Episode 17
“இதான் உங்க ப்ளேலிஸ்டா?” என்று கேட்க, “இதுவும் ஒன்னு. நிறைய இருக்கு” என்றான்.
“உங்களுக்கு இளையராஜா பிடிக்குமா? இல்லை ரஹ்மான் பிடிக்குமா?” என்று கார்த்தி கேட்க, அவள் கேட்டதின் அர்த்தம் நன்றாய் விளங்கியது காளிதாஸனுக்கு.
அதனால் வேண்டுமென்றே, “எனக்கு எம்.எஸ்.வி பிடிக்கும்” என்று சொல்ல, கார்த்தியின் முகமே குழம்பி விட்டது. என்னவோ அவனுக்கும், இவளுக்குமான வயது இடைவெளி பெரிதாய்த் தாக்கியது.
இதையெல்லாம் அவள் பெரிதாக நினைக்கவில்லை. இருந்தும் இருவருக்கும் ஒத்த ரசனை இருந்தால் சந்தோஷம்தானே என்ற எண்ணத்தில் கேட்டுவிட, ஏனடா கேட்டோம் என்று எண்ண வைத்தான் அவன் பதிலில். பொதுவான ரசனைகள் கூட எங்களுக்குள் இல்லையென்றால் வாழ்க்கை எப்படி போகுமோ என்று எதிர்காலமும், எதிர்ப்பார்ப்பும் சேர்ந்து அச்சமூட்டியது அக்கணம்.
அவனிடம் அதனைப் பகிரவும் பயமாக இருந்தது, தவறாக எடுப்பானோ என்று. அதையும் மீறி அவளின் காதல் அவனைக் காயப்படுத்தக் கூடாது என்று அமைதியானாள்.
கார்த்தியின் முகபாவனைகளைக் கண்டு இவனுக்கு உள்ளே சிரிப்பு எழ, “அப்புறம் டிகே ராமமூர்த்தி பிடிக்கும், கேவி மகாதேவன், ஏன் தியாகராஜ பாகவதர் வாய்ஸ் கூட பிடிக்கும்” என்றதும்,
“அவங்களாம் யாரு?” என்று கார்த்தி கேட்ட விதத்தில் அடக்கியிருந்த சிரிப்பு ஆர்ப்பாட்டமாய் வெளிப்பட்டது.
“அச்சோ! கண்ணா, எவ்வளவு டென்ஷன் உனக்கு?” என்று சொல்லி அவள் அருகே வந்து படுத்துக் கொண்டவனின் விரல்கள் மெத்தையில் பாடலுக்கு ஏற்ப தாளமிட்டது.
“என்ன டென்ஷன் எனக்கு?” என்று அருகே இருந்தவனின் முகம் பார்த்து கார்த்தி கேட்க அவளின் கையைப் பிடித்தவன்,
“எனக்கு ரஹ்மானும் பிடிக்கும். ஏன் அனிருத் கூட பிடிக்கும். எனக்குக் கலைஞரை விட கலைதான் முக்கியம். யார் நல்ல பாட்டு போட்டாலும் கேட்பேன்” என்றான்.
“இல்லை, நான்” என்று கார்த்தி தடுமாற,
“கண்ணா, உனக்குப் பிடிச்சது எனக்குப் பிடிக்கணும்னு அவசியம் இல்லை, உன் விருப்பம், அதை நான் மதிக்கணும். அது எனக்குப் பிடிக்கணும்னு நினைக்கிறது தப்பு. ஒரே அப்பா, அம்மாவுக்குப் பொறந்த பசங்களுக்குக் கூட ஒன்னா ரசனை இருக்கிறது இல்லை” என்றதும்,
“இல்லை, இல்லைங்க. இப்படி சிலது ஒன்னா இருந்தா நமக்கும் பேச விஷயம் இருக்குமே நினைச்சேன். ப்ளீஸ், தப்பா எடுக்காதீங்க” என்றாள் பதற்றமாக.
“ஹேய் கார்த்தி! என் கூட இருக்கும் போது நீ தைரியமா இருப்ப சொன்னதானே? அப்புறம் ஏன்மா பயப்படுற? நம்ம ரசனைகளைப் பகிர்ந்துக்கலாம், பிடிச்சா ஏத்துக்கலாம். இல்லையா விட்டுடலாம்” என்று அவன் புன்னகையும், பொறுமையுமாகச் சொல்ல,
“என்னோட எல்லா ப்ராப்ளம்க்கும் நீங்க பதிலா இருந்துடுறீங்க, தேங்க்ஸ்” என்றாள்.
