Pavithra Narayanan - Literary Image 129
Pavithra Narayanan - Literary Image 129
Episode 30

காளிதாஸன் 30

என்னுள்ளே என்னுள்ளே
பல மின்னல் எழும் நேரம்‘ 

என்று அலெக்ஸாவின் வழியே, ஸ்வர்ணலதாவின் குரல் அந்த அறையை நிறைத்தது. காளிதாஸ் பாடலை ஹம் செய்தபடி மெத்தையில் கண்மூடி படுத்திருந்தான். பாத்ரூம் சென்று வந்த கார்த்தி பாடலைக் கேட்டு, கணவனின் தோளில் அடித்து அவன் பக்கம் சாய்ந்து படுத்தாள்.

“நாளைக்கு எலெக்ஷன் ரிசல்ட்னு எனக்கு இடி இடிக்குது, உங்களுக்கு மின்னல் எழுதா?” என்றாள் கடுப்பாக.

“இஸீட்? எனக்கு மின்னல் உனக்கு இடி, அப்படியே ஒரு கவிதை மழை.. ஹ்ம்ம்?” என்று மனைவியைத் தோளோடு அணைத்து ரசனையாகக் கேட்டான் கணவன்.

“எனக்கு ஒரு டவுட்” என்று கார்த்தி, காளிதாஸைப் பார்த்தாள்.

“என்ன டவுட் கண்ணா?”

“இல்லை, இவ்வளவு ரொமாண்டிக்கான பாட்டு எல்லாம் கேட்குறீங்க, எப்படி இத்தனை நாளா சிங்கிள்னு? அன்னிக்கு ஒரு கதை சொன்னீங்களே. அது கதையா, இல்லை நிஜமான்னு ஒரு டவுட் வருது…” என்றாள் கார்த்தி.

“ஹாஹா! ஹேய் கண்ணா! திஸ் இஸ் டூ மச்! அன்னிக்கு என்னை வெறுப்பேத்தினதால சும்மா அடிச்சு விட்டேன், நம்பலையா என்னை?” என்று காளிதாஸ் கேட்க,

“உங்களைத் தவிர யாரை நம்ப போறேன் நான், சும்மா கேட்டேன்” என்றதும் காளிதாஸ் முகம் கனிந்தது.

“நானும் சைட்டெல்லாம் அடிச்சிருக்கேன். என்னோட காலேஜ் டைம்ல, லேடீஸ் காலேஜ் வழியா போகும் போதெல்லாம். அரசியலுக்கு வந்த அப்புறம், பார்க்கிற பார்வை கூட கவனமா இருக்கணுமே. அதனால, ரொம்ப கவனமா இருந்தேன். தென் அஃப்டர் தர்ட்டி எனக்கு ஃபுல் டைம் அரசியல் மட்டும்தான். சைட் அடிக்கிறது கூட நின்னுடுச்சு”

கார்த்திக்கு அவனைப் புரிந்தது. ஆனாலும், வேண்டுமென்றே,

“ஆனாலும், இந்த என்னுள்ளே என்னுள்ளே எனக்கு இடிக்குதே” என்று கார்த்தி கிண்டலாய்ப் பேச, அவளை இடித்து அவள் இடையைப் பிடித்தான்.

“ஸ்வர்ணலதாவோட வாய்ஸ்காக கேட்டா, என்ன என்ன பேசுற நீ? மோசம் கண்ணா” என்றான், அவள் கன்னத்தோடு கன்னம் இழைந்து.

“நீ சொல்ற லாஜிக்படி பார்த்தா ஜோடி இல்லாதவன் எல்லாம் டூயட் சாங் எல்லாம் கேட்கக் கூடாது போல இருக்கே” என்று காளிதாஸ் கேட்க,

“மத்தவங்களைப் பத்தி எனக்குத் தெரியல. ஆனா, தாஸோட ரசனை என்னை அப்படி கேட்க வைக்குதே” என்று கார்த்தி சொன்னாள்.

