Episode 8

இடைவெளி 8

ராமின் மகிழ்வை வார்த்தையால் அடக்க முடியவில்லை. எல்லாவற்றிலும் மகிழும் மனமும் குணமும் உடையவன் என்றாலும் கூட இந்த இனிய அதிர்வில் அகம் குதூகலமாகிவிட்டது, குழந்தை போலாகிவிட்டது!

எங்கோ பெய்யும் மழையில் நனையும் மனம் போல் அவன் மனம் அந்த நேரம் இருந்தது! முகத்தில் பூத்திருந்த அந்த புன்னகையை மூடிவைக்க முடியவில்லை. சாதனா நினைவில் வைத்து அவன் பிறந்த நாளை சொன்னதிலே அவன் உலகின் உச்சியில் இருந்தான் என்றால் இப்போது பிரபஞ்சத்தின் பெரிய உச்சியில் இருந்தான் உள்ளத்தளவில்.

சாதனாவுக்கு அதிர்வெல்லாம் இல்லை, அவர்கள் வீட்டு மாப்பிள்ளை ஆன பின் வரும் முதல் பிறந்தநாள். கண்டிப்பாக அவள் சகோதரர்கள் எதாவது செய்வார்கள் என்று தெரியும். ஆனால்,  நேரில் வந்து நிற்பார்கள் என்று கொஞ்சம் எதிர்ப்பார்க்கவில்லை அவள்.

“டேய்! வாட் எ சர்ப்பரைஸ்! ரொம்ப தேங்க்ஸ்டா” என்று மாதவனை ராம் கட்டிக்கொள்ள,

“ஹாஹா, ஹாப்பி பொறந்த நாள் மாம்ஸ்” என்றான் மாதவன்.

“ஹலோ, மாமா! நானும் இருக்கேன்” என்றதும் செல்வாவைப் பார்த்து புன்னகைத்த ராம்

“தேங்க்ஸ்டா” என்றான் அவனிடமும். அவனை பார்க்க, அவன் முகத்தில் இருந்த சந்தோஷத்தைப் பார்க்கவே அவர்கள் இவ்வளவு தூரம் வந்தது. அது நிறைவேறியதில் அவர்களுக்கும் சந்தோஷம்.

“சரி கேக் வெட்டிடலாம்” என்று செல்வா சொல்ல, ராம் சாதனா இருந்த அறைக்குப் பக்கத்து அறையைத்தான் அவர்கள் புக் செய்திருந்தார்கள். அங்கு சென்று  ராம் கேக் வெட்டினான். முதலில் சாதனாவுக்கு அவன் ஊட்ட, எல்லாவற்றையும் புகைப்படமாக எடுத்தான் செல்வா.

“உதய் இருந்திருந்தா நல்லா இருந்திருக்குமில்ல, அவனை ஏண்டா விட்டு வந்தீங்க?” என்று ராம் கேட்க

“அவனுக்கு எக்ஸாம்டா, நெக்ஸ்ட் பர்த்டேக்கு அவன் இருக்கப் போறான். ஆனாலும்,  டா நீ எங்களையே இடைஞ்சல்னு  நினைச்சுப்ப பார்த்தா, இன்னும் அவனைக் கேக்கிற, நீ ரொம்ப நல்லவன் மாப்ள” என்றான் மாதவன் கிண்டலாக.

அவர்கள் பேசிக்கொண்டிருக்க, சாதனா “சரி நீங்க பேசிட்டு வாங்க,  நான் தூங்க போறேன்” என்றவள் அறைக்குப் போய்விட, இவர்கள் ஆர்ப்பாட்டமாகப் பேசி சிரித்தார்கள்.

சாதனா சென்றதும் “சரக்கு அடிப்போமா?” என்று மாதவன் கேட்க

“குடிக்கார பசங்க கூட எல்லாம் சேரக்கூடாதுனு என் பொண்டாட்டி சொல்லியிருக்கா” என்றான் ராம்.

“இன்னிக்கு உங்க பார்ட்டி! ஸோ குடிச்சிக்கிறோம்” செல்வா சொல்ல

“எவண்டா காரணத்தோட குடிக்கிறீங்க? குடிக்க காரணம், இதான் லாஸ்ட்! மவனே மாதவா கல்யாணம் முன்னாடி இதான் நீ கடைசியா குடிக்கிறது, இனி நோ. செல்வா விட்டிடுடா நீயும்!” என்று அவனையும் அதட்டினான்.

