, “என்ன காதும்மா, தனியாவா போற?” என்று தங்கையையும் தம்பியையும் பார்க்க,

“வேறன்ன செய்றதுண்ணா? நான் என்ன அம்மா மாதிரி எம்.எல்.ஏ சம்சாரமா? இல்லை அண்ணி மாதிரி நாளையை எம்.எல்.ஏவோட ஆளா? ஏதோ எனக்கேத்த எள்ளூருண்டை நானுண்டு என் காருண்டுன்னு போக வேண்டியதுதான் அண்ணா” என்று பாவமாய் சொல்லவும் கயல்விழியும் ராஜீவும் முறைத்தனர்.

செல்வரத்தினம், “அப்போ உனக்கு ஒரு மந்திரி மாப்பிள்ளைப் பார்த்துடுவோமா? இல்லை நம்ம மாப்பிள்ளையை கட்சியில சேர சொல்லிடுவோமா?” என்று தங்கையிடம் கேட்டான்.

“என்ன பேசுற செல்வா நீ? என்று மகனை அதட்டிவிட்டு,

“இப்படியே கதைப் பேசிட்டு எப்போ போக போற பாப்பா நீ?” என்று மகளையும் விசாலாட்சித் திட்டவும்,

“கிளம்பிட்டேன் விசாலம்” என்று கத்தியவள் தன் காரை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டாள்.

கார்த்தியாயினி வீட்டை விட்டு கிளம்பவும் அவளைப் பின் தொடர்ந்த காரில் இருந்த வாலி, “அண்ணா, அவங்க கார் கிளம்பிடுச்சு” என்றான்.

“ஓகே, அவங்களை ஃபாலோ பண்ணிட்டே இரு. எங்க போறாங்க லோகேஷன் ஷேர் பண்ணு, நான் வந்துடுறேன் வாலி” என்றான் மற்றவன்.

கார்த்தியாயினி அந்த ப்ரமாண்டமான மாலில் இருந்த பார்லருக்குப் போனவள் தனக்குப் பிடித்தமானதை சொல்லி, டெஸ்ட் மேக் அப் செய்து கொண்டு, எந்த மாதிரி ஹேர் ஸ்டைல் வேண்டும் என்று எல்லாம் பார்த்துக்கொண்டாள். இடையில் நவீனிடம் இருந்து போன் வர, “சொல்லுங்க நவீன்” என்றாள்.

“என்ன காது? வாட் டூயிங்? நைட் டின்னர் போகலாமா?” என்று அவன் ஆசையாய்க் கேட்க,

“இன்னிக்கு முடியாது நவீன், நான் பார்லர் வந்திருக்கேன். எங்கேஜ்மெண்ட்க்கு மேக் அப், ஹேர் ஸ்டைல் எல்லாம் பார்க்கணும். நாளைக்கு ஓகேவா?” என்று கேட்க,

“ஓகே! டன். நீயே டைமிங் சொல்லு. டேக் கேர்” என்று சொல்லி அவன் வைத்துவிட இவள் முகத்தில் புன்னகை. நவீன் அவளின் அப்பா பார்த்த பையன்தான். இவளும் சில இடங்களில், பிஸ்னஸ் பார்ட்டியில் பார்த்திருக்கிறாள் மரியாதையாகப் பேசுவான். அப்பா வந்து அவன் மாப்பிள்ளை என்று சொல்லி பிடித்திருக்கிறதா என்று கேட்க,

“ப்பா, உங்க முடிவு எப்பவும் சரியா இருக்கும்” என்றவள் உடனே சம்மதம் சொல்லி விட, நவீனுடன் நேரில் ஒரு முறை பேசியிருக்க, அவனும் நல்ல ப்ரண்ட்லி டைப். பெரிதாய் எந்தக் குறையும் இல்லை. மேக் அப் எல்லாம் முடித்து அவள் வெளியே வர,

“அண்ணா, அவங்க வெளியே வந்துட்டாங்க. இப்போ டிரஸ் எடுக்கப் போறாங்க, மேக்ஸ்க்கு வாங்க” என்றான்.

“நீயும் வா வாலி” என்று சொல்லி அவனும் கார்த்தியின் முன் போய் நின்றான்.

“ஹலோ மிஸ். கார்த்தியாயினி ராஜரத்னம்” என்று முன்னால் வந்து நின்றவனைக் கார்த்திக்கு அடையாளம் தெரியவில்லை.

“ஹாய்! நீங்க?” என்று அவள் யோசிக்க,

“காளிதாஸன்!” என்றான்.