“உன்னை ரசிக்கும் போதே தாஸோட ரசனை உனக்குத் தெரிய வேண்டாமா?” என்று காளிதாஸ் கேட்க,

“அச்சோ! போதும். இப்படி ஓவரா கொஞ்சுறது, அப்புறம் நான் இருக்கேனே கண்டுக்காம இருக்கிறது” என்றாள் கடுப்பாக.

அமைதியில் ஆலாபனையாக அவனின் சின்ன, சின்ன முத்தங்களின் சத்தம் அவ்வறையில் கேட்க, அதில் மகிழ்ந்து வெட்கம் முகிழ்த்தாலும்,

“உங்களுக்கு டென்ஷனே இல்லையாங்க? இல்லை டென்ஷன் குறைக்கத்தான் இந்த முத்தமெல்லாமா?” என்று கார்த்தி அவன் கழுத்தைக் கட்டிக் கொண்டு கேட்க,

“என்னால முடிஞ்ச எல்லாம் பண்ணியாச்சு கண்ணா, இனி ஏன் டென்ஷன்? எதுனாலும் பார்த்துக்கலாம். ஜெயிக்கிற பாஸீபிலிட்டிஸ் அதிகம் இருக்குடா. நீ ஏன் டென்ஷன் ஆகுற?” என்றான் காளிதாஸன் அவள் கன்னம் வருடி.

“என் வீட்டுக்காரர் ஜெயிக்கணும். எனக்கு ஆசை இருக்காதா?” என்று கார்த்தி கேட்க,

“ஆசைதானே படலாம்” என்றவன், “என்னோட டென்ஷன் குறைக்க எல்லாம் இப்படி இல்லை நான், எனக்கும் எலெகஷன் ரிசல்ட் வந்துட்டா என் வீட்டுக்காரம்மாவோட ரொம்ப நேர இருக்க முடியாதேன்னு என்னோட ஆசையெல்லாம் இப்பவே காட்டுறேன். அப்புறம் அவங்க மேல எனக்கு ஆசையே இல்லைனு அழுவாங்க” என்றதும், அவன் தோளில் போட்டு அடித்தாள்.

“ரொம்ப கிண்டல் உங்களுக்கு” என்றவளிடம், அவன் ஆசைக் காட்ட, அவள் ஆசையைக் கொட்ட என்று ஆசைகளின் ஆலாபனை அங்கே அரங்கேறியது!

அடுத்த நாள் காலையில் கார்த்தியும், காளிதாஸனும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர். எப்போதுமே விரைவாக எழுந்து விடுபவன் நேற்று காட்டிய ஆசையில், ஆசையினால் உண்டான அயர்விலும் ஆழ்ந்து உறங்கினான். மணி எட்டு ஆகி விட, வாலியிடம் இருந்து போன்.

கார்த்தி தூக்கக் கலக்கத்தில், “தூக்கம் வருது தாஸ், ஆஃப் பண்ணுங்க” என்று முனகினாள். இன்னும் அவனுடன் ஒட்டிக் கொண்டாள்.

கார்த்தியின் தலையை கனிவோடு அழுத்திக் கொடுத்த காளிதாஸ் போனை எடுத்துப் பேசினான்.

“ண்ணா, ரிசல்ட் இன்னிக்கு. கவுண்டீங்க் பார்க்க போறோமா,  நான் எப்போ வர?” என்று கேட்கவும், சில நிமிடங்கள் ஒன்றுமே புரியவில்லை. கண்களைத் தேய்த்துக் கொண்டவன்,

“நானே கால் பண்றேன் வை வாலி” என்றவனுக்கு தன் கைகளுக்குள் உறங்கும் கார்த்தியைப் பார்க்க புன்னகை அரும்பியது.

கார்த்திக்கும் விழிப்பு வந்துவிட, கணவனைப் பார்க்க, காளிதாஸின் பார்வை கார்த்தியின் மீதுதான்.

“லேட்டாச்சா தாஸ்? அந்த அலெக்ஸாவை நியுஸ் சேனல்ல வைக்க சொல்லுங்க” என்றவள், கண்களை மூடிக் கொண்டாள்.