இங்கு இவர்கள் பேச சாதனா தங்களின் நெருக்கமற்ற இடைவெளியைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தாள். ராம் மீது இன்னும் அன்பும் அக்கறையும் தான் செலுத்தியிருக்க வேண்டும், செலுத்த வேண்டும் என்ற திசையில் அவள் எண்ணங்கள் பயணித்தன. இன்று தம்பிகளைப் பார்த்ததும் அவன் முகத்தில் இருந்த மலர்ச்சி தன்னால் வர வேண்டும் என்று வேண்டியது அவள் மனம்.

செல்வாவும் மாதவனும் குடிக்க, ராம் “இதான் லாஸ்ட்! இல்லை பாட்டிலை மண்டையில உடைப்பேன்” என்று சொல்லிவிட்டு சாதனாவைப் பார்க்க அவர்கள் அறைக்கு வந்தான். கீ கார்ட் இவனிடம் இருக்க, ராம் மெல்ல கதவைத் திறந்து சத்தமில்லாமல் மெத்தையில் வந்து படுத்துக்கொண்டான்.

“என்ன பார்ட்டி ஓவரா?” என்ற சாதனாவின் குரலில் சிரிப்போடு திரும்பியவன், “நீ இன்னும் தூங்கலையா சது?” என்றான் அவளிடம்.

“தூங்காம இருக்கிறதாலதானே பேசுறேன்” என்ற சாதனாவின் பதிலுக்கு

“ஹாஹா!” என்று ராமிடம் இருந்து சிரிப்பு மட்டுமே. அவள் வீட்டில் ஆண்கள் எல்லோரும் சிரிப்பார்கள்தான். செல்வா மட்டுமே கொஞ்சம் அடக்கி சிரிப்பான், உதய் சிறுவயது என்பதால்  நன்றாகவே வாய்விட்டு சிரிப்பான், மாதவன் முன்பு அப்படி இருந்தவன் இப்போது அவன் நண்பர்களுடன் இருந்தால் மட்டும் நன்றாக சிரிப்பான். ஆனால்,  இந்த பரசுராம் எப்போது சிரித்தாலும் அந்த சிரிப்பில் தொலையவே தோன்றும்.

கல்லூரி காலத்தில் கூட ராமின் சிரிப்பை பார்த்திருக்கிறாள். ஆனால்,  அந்த வயதில் இளமையின் தொடக்கத்தில் நிறைய பேர் அப்படித்தானே? அதனால் பெரிதாக அது பற்றி அவனிடம் சொன்னதில்லை, ஆனால்,  அவன் யாரைப் பற்றியும் கவலையின்றி களித்திருக்கும்  நிமிடங்கள் மிகவும் பிடிக்கும்.  இப்போது கணவனான பின் இன்னும் பிடிக்கிறது.

மனது ரசிக்கிறது! மையல் நீட்சி கொள்கிறது!! அவன் சொன்ன காதல் ஆட்சி செய்கிறது!!!

“எப்பவுமே  நீங்க சிரிச்சிட்டே இருக்கனும் ராம்” என்று இன்று அவனிடம் சொல்லியே விட்டாள்.

“உங்க கூட எல்லாம் இருந்தா நான் இப்படித்தான் இருப்பேன்” என்றான் இன்னும் மாறாத அதே புன்னகையுடன். முகம் முழுதும் பரவி இருக்கும் அந்த புன்னகையில் பாவையின் அகம் அவன்பால் அளவின்றி சாய்ந்தது.

“ஐ அம் எ பிக் ஃபேன் ஆஃப் யுவர் ஸ்மைல்!” என்றாள் சாதனா புன்னகையுடன்

அவனருகே அவள் நெருங்கிப் படுத்து “சொல்லுங்க எப்படி போச்சு உங்க பாய்ஸ் பார்ட்டி?” என்று மீண்டும் கேட்டாள்.

‘இடைவெளிகள் தான் நெருக்கத்தை தீர்மானிக்கின்றன எனினும் நெருக்கமற்ற இடைவெளிகள் பயனற்றவை’ என்று யுகபாரதியின் கவிதை ஒன்று இருக்கிறது. சாதனாவின் மன நிலை இப்போது அப்படித்தான், இருவருமே ஒரு இடைவெளி விட்டே திருமணமான ஆறு மாதங்களில் இருந்திருக்க, அதனால் பயனில்லை என்ற நிலைதான்!

