Pavithra Narayanan - Literary Image 129
Pavithra Narayanan - Literary Image 129
Episode 19

காளிதாஸன் 19

வீட்டிற்குச் சென்றதும், அறைக்குள் புகுந்தவன் தன்னுடன் வந்த கார்த்தியை ஆவலாய் இழுத்து அணைத்துக் கொண்டான்.

உண்மையில் அவனுக்குள் இந்த திருமணம் சரி வருமா என ஆயிரம் சந்தேகங்கள். இல்லாவிட்டாலும், சரியாக்கிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணமிருந்தாலும், எங்கேயும் சரிந்து விடக் கூடாது என்ற கவலையும் இருக்க கார்த்தியின் புரிதலில் அவனுக்குள் புத்தம் புது மழை!

“தேங்க்ஸ் அண்ட் ஸாரி கண்ணா” என்றான் அவள் காதோரம்.

“ஏன் ஸாரி?” என்று அவன் அணைப்பில் மயங்கியபடி மங்கைக் கேட்க,

“அம்மா சொன்னதும் என்னோட தப்பு புரிஞ்சது, அன்னிக்குக் கூட நீயும் டயர்டா இருந்த, ஓகே. பட் இப்பவும் உன்னை, உன் விருப்பம் கேட்காம நானே டிசைட் பண்ணிட்டேன்ல” என்றான்.

“விடுங்க, உங்களுக்குப் பிடிக்காததை ஏன் செய்யணும்?” என்றாள் கார்த்தி இயல்பாக.

“அப்படி சொல்லாத கார்த்தி கண்ணா. உனக்கு அப்போ இஷ்டம், எனக்காக வேண்டாம்னு சொன்ன, அப்படித்தானே?” என்று காளிதாஸன், கார்த்தியின் முகத்தை நிமிர்த்தி கண்கள் பார்த்து கேட்க,

“எல்லாரும் செய்றாங்க, நமக்கும் போட்டோ மெமரீஸ் இருந்தா நல்லாயிருக்கும் தோனிச்சு. ஆனா, உங்களுக்குப் பிடிக்காததை செஞ்சா அது எனக்கும் கஷ்டம். சந்தோஷமாத்தான் நான் வேணாம் சொன்னேன் தாஸ்” என்றவள்,

“பெயர் சொன்னா கோச்சுப்பீங்களா?” என்றாள் சந்தேகமாக.

அவள் நெற்றியில் முட்டியவன், “இத்தனை நாள் அப்படித்தானே சொன்ன, மிஸ்டர்.காளிதாஸன்னு… இப்ப என்னவாம்?” என்று கேட்க,

“இத்தனை நாள் நான் மிஸஸ். காளிதாஸன் இல்லையே” என்று கார்த்தி ராகமாய் சொல்ல,

“ஒரு மனுஷனோட பெயர்தான் அவனுக்கு ரொம்ப பிடிச்ச இனிமையான ஒலியாம் இந்த உலகத்திலே, அப்படின்னு dale carnegie சொல்லியிருக்கார். அண்ட் ஐ லைக் மை நேம். அண்ட் லவ் இட் அதை நீ சொல்லும் போது” என்றதே அவ்வளவு இனிமையாய் இருந்தது.

“ஓகே காளிதாஸன்!” அவளும் ரசித்து சொன்னாள்.

“வேற டாபிக் போயிட்டோம், சொல்லு ஹனிமூனுக்குக் கூட ஏன் அப்படி சொன்ன? நம்ம அதையெல்லாம் பேசவே இல்லையே?” என்று காளிதாஸன் விடாது கேட்க,

“நீங்க அண்ணா கேட்கும் போது நான் ஹனிமூனுக்கு ஓகே சொல்லிடுவேன்னோன்னு டென்ஷனா பார்த்தீங்க. ஸோ, உங்களுக்கு விருப்பமில்லை தெரிஞ்சது” என்றாள்.