“டயர்டா இருக்க, நீ தூங்கு கார்த்தி. இப்போதான் ஆரம்பிப்பாங்க, ஒன் அவர் போகட்டும், பொறுமையா பார்க்கலாம்” என்று காளிதாஸ் சொல்ல,

“பொறுப்பே இல்லை எம்.எல்.ஏவுக்கு” என்று திட்டினாள்.

“ஆமா” என்றவனின், முகத்தில் ரகசிய சிரிப்பு. சிரிக்கிறான் என்று தெரியும் வகையில் ஒரு சிரிப்பு. ஆனாலும், என்னவோ ஒளித்து வைத்து நினைக்கிறான் என்று புரிந்தது.

“என்ன சிரிப்பு?” என்று கார்த்தி கேட்க,

“கவிதை ஒன்னு சொல்லவா?” என்றதும், கார்த்தியும் புன்னகையுடன், “சொல்லுங்களேன், நீங்க சொல்லி ரொம்ப நாளாச்சு” என்றாள் ஆவலுடன்.

“ரூமியோட கவிதை, காதல் எனது பழக்கங்களை பறித்துக் கொண்டு கவிதையால் என்னை நிரம்பி வழியச் செய்தது” என்று காளிதாஸன் கவி படிக்க,

“என்ன காளிதாஸனுக்குக் காலையில கவித, காதல் எல்லாம்” என்று கார்த்தி கேட்டாள்.

“சில பாட்டு கேட்கும்போது, கவிதை படிக்கும்போது அப்படியே கடந்துடுவோம், சில நேரம் அதுல நம்மளையே பொறுத்திப்பார்ப்போம் இல்லையா, அப்படியாகிடுச்சு இந்த கவிதை. கார்த்தியோட இருந்தா எல்லாம் மறந்து போகுது. வாலி கால் பண்ணிதான் எழுந்தேன் நான். ரொம்ப பொருத்தமான கவிதை இல்லையா?” என்று காளிதாஸன் கேட்க, கார்த்தி வெட்கத்துடன் தலையசைத்தாள்.

மீண்டும் வாலியிடம் இருந்து போன் வர இருவரும் கிளம்பினார்கள்.

“கண்ணா, கொஞ்ச நாள் நான் பிஸீயா இருப்பேன். ஸோ, சண்டை போடாம ஒழுங்கா சாப்பிடணும், சரியா?” என்று கேட்ட கணவனை முறைத்தாள் கார்த்தியாயினி.

“சண்டை போடக் கூடாது, எல்லாம் நீங்க சொல்லக் கூடாது, சண்டை போடுவேன், சட்டைக் கிழிப்பேன். நேத்து நீங்க கவிதை வாசிச்சப்பவே எனக்குத் தெரியும், ஒரு மாசம் என்னைப் பார்க்கக் கூட மாட்டீங்கன்னு” என்று கார்த்தி சொல்ல, காளிதாஸனிடம் பெருமூச்சு.

“சண்டை தானே போடு, நானும் எக்ஸ்ட்ராவா கவிதை வாசிச்சிக்கிறேன்” என்று கணவன் சொல்ல,

“என்ன சொன்னாலும் சமாளிக்கிறீங்க, அரசியல்வாதி இல்லையா?” என்றாள் கிண்டலாக.

“வெளியேதான் அரசியல், அமைச்சியல் எல்லாம். இங்க  நலம்புனைந்துரைத்தல், காதற்சிறப்புரைத்தல் மட்டும்தான்” என்றான், மனைவியை அருகே இழுத்து.

“இதுல காதல் தவிர ஒரு ‘தல்’லும் எனக்குப் புரியல போங்க” என்றாள் கார்த்தி சலிப்பாக.

“ஓகே! எல்லாம் முப்பாலோட மூணாவது பால் அதிகாரங்கள்,  அப்புறம் எக்ஸ்ப்ளைன் பண்றேன்” என்று கண்ணடித்தவன்,

“கிளம்புறேன் கண்ணா” என்றான்.