‘அட! காவியக் காலத்து நேம்’ என்று மனம் சொல்ல மங்கை அதனை வெளியே சொல்லாமல்,

“ஸோ?” என்றாள் கேள்வியாக. அவள் அப்பா, அண்ணனைப் போல் அதிகாரக் குரல் இல்லை, ஆளுமையான குரல். அதே நேரம் சினேகம் நிரம்பிய ஒரு பாவனை.

இப்படி ஆராய்ந்தாலும் அவனின் காரியம் முக்கியமென உணர்ந்த காளிதாஸன், “ஜஸ்ட் ஃபைவ் மினிட்ஸ், உங்களோட பேசணும்” என்றான்.

கார்த்திக்கு இவன் யார், எதற்கு என்னிடம் பேச வேண்டும் என்கிறான் என யோசனைப் போனது.

“மிஸ்டர். காளிதாஸன், நீங்க யார்னு எனக்குத் தெரியாது. ஏன் பேசணும்னு கொஞ்சம் சொல்றீங்களா?” என்று அவள் பொறுமையாகவே கேட்க,

அவள் முகத்தைப் பார்த்தவன், “ஓஹ், யா! நானும் எம்.எல்.ஏ தான். ஆனா, எதிர்க்கட்சி” என்றதும் ஒரு நொடி திகைத்தவள்,

“எதிர்க்கட்சிக்காரங்களுக்கு எங்கிட்ட என்ன பேசணும்? அண்ட் நான் கட்சியில இல்லை” என்றாள் கார்த்தி. காளிதாசனைப் பார்க்க நிச்சயம் ஒரு அரசியல்வாதி தோற்றம் இல்லை, வெள்ளை வேட்டி சட்டையில்தான் அவள் அண்ணன் சுற்றுவான். இவனோ ஜீன்ஸ், ஒரு வெள்ளை டீஷர்ட் என்று ஒரு சராசரி இளைஞனாக இருந்தான்.

“மேம், நீங்க யோசிக்கிறது ரைட்தான். பட் இப்படி ஒரு பொது இடத்துல வச்சுப் பேசுறேன், என்னோட மோடிவ் தப்பில்லன்னு நீங்க புரிஞ்சிப்பீங்க நினைக்கிறேன். ஃபுட் கோர்ட்ல உட்கார்ந்து பேசுவோமா? உங்களுக்கு நம்பிக்கை இல்லைன்னா இதோ என்னோட ஐடி” என்று அவன் கார்டை நீட்ட, அதைப் பார்த்தவள் கூகுளிலும் ஒரு முறை செக் செய்து கொண்டாள்.

சரி, என்னதான் பேசுகிறான் என்று பார்ப்போமே என நினைத்து,

“வாங்க” என்று சொல்லி அவள் முன்னால் நடந்து ஃபுட் கோர்ட்டில் சென்று ஆட்களுக்கு நடுவே ஒரு டேபிளில் உட்கார்ந்து கொள்ள வாலி இதனைப் பார்த்தவன்,

“ண்ணா, இந்த பொண்ணு..” என்றவனை முறைத்தான் காளிதாஸன்.

“சாரிண்ணா, இவங்க நமக்கு ஹெல்ப் செய்வாங்க நினைக்கிறீங்களா?” என்றான் சந்தேகமாக.

“பாருங்க எவ்வளவு உஷாரா ஆளுங்க இருக்க இடமா பார்த்து உட்கார்ந்திருங்காங்க. நம்மை நம்புவாங்களா?” என்ற வாலியிடம்,

“ஹெல்ப் செய்யலனா செய்ய வைப்போம்டா. இந்த விஷயத்துல  நான் பேக் அடிக்கிறதா இல்லை. ஏன் டா இவங்கதான் ராஜீவ் கூட சேர்ந்து அவங்க கம்பெனியைப் பார்க்குறாங்க. இந்த அளவு கூட ஜாக்கிரதை இல்லைன்னா எப்படி?” என்ற காளிதாசன் கார்த்தியின் முன் போய் உட்கார, அவனருகே வந்து உட்கார்ந்தான் வாலி.

வாலியை இவள் கேள்வியாகப் பார்க்க,”என்னோட ஆள்தான்” என்று சொல்ல,

“ஓகே மிஸ்டர் என்ன விஷயம் சொல்லுங்க” என்றாள் நேரடியாக.

“நீங்க எனக்கு ஒரு ஹெல்ப் செய்யணும், அதுவும் உங்கப்பாவுக்கும் அண்ணாவுக்கும் எதிரா” என்று காளிதாஸன் நிறுத்த, அவனை முறைத்தாள் கார்த்தி.