தன்னை அவள் கவனித்திருக்கிறாள் என்ற உவகையும், தன்னால் அவள் மனத்தின் விருப்பங்களுக்கு ஏற்ப நடக்க முடியவில்லையே என்ற உறுத்தலும் சேர அவளை இறுக்கி அணைத்தவன்,

“கண்ணா! நிஜமா ஸாரி. என்னோட விருப்பங்களை நீ மதிக்கிற, நான் கேட்காம அதுபடி நடக்குற. ஃபோட்டோதான் எனக்கு இன்னொருத்தங்க முன்னாடி நிக்க விருப்பமில்லை. அதை விட அது இயற்கையா வர ஃபீல்லா இருக்கணும். இதோ இப்படி..” என்று சொல்லி அவள் கன்னத்துடன் தன் கன்னம் உரசினான்.

“இப்போ ஒருத்தர் நமக்குப் பக்கமா வந்தா எவ்வளவு கடுப்பா இருக்கும், அதனால எனக்கு இஷ்டமில்லை. ஹனிமூன்? அது போகணும், பட், இப்போ எனக்கு நேரமில்லை கார்த்தி, EC டேட் சொல்லிடுவாங்க நெக்ஸ்ட் வீக், அதுக்கு வொர்க் பண்ணணும். இந்த டைம்ல என்னால உங்கூட பீஸ்புல்லா டைம் ஸ்பெண்ட் பண்ண முடியாது”

“எனக்கும் லைட்டா தோனுச்சு, எலெக்ஷன் வரப்ப உங்களுக்கு வேலை இருக்கும். அதான் நீங்க தயங்குறீங்க, இரண்டு பேரும் சந்தோஷமா போகணும், வொர்க் டென்ஷனோட வேண்டாம்” என்ற கார்த்தியை ரொம்பவே பிடித்தது காளிதாஸனுக்கு.

“மிஸ்டர்.காளிதாஸ்  இந்த எலெக்ஷன் எல்லாம் முடிஞ்சதும் என்னை ஹனிமூன் அழைச்சிட்டுப் போறீங்க, சும்மா எல்லாத்துக்கும் நான் பொறுமையாய் இருக்க மாட்டேன்” என்று கார்த்தி செல்லமாய் மிரட்ட,

“நான் அழைச்சிட்டுப் போகலன்னா, நீ என்னை அழைச்சிட்டுப் போ கண்ணா” என்றவன், அவள் மெய்தீண்டி மெய் மறந்து நின்றான். கன்னங்கள் தாண்டி அவன் தீண்டல் கழுத்தில் வந்து இறங்கியது. அவனுக்கே அவனின் இந்த அவதாரம் புதிதாய் இருந்தது.

“கார்த்தி! நீ என்னையே எனக்குப் புதுசா காட்டுற” என்றான் ரகசியக் குரலில் ரசனையுடன்.

அவனின் முத்தங்களில், அவளுமே தன்னை புதிதாய் உணர, இண்டர்காம் ஒலித்தது.

“ஒன் மினிட்!” என்று சொல்லி விலகி போனை எடுக்க, வாலி பேசினான்.

கார்த்தி இன்னும் அவன் தீண்டலில் திகைத்து திளைத்து இருக்க, இந்த இடைவெளி கூட பிடிக்கவில்லை. காளிதாஸனைப் புன்னகையுடன் பார்த்திருக்க,

“ஓகேடா! நான் வரேன்” என்று சொன்னவன்  கார்த்தியின் கன்னம் தட்டி,

“உனக்கு மட்டும் சொந்தமான காளிதாஸை இன்னிக்கு நைட் பார்க்கலாம்” என்று கண்சிமிட்டியவன்,

“இண்டிரீயர் டெகரேட்டர்ஸ் வந்திருக்காங்க. அப்படியே உன்னோட ஃபிங்கர் பிரிண்ட்க்கும் access கொடுத்திடலாம் நம்ம ரூமுக்கு” என்றவன் அவளுடன் படியில் இறங்கினான்.