“ஒரு நிமிஷம்!” என்று அவனை நிறுத்திய கார்த்தி, “இங்க வாங்க” என்று சாமியறை முன் நிறுத்தினாள்.

“கண்ணா” என்று கண்டிப்பாய் அவன் பார்க்க,

“உங்களை கும்பிட சொல்ல மாட்டேன், உங்களுக்காக நான் கும்பிடுறேன். இரண்டு நிமிஷம் பேசாம இருங்க, போதும். ப்ளீஸ்” என்று கார்த்தி கேட்க மறுக்க முடியாமல் நின்றான்.

“ஜாக்கிரதையா போய்ட்டு வாங்க தாஸ், இன்னிக்கு நிறைய கலாட்டா நடக்கும்ல, பார்த்து என்ன?” என்றாள் பாவை பரிதவிப்புடன்.

கார்த்தியின் கன்னம் தட்டியவன், “பார்த்துக்கிறேன் டா, நீ பார்த்து இரு. இன்னிக்கு கவியும் நித்திமாவும் வரேன் சொன்னாங்க. அம்மா கூட வரலாம். அவங்களைக் கேட்டு லஞ்ச் பார்த்துக்கோ. நான் கால் பண்றேன் உனக்கு” என்றவன் கிளம்பிப் போனான்.

காளிதாஸன் வீட்டு வாசல் முன் பட்டாசு சத்தம் பட்டையைக் கிளப்பியது. தமிழகமெங்கும் எதிர்க்கட்சி பெரும்பான்மையான இடங்களை கைப் பற்றியிருக்க, ஆளுங்கட்சி தோற்றுப் போனது. காளிதாஸன், இந்த முறையும் எம்.எல்.ஏவாகி விட்டான். செல்வரத்னம், அவனை எதிர்த்து நின்ற வேட்பாளரிடம் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் தோற்றுப் போனான்.

தான் தோற்றதும், கூடவே காளிதாஸ் ஜெயித்ததும், எல்லாம் சேர்ந்து அவனை கொலைவெறியில் தள்ளியது. வீட்டில் அவ்வளவு கலாட்டா. அம்மா, மனைவி எல்லோரும் அவனின் அந்த கொடூர முகம் கண்டு பயந்தனர். தோல்வி அவனில் இருந்த மோசமானக் குணத்தை வெளிக் கொண்டு வந்தது.

அதற்கு மாறாக காளிதாஸன் வீட்டில் சந்தோசம் களைக் கட்டியது. அவன் வெற்றி உறுதி செய்யப்பட கார்த்திக்கு உடனே அழைத்து விட்டான் காளிதாஸ்.

“கண்ணா, நமம் ஜெயிச்சிட்டோம்டா, அப்புறம் கூப்பிடுறேன்” என்று சொல்லி வைத்து விட, கார்த்தி உடனே பூஜையறையில் சென்று விளக்கேற்றினாள். கூடவே, செல்வா தோற்றதும் அவளுக்கு சந்தோஷ செய்தி.

தேர்தல் முடிவுகள் வந்த ஒருவாரம் வரை மிகவும் கெடுபிடியாக இருந்தது. காளிதாஸ் வீடு வரவே தாமதமானது. ஆனாலும், கார்த்தி சண்டை எல்லாம் பிடிக்கவே இல்லை. அன்றும் அப்படித்தான்.

“கார்த்தி மேடம் என்ன சண்டை போடுவேன், சட்டையைக் கிழிப்பேன் சொன்னாங்க. ஒன்னும் செய்யவே இல்லை” என்று மனைவியை வம்பிழுத்தான் காளிதாஸன்.

“ஸார் இப்போ ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. ரொம்ப, ரொம்ப பிஸியா இருப்பார்னு தெரியும். மக்கள் சேவையில மனைவி எல்லாம் தேவையா இருப்பேனா என்ன?” என்று கார்த்தி சலிப்பாக சொன்னாள்.