ஒரு நேரம், அதுவும் திருமணமான புதிதில் அவன் கடைப்பிடித்த இடைவெளியினால் இவள் மன வெளியில் அவன் மீதான மாண்பும் மரியாதையும் அதிகரித்தது. அதே இடைவெளி நீண்டு போக, அதனால் விளைந்த பிரச்சனை, அதைத் தொடர்ந்த இரு மாத பிரிவு எல்லாம் சாதனாவை அவள் குடும்ப வாழ்க்கைக் குறித்து யோசிக்க வைத்தது. தன்னை அவன் பார்த்த அளவு அவனை நான் பார்க்கவில்லை என்ற குற்றவுணர்வும் கூட அவளுக்கு இருந்தது. அதனால் அவன் தள்ளி இருந்தாலும் கூட தன்னுடன் இருக்கும்படி பார்த்துக்கொண்டாள்.

சாதனா அவனை அணைத்திருக்க, ராமும் அவள் தோள்சுற்றி கைப்போட்டவன் “சும்மா அவங்க பாசமலரை நல்லா பார்த்துக்கனும் உன் தம்பிங்க எனக்கு சொன்னாங்க, பார்ட்டி எல்லாம் இல்ல” என்றான் ராம்.

“சிரிப்பு சத்தமும் சியர்ஸ் சத்தமும் எனக்கு நல்லா கேட்டது, உங்க ப்ரண்டை விட்டுக்கொடுக்க மாட்டீங்களே?” என்று சாதனா முறைத்தாள்.

“என் பர்த்டேனு காரணம் சொல்றானுங்க, அடுத்ததடவை கூடாதுனு சொல்லிட்டேன் மா”

“மீராவுக்குத் தெரிஞ்சா கோவப்படுவா ராம். நீங்கதான் மாதவனுக்கு சொல்லணும்” என்ற சாதனா சட்டென்று அந்த பேச்சை விட்டாள்.

“சாரி ராம், நானும் நாளைக்குக் கேக் கட் பண்ண ப்ளான் வைச்சிருந்தேன், நம்ம இரண்டு பேரும் இன்னிக்கு ஒன்னாவே இருந்தோம், உங்களுக்குத் தெரியாம சர்ப்பரைஸ் பண்ண எனக்குத் தெரியல” என்றபோது ‘உனக்காக என்னால் செய்ய முடியவில்லை’ என்ற வருத்தம் வஞ்சியின் வார்த்தைகளில் வெளிப்பட, அதனை புரிந்துகொண்டான் ராம்.

“சதும்மா, நீ எனக்கு விஷ் பண்ணினதே எனக்கு அவ்வளவு சந்தோஷம். தி பெஸ்ட் பர்த்டேனு சொல்லலாம்” என்று அதே புன்னகையில் பூரித்த  முகத்துடன் சொன்னவன் மென் குரலில் மையல் முழுவதும் நிறைந்த பாவனையில் சாதனாவின் செவியருகே

“அதை விட உன் ஹக், என் மனைவிகிட்ட எனக்குக் கிடைச்ச முதல் அணைப்பு… தட் வாஸ் ஸ்பெஷல் மொமண்ட்! எனக்கு அது ரொம்ப தேவையா இருந்தது! அப்புறம் மாதவனும் செல்வாவும் வந்தது இன்னும் சந்தோஷம். அவனுங்க ப்ரண்டுனு செஞ்சாங்களோ இல்லை வீட்டு மாப்பிள்ளைனு செஞ்சாங்களோ எனக்காக, நமக்காக இவ்வளவு தூரம் வந்ததே எனக்கு ரொம்ப சந்தோஷம்! ஸோ எம்டி மேடம் ரொம்ப ஃபீல் பண்ண வேண்டாம். நாளைக்கு வேற கேக் வாங்கி கொடு, உண்மையை சொல்லணும்னா எனக்கு கேக்ஸ்னா ரொம்ப இஷ்டம்.” என்றான் அவளை முழுவதுமாக அணைத்தபடி.