தலையசைத்தவன், “ரசனைகள் மாறினா தப்பில்ல, அன்பு இருந்தா போதும் கார்த்தி. இந்த ஏஜ்ல இருக்கவங்க இதைத்தான் ரசிப்பாங்கன்னு நினைக்கிறதே தப்பு, எங்களுக்கும் நித்திக்கும் அஞ்சு வயசு வித்யாசம், எனக்கும் கவிக்கும் ஒரே டேஸ்ட். ஆனா, நித்தி அவ எல்லாத்துக்கும் அப்படியே ஆப்போஸீட். ஸோ இதெல்லாம் பெரிய விஷயமே இல்லை” என்றான்.
“இப்படியே பேசிட்டே இருங்க, எனக்கு நல்லா தூக்கம் வருது” என்று கார்த்தி கிண்டலாய்ச் சொல்லி கண்களை மூடிக் கொள்ள,
“க்ரேஸீ!” என்று சொல்லி அவனும் உறங்கிப் போனான்.
அடுத்த நாள் காலையில் கார்த்தி குளித்து விட்டு வரும் போது காளிதாஸன் அறையில் இல்லை. இவள் புடவைக் கட்டிவிட்டு தலையை உலர்த்த ட்ரையர் தேட, அப்போது உள்ளே நுழைந்தான் காளிதாஸன்.
அவனும் குளித்து ரெடியாக இருந்தான். ஜீன்ஸ், வெள்ளை சட்டை என இருந்தவன் கார்த்தியைக் கண்டு,
“குட் மார்னிங் கண்ணா! கால் வலி ஓகேவா?” என்று கேட்க, “இப்போ குறைஞ்சிருக்கு” என்றாள்.
“சரி, சாப்பாடு சொல்லிட்டேன். வந்திடும்” என்றவன், “பாட்டு போட்டுக்கலாமா? இல்லை உனக்கு டிஸ்டர்ப் ஆகுமா?” என்று அனுமதி கேட்க,
“போடுங்க” என்றவள், “ஹேர் ட்ரையர் இருக்கா?” என்று கேட்டாள்.
யோசித்தவன், “ஸாரிடா, எனக்கு அது தேவையில்ல வாங்கல. பத்து நிமிஷம் தலைக் காய்ஞ்சிடும். அப்புறம் போய் உனக்குத் தேவையானதை எல்லாம் வாங்கிடுவோம். இப்போ டவல் யூஸ் பண்ணிக்கிறியா?” என்று காளிதாஸன் கேட்க,
“பரவாயில்லை. இப்போ அவசரமா எங்கேயும் போகலதானே? நான் டவல் யூஸ் பண்ணிப்பேன்” என்றாள்.
“ம்ம், மதியம் கவி வீட்ல நமக்கு லஞ்ச். இப்போ எங்க போகணும் சொல்லு? நம்ம சாப்பிட்டு போகலாம்” என்று கேட்க,
“கோவிலுக்குப் போவோமா?” என்று கார்த்தி ஆர்வமாய்க் கேட்க, சரியென்றான்.
கார்த்தி தலையைத் துவட்டியவள், காளிதாஸனைக் கடைக்கண்ணால் பார்த்துவிட்டு தனக்குள்ளாகவே சிரிக்க,
“என்ன கார்த்தி தனியா சிரிக்கிற?” என்றதும் அவளின் சிரிப்பு அடங்கியது.
“ஒன்னுமில்லையே” என்று அவள் மழுப்ப, அவள் அருகே வந்து நின்றவன், “இருக்கு, என்ன சொல்லு” என்று கேட்க,
“தப்பா எடுப்பீங்க வேண்டாம்” என்றாள் கார்த்தி தயங்கிய குரலில்.
“கண்ணா! ப்ளீஸ், நான் முன்னாடிதான் யாரோ, இப்ப நீயும் நானும் ஹஸ்பண்ட் அண்ட் வைஃப். ஏன்னு சொன்னா நானும் சிரிப்பேன் தானே? இல்லை பெர்சனல்னா விடு” என்று சொல்லி அவன் விலக,
“சொல்றேன்” என்றவள், “நேத்துதான் நமக்குக் கல்யாணம் ஆச்சு, நீங்க இன்னிக்கு குட் மார்னீங்காச்சும் ரொமாண்டிக்கா சொல்வீங்க நினைச்சேன். நீங்க ஃபார்மலா சொல்லி என்னை விசாரிக்கவும் நம்ம குழந்தை என்னை அம்மான்னு கூப்பிடாது, பாட்டின்னு சொல்லும் நினைச்சேன் சிரிப்பு வந்துடுச்சு” என்று மெல்ல சொல்லி தரையைப் பார்க்க, அவளின் பாவனையும் கற்பனையும் அவனுக்குமே சிரிப்பை வரவைக்க, கார்த்திக்கும் அவன் சிரிப்பதைக் கண்டு சிரிப்பு வர, இருவருமே பார்த்து பார்த்து வாய்விட்டு சிரித்தனர்.