கார்த்தியை சட்டென அணைத்துப் பிடித்தவன், “என்ன பேசுற நீ? எனக்கு கார்த்தி எப்பவும் தேவை, புரியுதா? இனி இப்படி எல்லாம் பேசாத” என்றான் கண்டிப்பாக.

“நெக்ஸ்ட் வீக் பதவியேற்பு விழா இருக்கும். நாளைக்கு ஹனிமூன் போகலாமா?” என்று காளிதாஸன் கேட்ட கேள்வியில் அப்படியே விழிகள் விரிந்தன கார்த்திக்கு.

“நிஜமாவே ஹனிமூன் போகலாமான்னா கேட்டீங்க?” என்று கார்த்தி அவன் காதருகே கேட்க,

அவளின் காதோடு சேர்த்து தலையை வாஞ்சையாய்ப் பிடித்தவன் காதுக்குள் கிசுகிசுத்தான்.

“ஹனிமூன்தான் போறோம், அப்ரூவல் கிடைக்குமா?” என்று கேட்க, கார்த்திக்குக் கூசியது.

“எங்கன்னு கேட்க மாட்டியா கண்ணா?” என்று காளிதாஸ் மனைவியின் இடையைப் பற்றி இறுக்கியணைத்து ஆவல் குரலில் கேட்டான்.

கார்த்தி பெரிதாக எந்த எதிர்ப்பார்ப்பு வைத்துக் கொள்ளவில்லை.

அதனால், “ஹனிமூன்னு சொல்லி அடையாருக்கு அழைச்சிட்டுப் போனாலும், எனக்கு ஓகேதான் தாஸ்” என்றாள் கிண்டலாக.

“ஆனாலும், நாளைக்குப் போறதுக்கு இன்னிக்குத்தான் கேட்பீங்களா?” என்று கார்த்தி கேட்க, காளிதாஸன் கிண்டல் பார்வையுடன்,

“அடையாருக்கு அழைச்சிட்டுப் போனா கூட ஓகேன்னு சொல்றவங்களுக்கு இன்னிக்கு சொன்னா என்ன நாளைக்கு சொன்னா என்ன? எப்படியும் நீ ஓகே சொல்லிடுவன்னு தெரியும் கண்ணா” என்று கண்ணடித்தான்.

“ரொம்ப பண்றீங்க, பார்க்கிறேன் உங்க ஹனிமூன் சர்ப்பரைஸை” என்றாள் நக்கலாக.

“ஒரு கண்டிஷன் போட்டேனே மறந்துட்டியா கண்ணா, சர்ப்பரைஸ் உன்னை சர்ப்ரைஸ் பண்ணிடுச்சுன்னா டெய்லி கிஸ் நீதான்மா” என்றான் மிதப்பாக.

கார்த்தியோ, “பார்க்கலாம், பார்க்கலாம்” என்றாள். ஆனால்,  பார்த்த கணம் வாழ்வில் மறக்காது அவளுக்கு. நித்தி, கவி எல்லாம் கேட்டுப் பார்த்தனர் காளிதாஸனிடம்.

“சர்ப்ரைஸ்!” என்றதுடன் முடித்து விட்டான்.

கார்த்தியிடம் கேட்க, “அவர் கூட எங்கன்னாலும் எனக்கு ஓகேதான் அண்ணி” என்று சொல்ல கணவன் மிதப்பாய் நண்பர்களைப் பார்த்தான்.

ஃபாரீன் டிரிப் எல்லாம் இருக்காது என்று கார்த்திக்குத் தெரியும். அடுத்த வாரம் பதவியேற்பு இவன் இங்கே இருக்க வேண்டும் என்பதால் கார்த்தியின் எதிர்ப்பார்ப்புகள் எல்லைக்குள் இருந்தன.

ஏர்ப்போர்ட் சென்ற போது கூட எங்கே என்று கேட்கவில்லை. சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி சென்றனர்.  டெல்லியிலிருந்து குலு மணாலிக்கு விமானம். அங்கிருந்து காரில் கசோல் சென்றனர்.