அவன் நெஞ்சோடு நெருக்கமாக துஞ்சிய சாதனா, “எனக்குப் பயமா இருக்கு ராம், நம்ம ரிலேஷன்சிப் நினைச்சு. நம்ம ஏன் மத்த கல்யாணமான ஜோடிஸ் மாதிரி இல்லை. இத்தனைக்கும் பிடிச்சுதானே கல்யாணம் செஞ்சோம். நான் ரொம்ப ஹெட் வெயிட்டா இருந்திட்டேனோ, உங்களை நான் கண்டுக்கவே இல்லையோ? எனக்குத் தெரியல. ஆனா நம்ம நார்மல் கப்பிள்ஸ் போல இல்லை. எனக்குப் பொறுமை இல்லை போல, யாராவது நாலே மாசத்துல சண்டைப் போட்டு ஹஸ்பண்ட் விட்டு வருவாங்களா?” என்று சாதனா அவள் மனக்கிலேசத்தை எல்லாம் அவனிடம் இறக்கி வைத்தாள்.

இவ்வளவு நேர தனிமையில் சாதனாவின் மனதின் எண்ணங்கள் எங்கெங்கோ சென்று வந்தன. அவளுக்குத் தன் மீதே கோபம் வந்தது. முன்பு சரியென்று நினைத்துதான் செய்தாள், இப்போதும் அதில் சந்தேகமில்லை. ஆனாலும்,  அவள் வயது உடையவர்கள் எல்லாம் சந்தோஷமாக இருக்க, தான் இல்லையோ என்ற ஏக்கம் வாட்டியது.

அவள் வீட்டில் தாத்தாவையும் சித்தப்பாவையும் தவிர வேறு பெரியவர்கள் இல்லை. அவளால் அவர்களிடம் தன் மன வருத்தங்களை பகிர முடியவில்லை. அதுவும் மூன்று தம்பிகளுக்கு அக்காவாக அவள்  நடக்க, கம்பெனி பொறுப்பேற்ற பின் அதில் கவனம் வைக்க, தோழமை எல்லாம் அவளுக்குப் பெரிதாக இல்லை.

இப்போது யோசிக்க யோசிக்க மனதின் பாரம் ஏறியது. என்ன முன்பென்றால் மனதுள் வைப்பவள் இப்போது அதை ராமிடம் பகிர்ந்து விட்டாள்.

சாதனாவை இன்னும் அணைத்துக்கொண்ட ராம், அவள் கன்னம் வருடி “எனக்குத் தெரிஞ்ச சாதனா எல்லார்கிட்டவும் அவ்வளவு ஈசியா மனசுல உள்ளதை ஷேர் பண்ண மாட்டா. அவளுக்கே அவளைப் பார்த்துக்க தெரியும். அப்படி இருக்க என் சது எங்கிட்ட அவ மனசுல உள்ளதை ஓபனா ஷேர் பண்றதே பெரிய விஷயம். கல்யாணமான இத்தனை மாசத்துல சண்டை தவிர ஓபனா நம்ம பேசுற விஷயம் இதானே சது?” என்று கேட்டான்.

சாதனாவுக்கு ராமின் பார்வையில் தான் எப்போதுமே பிடித்தவளாக தெரிகிறோம் என்பதில் ஒரு சந்தோஷம். அதைத் தாண்டி பெருமை! கூடவே கூடியது அவன் மீதான காதலும்!!

“நான் அப்பா அம்மாவை ரொம்ப மிஸ் பண்றேன் ராம். அக்சுவலி நாங்க ரொம்ப ஹாப்பி ஃபேமிலி, சித்தி இல்லைன்றது மட்டும்தான் எங்களோட கவலை. அதுவும் உதய் அவன் அம்மாவைப் பார்த்ததே இல்லைல, ஷி பாஸ்ட் அவே டுரிங்  டெலிவரி. ஸோ என் அம்மாதான் அவனை வளர்த்தாங்க. எல்லோருக்கும் அவன் செல்லம், ஆனா அம்மா அப்பா ஆக்சிடெண்ட்ல போனதும் தாத்தா, பாட்டி எல்லாருமே ரொம்ப உடைஞ்சு போய்ட்டாங்க. சித்தப்பா அவர் சித்தி போனதுமே ரொம்ப குடிக்க ஆரம்பிச்சார், அவரால அந்த இழப்புல இருந்து வெளிவர முடியவே இல்லை. அதுக்கு அவர் முயற்சி செய்யவும் இல்லை, அவசியம் இருந்தா கூட வந்திருப்பாரோ  தெரியல”

“ஏன்னா அப்பாவும் அம்மாவும் உதய்யை வேறயா பார்க்கல. ஏன் மாதவனை கூட அப்படித்தான். நாங்க நாலு பேரும் எந்த வேறுபாடு இல்லாமதான் வளர்ந்தோம். அம்மா அப்பா போனதும் எனக்கு தனிமை அதிகமாச்சு, வயசான தாத்தா பாட்டி சின்ன தம்பிங்கனு எனக்கும் மாதவனுக்கும் ஒரு ப்ரஷர். அப்புறம் காலேஜ், ஹாப்பியான டேய்ஸ்ல” என்று கேட்டு அவனைப் பார்க்க, அவன் கண்கள் மின்னின.