“ஹவ் டேர்? என் அப்பாவுக்கும் அண்ணாவுக்கும் எதிரா என்னை உதவி செய்ய சொல்றீங்களா?” என்றாள் கோபத்துடன்.

மேல் மூச்சு வாங்கியது. என்னை என் அப்பாவுக்கு எதிராக வேலை செய்ய சொல்வானா? எப்படி இவனுக்கு இப்படி எண்ணம் வந்தது என்று எண்ணி எரிச்சலானாள்.

“மேம், நாங்க சொல்ற விஷயத்தைக் கேட்டா நீங்க நிச்சயம் ஹெல்ப் பண்ணுவீங்க” என்று வாலி பேச, அவனை நக்கலாய்ப் பார்த்தவள்,

“வாட்?  நிச்சயமாவா? ஸோ ஃபன்னி” என்று பல்லைக் கடித்தவள்,

“என்னை ஜட்ஜ் பண்றதோ எஸ்டிமேட் பண்றதோ வேண்டாம் சொல்லிட்டேன். எவ்வளவு திமிர் இருந்தா நான் நிச்சயம் செய்வேன் சொல்ற நீ?” என்று வாலியிடம் மரியாதையை விட்டு கார்த்திப் பேச, “கார்த்தியாயினி! மரியாதை முக்கியம்” என்றான் காளிதாஸன்.

“ஓஹ்! அப்படி மரியாதை முக்கியம்னா என்னை டிஸ்டர்ப் செய்யாம போங்க இரண்டு பேரும்” என்றவள் பின் எரிச்சலாக எழுந்து கொண்டு,

“என் மூட் ஸ்பாயில் பண்ணிட்டாங்க” என்று முணுமுணுத்தாள். அவள் எழவும், “கார்த்தி மேடம்,  நாங்க சொல்றதைக் கேட்டுட்டு முடிவெடுங்க” என்றான் காளிதாஸன்.

“அவசியமில்லை” என்றாள்.

“சொல்றதைக் கேட்டா அழைச்சுட்டுப் போவேன் இல்லை..” என்று இடை நிறுத்த,

“இல்லைனா?” என்றாள் அவனை நேர்ப்பார்வைப் பார்த்து.

“கடத்திட்டுப் போய்டுவேன்” என்றதும் ஆவேசம் கொண்டவள்,

“ஹௌவ் டேர்?” என்று நகரப் பார்க்க,

“யெஸ், ஐ டேர் டூ டூ இட்” என்றான் காளிதாசன்.

அடுத்த ஒரு மணி நேரத்தில் கார்த்தியாயினி கடத்தப்பட்ட செய்தி அவளின் குடும்பத்தினருக்குப் போக, அதிர்ந்து போயினர்.

_________________________________________

SURPRISEEEEEEEEEEEEEEE!!!!! 

TREATTTTTTTTTTTTTTTTT!!!!!!!!!!!!!!!!!!!

okayyy tell me யாருக்கு இது முதல்முறை? யார் மீண்டும் வாசிக்கிறீங்க?? எனக்கு ரொம்பப் பிடிச்ச என்னோட கதையில இதுவும் ஒன்னு! நானே எதிர்ப்பார்க்காத வகையில இந்த கதை நிறைய பேருக்குப் பிடிக்கும். so tell me guys!! 

இனி தினமும் காலை காளிதாசன் காதலோடு!

✅ End of Episode 1
How did you feel about this episode?
❤️ 7 more...

You must Log in or Register to react here

💬 6 Replies
Sathya Velusamy Reader 2 weeks ago

அடடே அங்கிள் தான் அந்த சர்ப்ரைஸ் ஆ🤩🤩

❤️ 1 more...
Srichitra Reader 2 weeks ago

Goodmorning.   எனக்கும் ரொம்ப ரொம்ப பிடித்த கதை.

❤️ 1 more...
Mrs Beena loganathan Reader 1 week ago

My favourite, Alexa and songs ❤️🔥😘😘😘😘👏🏻👏🏻👏🏻👍🏻💐💐💐🌄🌄🍫🍫🌈🌈🌹🌺☕😀

❤️ 1 more...
Vidhya s Reader 1 week ago

சூப்பர் எனக்கு உங்க கதையில இது தா most favourite.. Tamil novel writer தளத்துல இருக்கப்போ எதாவது feel good ah படிக்க தோனுச்சுனா இத தா படிப்பேன்😍

❤️ 1 more...

Thank you. More feel good ones to come. Will come with episode tmr sis. 

❤️ 1 more...
Kavi Natarajan Reader 23 hours ago

💞💞💞💞💞💞👌👌👌👌👌

Log in or Register to reply

🔗 Insert Link

Scroll to Top