“ஸ்டேட் விட்டு அழைச்சிட்டு வந்துட்டீங்க, குலு எல்லாம் நான் சின்னப்புள்ளல பார்த்திட்டேன்” என்றாள் கார்த்தி முணுமுணுப்பாக.

“பெரிசாகி பார்க்கல இல்லை, என்னோட பாரு கண்ணா” என்று காளிதாஸன் அவள் வாயை அடைத்தான்.

“மணாலி தாண்டி எங்க போறோம் தாஸ், சொல்லுங்களேன்” என்று கார்த்தி ஆர்வம் தாங்காது கேட்க,

“நீயே பார்க்கலாம்” என்றவன், அமைதியாகக் கண்களை மூடி கொண்டான்.

“கொழுப்பு” என்று திட்டி விட்டு, அவன் தோளில் சாய்ந்து கொண்டவள் உறங்கிப்போனாள். இரண்டு மணி நேரத்திற்கும் மேல் பயணம், கார் நிற்கவும் கார்த்தி கண்களைத் திறக்க முயற்சி செய்ய, ஒரே இருட்டு.

“என்ன இது? கண்ல என்ன கட்டி வச்சிருக்கீங்க?” என்று துணியை இழுக்கப் போக,

“நானே அழைச்சிட்டுப் போறேன், நான் சொல்றப்ப கண்ணைத் திறக்கலாம் கார்த்தி” என்றவன், அவளைத் தோளோடு சேர்த்தணைத்துக் கொண்டான். அங்கிருந்தவர்களிடம்  ஹிந்தியில் பேச, கார்த்திக்குப் புரியவில்லை.

நடக்கும் போது சில கற்கள் தடுக்க, “பார்த்து கண்ணா, படி இருக்கு” என்று பத்திரமாக அழைத்து வந்தான். கதவைத் திறக்கும் சத்தம் கேட்டது. ஆவல் அதிகமாகிக் கொண்டே போனது கார்த்திக்கு.

கதவு மூடும் சத்தம் அடுத்து. கார்த்திக்கு குளிர் எடுத்தது, குர்த்தி டாப், ஜீன் அணிந்திருந்தாள். பருவ மழைக்காலம் என்பதால் சில்லென காற்று ஊசியாய்த் தீண்டியது. காலையில் விமானம் ஏறியிருக்க, இவர்கள் கசோல் வந்து சேரும் போது இருட்டி விட்டது. கைகளால் தன்னைக் கட்டிக் கொள்ள, அதனையுணர்ந்த கணவன் அவனாகவே கட்டிக் கொண்டான். அப்படியே கார்த்தியை நகர்த்திப் போய் ஓர் இடத்தில் நிற்க வைத்து,

“கண்ணா!” என்றவன், கார்த்தியின் கண்களில் இருந்து துணியை எடுத்தான். இரு கண்களையும் தேய்த்து நன்றாய் விரித்துப் பார்க்க வானமே தெரிந்து அந்த கண்ணாடி வழியே. அவர்கள் இருந்தது ஒரு கவிகை மாடம்.

வெளியே பார்க்க அறை வாசலில் மஞ்சள் நிறத்தில் விளக்குகள் ஒளிர்ந்தன. இருளில் மேகமும், மலையும் ஒன்றாய் சங்கமித்து இருந்தன. நட்சத்திர வடிவத்தில் கண்ணாடி இருக்க, அதன் வழியே வானும், நட்சத்திரம் நன்றாய்த் தெரிந்தது. கார்த்திக்கு நம்பவே முடியவில்லை.

நிச்சயம் இவ்வளவு அழகை, ரசனையான இடத்தை எதிர்ப்பார்க்கவே இல்லை அவள். நட்சத்திர விடுதியில் அறை எடுப்பான் என்று நினைத்திருக்க, நட்சத்திரங்கள் பார்க்கும் வண்ணம் ஒரு அறை. அதுவே ஒரு புதுமையாய இருக்க,

“நிஜமாவே பெரிய சர்ப்பரைஸ். நான் எதிர்பார்க்கவே இல்லை” என்றவளுக்கு சந்தோஷத்தில் குரல் அடைத்தது.