“ரொம்ப ரொம்ப ஹாப்பியான டேய்ஸ்” என்றான் ராம்.

“ஆனா எனக்கு ப்ரதீப்போட ரிலேஷன்ஷிப் செட் ஆகல, அவனோட எனக்கு ஒத்துப்போகல. வயசுக்கோளாறு போலனு நானே விட்டேன், கொஞ்ச நாள் கஷ்டமா இருந்தது, அப்புறம் அதுவும் கடந்து போயிடுச்சு. அப்புறம் எல்லாம் பிஸீனஸ், ஃபேமிலி.  அப்பா அம்மா இருந்திருந்தா சீக்கிரம் மேரேஜ் செஞ்சிருப்பேனோ தெரியல, இப்ப லேட் டிவெண்டிஸ் வரை தனியா இருந்துட்டு உங்களோட ஒட்டவே முடியலையோனு கவலையா இருக்கு.”

“நெக்ஸ்ட் நீங்க, நம்ம கல்யாணம். பிடிச்சுத்தான் பண்ணினேன், ஆனா அன்னிக்கு நீங்க பேசுனது..” என்றவள்

“சாரி ராம், இதான் ப்ராப்ளம்! ஸ்மூத்தாவே எனக்கு வாழ வரல பாருங்களேன். நீங்க அவ்வளவு சாரி கேட்டும் சொல்லிக்காட்டுறேன்” என்று கையை வைத்துத் தலையில் அடிக்கப்போனவளின் கையைப் பிடித்தவன் அதற்கு முத்தமிட்டான்.

“இதெல்லாம் சொல்லிக்காட்டாதவங்களே கிடையாது! அண்ட் எப்பவும் எதுக்காகவும் நம்ம சுயமரியாதையை இழக்கவே கூடாது சது, எனக்காக கூட! அன்னிக்கு நான் நடந்துகிட்டது, பேசினது எல்லாம் தப்பு, அதுக்கு நீ கோச்சுக்கிட்டு விட்டு வந்தது தப்பு இல்லை, என்ன ஒன்னு என்னையும் கூட அழைச்சிட்டு வந்திருக்கலாம்” என்றான் கடைசியில் கிண்டலாக.

“கோச்சுக்கிட்டு இருக்கப்ப உங்களையும் அழைச்சிட்டு வருவேனா? லூசா நீங்க?” என்று ராமை சாதனா திட்ட

“ஆமா கோவத்துல இருக்கப்பலாம் என் கொமட்டுல குத்தியிருக்கலாம் உன் கோவமும் போயிருக்கும். எப்படி?” என்று அவன் பார்க்க,

“லவ் யூ ராம்” என்று அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டாள்.

அவள் தலையை வாஞ்சையாகப் பிடித்தவன் முகத்தில் வாத்சல்யம் கொட்டிக்கிடந்தது. காதல், இச்சை எல்லாம் மீகிய ஒரு உணர்வு, நிறைவாக அவளைப் பார்த்திருந்தான்.

“ஓட்டவே முடியலன்னு இப்படி ஒட்டிட்டு இருக்க சதும்மா நீ!” என்று ரசனையாக சொன்னவன்,

“எந்த ஒரு ரிலேஷன்ஷிப்பும் பெர்ஃபெக்ட் கிடையாது. அண்ட் late marriage is better than wrong marriage. எப்ப செய்றோம்னு மேட்டர் கிடையாது, ஒரு ரிலேஷின்ஷிப்புக்குத் தேவை intimacy, passion, commitment. நான் உன் மேல பேஷனோடதான் இருக்கேன், நீயும் இருப்ப. அண்ட் நம்ம இரண்டு பேருமே கமிட்டட்! மேரேஜ் நிலைச்சு நிக்க ஒரு வழி சொல்லவா, you have to fall again and again in love for a successful marriage. அதே நேரம் மரியாதை ஒரு உறவுக்குள்ள மனசார இருந்ததுன்னா அதுவே அந்த உறவை நிலைக்க வைக்கும்!”