அவர்களிடம் கார்த்தி ஐடியாக்கள் கேட்டவள், இரு நாட்களில் சொல்வதாகச் சொன்னாள். கார்த்தியிடம் புத்தம் புதிய போனை நீட்டியவன் 

“உங்கிட்ட போன் இல்லையே கார்த்தி? அதுக்காக, என்னோட கிஃப்ட் வச்சிக்கோ. முன்னாடி உங்கிட்ட இருந்த மாடலோட நெக்ஸ்ட் மாடல் இது. பிடிக்கும் நினைக்கிறேன், இல்லைனா மாத்திடலாம். சிம் போட்டாச்சு, யூஸ் பண்ணிக்கோ. எனக்கு இப்போ நேஷனல் லீடர்ஸோட வீடியோ கால் இருக்கு, எட்டு மணி வரை என்னை டிஸ்டர்ப் செய்யாத கண்ணா” என்று வரிசையாய் சொல்ல கார்த்தியும் தலையாட்டினாள்.

ஒரு மணி நேரம் சென்றிருக்கும், கார்த்தி தன் அலைப்பேசி மூலம் இன்ஸ்டாகிராம் செல்ல, தோழிகளிடம் இருந்து நிறைய செய்திகள். அதனைப் படிக்க படிக்க நிறைய வருத்தம் அவளுக்கு. அதில் ஒரு செய்தியில் பதறியவள் கணவனின் பேச்சையும் மீறி அவனின் அலுவலக அறையைத் திறந்து அழுகையுடன் உள்ளே போனாள்.

“கார்த்தி!” என்று அதிருப்தியுடன் மனைவியைப் பார்த்தவன் வீடியோ காலில் மன்னிப்புக் கேட்டு, அவளுடன் வெளியே வந்தான்.

“சொல்லிட்டுத்தானேமா வந்தேன்” என்று அவன் சொல்ல, கார்த்தியோ அழுகையுடன்,

“அம்மாவுக்கு முடியலங்க, ஹாஸ்பிட்டல்ல இருக்காங்களாம். என் ப்ரண்ட் சொன்னா” என்றதும்,

அவளுக்கு அம்மா முக்கியமென உணர்ந்தவன், அவளை அழைத்துக் கொண்டு மருத்துவமனை சென்றான். விசிட்டர் நேரமெல்லாம் முடிந்திருக்க, ராஜீவ்ரத்னம் மட்டுமே அம்மாவுடன் இருந்தான்.

எல்லா முக்கிய பிரமுகர்களும் காளிதாஸன், கார்த்தியாயினி வரவேற்புக்கு வந்திருக்க, அது முக்கிய செய்தியாக்கப்பட்டு தொலைக்காட்சி, செய்தித்தாள் எல்லாவற்றிலும் வர, மகளைக் கண்டு விசாலாட்சி உள்ளம் நொந்தது. அதிலும், பெரிய மகன் காளிதாஸனைப் பற்றி மோசமாய்ப் பேசியிருக்க, சிறப்பாய் பார்த்த மாப்பிள்ளை எல்லாம் விட்டு மகள் அத்தனை பேரின் முன்னிலையிலும், நாற்பது வயதில் ஒருவனை திருமணம் செய்திருக்க, பார்க்க பார்க்க நொந்து போனார்.

இதில் செல்வரத்னம் வேறு டீவியைப் பார்த்தபடி தங்கையைத் திட்டிக் கொண்டிருக்க, விசாலாட்சிக்கு ஹார்ட் அட்டாக் வந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ராஜீவ் மட்டும் அம்மாவுக்குத் துணையாக அங்கே இருக்க, மற்றவர்கள் கிளம்பி விட்டனர்.

அது ஓர் அரசியல் பிரமுகரின் மருத்துவமனை என்பதால் இவனுக்கு அந்த நேரமும் அனுமதி கிடைக்க, டாக்டரிடம் பேசிவிட்டு ஐசியு பக்கம் வர, கணவனுக்கு முன்பே கார்த்தி அங்கே போய் விட இவளை எதிர்ப்பார்க்காத ராஜீவ் கொதித்துஜவிட்டான்.

“நீ ஏன் வந்த? அம்மா செத்துட்டாங்களா பார்க்கவா?” என்று கத்தினான்.