“என் கவிதைக்கு கவிகை மாடம்” என்றான் காளிதாஸன்.

“டோம் தானேங்க, நான் செம ஹாப்பி” என்று காளிதாஸனைக் கட்டிக் கொண்டாள்.

“எஸ், geodesic dome. ஹனிமூன் ஸ்பெஷல்” என்றான் கார்த்தியை வளைத்துக் கொண்டு. சிறிது நேரம் அந்த அணைப்பை, மகிழ்வை அனுபவித்தனர். இரவு உணவு அங்கிருந்த உணவகத்தில் உண்டு முடித்தனர். கார்த்தி பாத்ரும் சென்று வர, அறையில் காளிதாஸனின் போன் வழியே எஸ்.பி.பியின் குரல் ஒலித்தது.

‘மௌனமே பார்வையாய்
பேசி கொண்டோம் நாணமே
வண்ணமாய் பூசி கொண்டோம்’ என்று பாடல் ஓடியது.

“ஓஹ், பாருடா! பாட்டெல்லாம் பலமா இருக்கு. அலெக்ஸாவை மிஸ் பண்றேன் நான்” என்றபடி கார்த்தி அவனருகே படுத்தாள்.

 ‘ஜனனம் தந்தாள்
சலனம் தந்தாள், காதல்
  மொழியில்’  இந்த வரிகள் வரும் போது கார்த்தியின் கையைப் பிடித்த காளிதாஸன்,

“இப்ப ரீசண்டாதான் இந்த பாட்டு கேட்டேன் கண்ணா, இந்த லைன் கேட்கும் போது உன்னைத்தான் நினைச்சேன், நீ கேட்பியே ஏன் இத்தன வருஷம் சிங்கிள்னு? யாரும் எனக்கு இந்த உணர்வெல்லாம் தந்ததில்லை. நீ மட்டும்தான் என்னை காதலை ஃபீல் பண்ண வச்சிருக்க கண்ணா! என்னையே எனக்குப் புதுசா காட்டுற உனக்கு எவ்வளவு தேங்க்ஸ் சொன்னாலும் பத்தாது. அண்ட் இந்த  கார்த்திக்கு மட்டும் தெரிஞ்ச காளிதாஸை எனக்குமே ரொம்ப பிடிக்கும்” என்று உணர்ந்து சொன்னான்.

கார்த்திக்கு உருகிப் போயிற்று. அவன் வார்த்தைகள், வாஞ்சை எல்லாம் மொத்தமாய் அவளை சாய்க்க, கணவன் மீது சாய்ந்து  முத்தங்களை கவிதையாக்கினாள், சிணுங்கல்களை சந்தங்கள் ஆக்கினாள்.

✅ End of Episode 30
How did you feel about this episode?
❤️ 4 more...

You must Log in or Register to react here

💬 5 Replies
Mrs Beena loganathan Reader 3 days ago

காதல் காதல் காதல்

காளிதாசன் காதல்
கார்த்தியின் காதல் 
காதலில் கசிந்துருகி
காதலில் விழித்து 
காதலில் மூழ்கி 
காதலில் திளைத்து
காதல் கொண்டேன் 
காதலே.....
❤️ 2 more...
Kavi Natarajan Reader 3 days ago

💞💞💞💞💞💞💞

❤️ 1 more...
Srichitra Reader 2 days ago

Beautiful  place.  அனுபவித்து எழுதியிருக்கிறீர்கள். ரசிக்கலாம்.

❤️ 1 more...

En husband oda Birth place ☺️☺️ma. Nearby Kasol

@Srichitra 

❤️ 1 more...
Srichitra 1 day ago

@Pavithra Narayanan   super.

❤️ 1 more...
Log in or Register to reply

🔗 Insert Link

Scroll to Top