அவளின் அருகே உட்கார்ந்த காளிதாஸன், “அப்படி எல்லாம் நம்ம குழந்தை சொல்லாது. நேத்து பாவமே கால் வலியேன்னு விட்டா கார்த்திமா என்னையே கலாய்க்கிறீங்க?” என்று கேட்டு அவளின் காதை திருக,
“அச்சோ! தாஸ் வலிக்குது, விடுங்க” என்று அவள் சொல்ல,
“ஏன் இந்த ரொமாண்டிக் குட் மார்னிங் எல்லாம் நான் மட்டும்தான் சொல்லணுமா? எனக்கும் நேத்துதான் கல்யாணம் ஆச்சு, என் பொண்டாட்டி கூட எனக்கு அப்படி ஒரு ரொமாண்டிக் குட்மார்னிங் சொல்லலாமே” என்று காளிதாஸன் கண்சிமிட்ட,
“முத்தம் என்னடி
முத்து பெண்ணடி” என்று எஸ்பிபி வேறு காலை நேரத்தில் ஹை பிட்சில் பாட காளிதாஸனுக்குக் கேட்டிருந்த பாட்டில் இன்னுமே புன்னகை விரிந்தது. அவனும் கூட சேர்ந்து,
“முத்தம் என்னடி? முத்து பெண்ணடி” என்று புருவம் தூக்கி அருகே இருந்த மனைவியைப் பார்க்க, அவளோ இவனின் இந்த அவதாரத்தில் அதிசயித்து இருந்தாள்.
“உங்களை என்னால புரிஞ்சிக்கவே முடியல. இப்படியெல்லாம் பேசுவீங்க நான் நினைக்கல” என்றாள்.
“எல்லார்கிட்டவும் இப்படி பேச முடியுமா? இது கார்த்திக்கு மட்டும் தெரிஞ்ச காளிதாஸன், கார்த்தியால மட்டும்தான் இந்த காளிதாஸன்” என்று அவள் தோளில் கைப் போட்டு அருகே இழுத்து காதோரம் சொல்ல, கார்த்திக்கு அந்த நேரம் ரொமாண்டிக் மார்னிங் ஆகவே மாறிப் போனது. கார்த்தி அவன் தோளில் சாய்ந்து அமைதியாக இருக்க,
“ஹலோ! என்ன அப்படியே சாய்ஞ்சு தூங்குறீங்க? சீக்கிரம் எனக்கு ரொமாண்டிக்கா குட் மார்னிங் சொல்லுங்க” என்று கார்த்தியிடம் சொல்ல அவள் தயங்க,
“என்னமோ கார்த்தி ரொம்ப தைரியம் நினைச்சேனே?” என்று சீண்ட, கார்த்திக்கு உடனே ரோஷம் வர, அவன் முகமருகே நெருங்க, நெருங்கியதுதான் அவள். தொடங்கியது அவனானான்.!
முதல் முத்தம்!
காதல் சந்தம் சிந்திய காதல் பொழுதாக, கார்த்தி விரும்பிய பொழுதாக காளிதாஸன் அதனை மாற்றினான். அவள் இதழில் இருந்து விலகியவன்,
“இன்னிக்கு நைட் கார்த்தி பார்க்காத ஒரு காளிதாஸனைப் பார்ப்பா” என்று சொல்லி அவன், அவள் கைப் பிடித்து எழுப்பிவிட, கார்த்திக்கு வெட்கத்தில் முகம் சிவக்க அவன் தோளில் முகம் புதைத்தாள்.
ஆவலாய் எதிர் நோக்கிய பொழுது, அழுகையில் முடியுமென கார்த்தி அப்போது நினைக்கவில்லை.
தினமும் இரண்டு பதிவுகள் வரும் friends, STAY TUNED.
Read and Share your thoughts
✅ End of Episode 17
கண்ணா இரண்டு லட்டு
Nice
Very nice ud ma 💞💞💞💞💞