“அன்னிக்கு நீ செஞ்சது சரி!  நான் உன்னைத் தனியா விட்டு தேடாம இருந்த காரணம்,  நான் நடந்த விதம் சரியானதோ மரியாதையானதோ கிடையாது.  நீ அதையெல்லாம் ரொம்ப யோசிக்காத, நம்ம இப்போதான் சேர்ந்து  வாழ்க்கையை ஆரம்பிக்கிறோம் சில மேடு பள்ளமெல்லாம் வரும். கைப்பிடிச்சுட்டு கடந்து போயிடுவோம்” என்றான் அவள் கைகளை மெல்ல வருடியபடி.

“ஐ ஃபீல் அட் ஹோம் ராம்!” என்றாள் சாதனா கண்கலங்க. அவள் சரியாக இருக்கலாம், அவன் செயல்தான் அன்று தவறு! ஆனால்,  அதை ஒத்துக்கொள்ள ஒரு பக்குவம் வேண்டுமே? மனதளவில் ஒத்துக்கொண்டாலும் அதை மனைவியிடம் ஒப்புக்கொள்ள காதல் எல்லாம் தாண்டி ஒரு மரியாதை வேண்டும். அவளின் எண்ணத்தை மதித்தல் வேண்டும்! அதை செவ்வனே செய்யும் அவன்பால் அன்பால் சாயவே தோன்றியது தத்தைக்கு.

“பேசிட்டே இருந்துட்டோம், நீ கவலைப்படாம தூங்கு” என்று அவன் அமைதியாக கண்மூட,

“ஏதோ கேப் இல்லைனு சொன்ன மாதிரி இருந்தது”

சாதனாவின் முணுமுணுப்பில் ராம் கண்களைத் திறவாமல் ரகசிய குரலில், “நாளைக்கு ஈவினிங்க்ல இருந்து மூணு நாள் கஸோல்’ல நமக்கு ஹனிமூன். பர்த்டே கிஃப்ட்னு செல்வாவும் மாதவனும் சொன்னாங்க.” என்றான் சிரிப்பை அடக்கியபடி.

“ஓஹ் இன்னிக்குக் கரடி வேலை பார்த்ததுக்கு காம்பன்சேட் பண்றானுங்களா?” என்றவள்

“அப்போ கூட உங்களுக்கு என்னை ஹனிமூன் அழைச்சிட்டுப் போகணும் தோணாதா?” என்று கடுப்போடு கேட்க

“நானே அந்த ப்ளான்ல இருந்தேன், சரி இவனுங்க கிஃப்ட் பண்றதை ஏன் வேண்டாம் சொல்லணும் விட்டேன். மாதவனுக்குக் கல்யாணம் வரப்போகுது,  நம்மதான் எல்லாம் செய்யணும். அவன் கல்யாணம் முடிஞ்சதும் மண்டபத்துல இருந்து டைரக்டா கிளம்பிடலாம் ஓகே?” என்று சாதனாவின் சம்மதம் எதிர்ப்பார்த்தான் ராம்.

அவள் புன்னகைக்க, புன்னகையில் புலர்ந்தது அடுத்த தினம்.

காலை உணவு முடியவும் நகரில் (Naggar) இருக்கும் பட்லிகுஹல் பிரிட்ஜ்  சென்றனர். இளவேனிற் காலத்தில் இதம் சேர்க்கும் வானிலையில் அவர்கள் மன நிலை மட்டற்ற மகிழ்ச்சியில் இருந்தது. சாதனாவும் ராமும் ஏதோ பேசி சிரித்திருக்க, மாதவனுக்கும் செல்வாவுக்கும் அதைப் பார்த்து பூரண உணர்வு. இருவரின் கண்களும் அவர்களின் அன்யோன்யத்தால் நிறைந்தது.

“டேய் மச்சான்ஸ்! என்னையும் என் சம்சாரத்தையும் ஒரு போட்டோ எடுங்க” என்ற உற்சாகக் குரலில்

“சத்தமில்லாம பேசிட்டு இருந்தவன், இன்னிக்கு சாதனா பக்கத்துல இருக்க சவுண்ட் வுடுறதைப் பார்த்தியா ப்ரோ?” என்று மாதவன் செல்வாவிடம் கேட்க

“அதானே?” என்றான் அவனும்.