“ராஜா, ப்ளீஸ் பேசாத. அம்மா எப்படி இருக்காங்க, நான் பார்க்கணும்” என்று கார்த்தி கண்ணீருடன் கேட்க, அவன் இரங்கவில்லை. அவ்வளவு வேதனை அவனுக்கு. அம்மா டீவியைப் பார்த்து கண்ணீர் விட்டபடி சரிந்து விழுந்தது கண்முன் இன்னும் நிற்க, சரமாரியாக வந்தது அவனின் வார்த்தைகள்.

“அப்படி அம்மா மேல அக்கறை இருந்தா, உன்னிஷ்டபடி நடப்பியா? நாங்க எப்படியோ போகட்டும்னு தானே உனக்குன்னு ஒரு வாழ்க்கையை தேடிகிட்டு அந்தாளோட ஜோடி போட்டு நின்ன?” என்றான்.

தம்பியின் வார்த்தைகள் வலிக்க “என் நிலைமைத் தெரியாம பேசாத ராஜீவ்” என்றாள் கார்த்தி.

“என்ன நிலைமை? எவ்வளவு திமிரா இந்தாளை லவ் பண்றேன்னு ப்ரஸ் முன்னாடி சொன்ன நீ? இப்ப என்ன அம்மா மேல அக்கறை” என்ற போதுதான் தன் பின்னால் வந்து நின்ற காளிதாஸனைப் பார்த்தாள் கார்த்தி. கணவன் இந்த பேச்சை எப்படி எடுப்பானோ என்று பாவை பரிதவிக்க,

காளிதாஸ் ராஜீவைப் பார்த்தவன், “அதிகம் பேசாதீங்க ராஜீவ்” என்றான் அழுத்தமாக.

“யோவ்! நீ பேசாத, உன் வயசுக்கு வேற பொண்ணு கிடைக்கல, நீயெல்லாம் ஒரு ஆளு, ச்சீ” என்றான் முகச்சுழிப்புடன்.

“உன்னோட அரசியல் ஆட்டத்துக்கு இவளை யூஸ் பண்ணிக்கிட்ட, அது தெரியல இவளுக்கு, ஏய் போடி முதல்ல ” என்று மரியாதையின்றி வார்த்தை விட, அதுவரை அமைதியாய் நின்றிருந்த காளிதாஸனின் பொறுமைப் பறக்க, ராஜீவின் கன்னம் சிவக்க அறைந்திருந்தான்.

“தாஸ்!!” என்று அவள் அதிர்வில் அழைக்க,

“பேசாத கார்த்தி” என்று அதட்டினான்.

கணவனின் இந்த அவதாரத்தில் கார்த்தி கண்கலங்க  நின்றிருந்தாள், அவளின் கையை அழுத்தமாய்ப் பற்றிய காளிதாஸன், 

“இவன் உன்னைப் பேசற வரைக்கும் அமைதியா இருப்பியா?” என்று திட்டி, நர்ஸீன் உதவியுடன் பாதுகாப்பாக ஐசியுவில் இருந்த அம்மாவைப் பார்க்க மனைவியை அனுப்பி வைத்தான். உள்ளே சென்று வந்த கார்த்தியை ஒரு நொடி கூட தாமதிக்க விடாது வேகமாய் இழுத்துப் போனான் காளிதாஸன்.

For instant updates, check our whatsapp channel.

 

https://whatsapp.com/channel/0029Vafraxz2kNFmQkjK7Y2L

தினமும் இரண்டு பதிவுகள். STAY TUNED. 

AUDIO NOVEL AVAILABLE IN KAATRODU PESUM KADHAIGAL. 

CHECK LINK IN HOME PAGE FOR CHANNEL OR CLICK HERE

 

✅ End of Episode 19
How did you feel about this episode?
❤️ 5 more...

You must Log in or Register to react here

💬 3 Replies
Mrs Beena loganathan Reader 1 week ago

பார்வையிலே 

புரிந்து கொண்ட மனைவியின் பிரிவில் மனம் உன் மத்தம் கொள்ளுதடி கண்ணா ....
❤️ 1 more...
Kavi Natarajan Reader 1 week ago

💞💞💞💞💞💞💞💞

❤️ 1 more...
Srichitra Reader 1 week ago

Nice 

❤️ 1 more...
Log in or Register to reply

🔗 Insert Link

Scroll to Top