“பர்த்டே பேபி கேக்கிறார்ல எடுடா” என்று மாதவனிடம் கேட்டாள் சாதனா.

“சரி சரி” என்று அவனும் எடுத்துக்கொடுக்க, “நீங்களும் வாங்க டா, செல்ஃபி ஒன்னு எடுப்போம்” என்று ராம் அழைக்க, ஜோடியாக அவர்களை சில படம் எடுத்த மாதவன் பின் அவர்களுடன் செல்ஃபி எடுத்தான்.

மாதவன் சாதனாவிடம் “ஹாப்பியா இருக்கியா சது?” என்று கேட்க

“சந்தோஷமா இருக்கேன் டா. உன் ப்ரண்டையும் சந்தோஷமா வைச்சுப்பேன்” என்று சொன்னாள் சாதனா.

“தேங்க்ஸ்” என்று மாதவன் சொல்ல அவனை முறைத்தது “நல்ல தம்பிடா நீ” என்றாள்.

“தேங்க் யூஊஊஉ” என்று பல்லைக் காட்டினான் அவன்.

“போடா!!” என்று சிரித்தாள் சாதனா.

“ஈவினிங் கசோல்’ல உங்களுக்கு ரூம் போட்டிருக்கு, நேத்து ராம்க்காக தான் வந்தோம். ஃப்ர்ஸ்ட் டைம் கல்யாணம் அப்புறம் வர பர்த்டே, அதான். உங்க ப்ரைவசில வந்துட்டோம்னு மிஸ்டேக் பண்ணாத சது” என்று மாதவன் சொல்ல

“ஓவரா பண்ணாதடா, உன் மாப்பிள்ளை நேத்து  அவுட் ஆஃப் தி வர்ல்ட்ல இருக்கார். சும்மா சீன் போடு” என்று தம்பியின் தோளில் அடித்தாள்.

அன்று மாதவனும் செல்வாவும் மாலை ஊருக்குப் பயணப்பட, பரசுராமும் சாதனாவும் கசோல் சென்றனர்.

அங்கு சென்றதும் அது புதுவித தனிமையாய் இருந்தது. இவர்கள் மட்டும் இருக்க, இத்தனை நாள் மௌனமாய் இருந்த இடைவெளி இல்லாமல் போய் இசைக்க காத்திருந்தது.

அறையில் ராம் சாதனாவை நெருங்கி அமர்ந்தவன்  “அன்னிக்கு நான் நமக்குள்ள இண்டிமெசி வேணும் சொன்னேன் தானே சது” என்றதும்

“ராம், ஐ அம் ஓகே” என்றாள் புன்னகையுடன்.

அவள் நெற்றியில் செல்லமாக முட்டியவன் “இதான் இல்லை, நான் சொன்ன இண்டிமசி இஸ் ட்ரூத்! நம்ம யாரை நம்புறோமோ அவங்ககிட்ட காட்டுற நெருக்கம்தான் இண்டிமெசி, ஜஸ்ட் செக்ஸ் சொல்லல நான். செக்ஸ் வைச்சிக்கிறதும் இண்டிமெட்டா இருக்கறதும் ஒன்னு இல்லை சது” என்றான். ராமை சாதனா புரியாது பார்க்க

“ஏன் இப்படி முழிக்கிற?” என்று கேட்டவன் “இந்த மாணிக்கம் எப்படி பாட்ஷாவானேன் சொல்லப்போறேன்” என்றதும்

“பம்பாய்ல என்ன பண்ணிட்டு இருந்தீங்க?” என்று கேட்டாள் சாதனா.

“பம்பாய் இல்லை பல்லாவரம்” என்று சிரிப்புடன் சொன்னவன் அவனைப் பற்றி சொல்லவும் சாதனாவின் சிரிப்பு மறைந்தது.

✅ End of Episode 8
How did you feel about this episode?
❤️ 3 more...

You must Log in or Register to react here

💬 2 Replies
Srichitra Reader 3 days ago

Very nice. 

Mrs Beena loganathan Reader 16 hours ago

மனைவியுடன் பிறந்தநாளை மகிழ்வாக கொண்டாட சொன்னால்

மாமா மச்சானோடு 
மனம் நிறைந்த சந்தோஷம்....
Log in or Register to reply

🔗 Insert Link

Scroll to Top