Episode 31
“கண்ணா, சீக்கிரம் ரெடியாகு” என்று கார்த்தியை அவசரப்படுத்தினான் காளிதாஸ்.
“தூங்க விடாம காலங்காத்தால எழுப்பிட்டு, சீக்கிரம்னு ஆர்டர் வேறயா?” முணுமுணுத்தாலும் டாப்ஸீன் மீது ஸ்டோலை சுற்றிப் போட்டுத் தயாரானாள். ஜீன்ஸ், டாப்ஸ், அதற்கு மேல் ஸ்டோல் என்று இருந்த மனைவியின் தோற்றத்தை ரசித்தவன்,
“ஏதோ குறையுதே..” என்று சொன்னவன், வெளீர் ஊதா நிறத்தில் இருந்த தொப்பியை அவள் தலையில் வைத்து,
“பெர்ஃபெக்ட்! இளவரசி மாதிரி இருக்க” என்றான்.
“எங்க வாங்குனீங்க?” என்று தொப்பியை சரி செய்தபடி கேட்க,
“நேத்து வரும் போது நீ தூங்கினப்ப வாங்கினேன். மது பாப்பாவுக்கு ஒன்னு வாங்கினேன். அப்படியே என் பாப்பாவுக்கும்” என்றவன் கார்த்தியை அணைத்துப் பிடித்து,
“உனக்கு ஒரு அழகான இடம் காட்டணும், கூட்டமில்லாம இருந்தாதான் அதை ரசிக்க நல்லா இருக்கும். அதான் அவசரப்படுறேன்” என்றான். மணி ஏழுதான் ஆனது.
“ஒன்னு சொல்லவா? எந்தவொரு இடமும் அழகா இருக்க காரணம் கூட இருக்கவங்கதான். அப்படி இருக்கும்போது உங்ககூட வந்தா எப்பவும் நான் ரசிப்பேன்” என்றாள் கார்த்தி உணர்ந்து.
“கிரேஸி கேர்ள்!” என்றவன், அவள் கைப்பிடித்து அந்த கவிகை மாடம் விட்டு வெளியே அழைத்து வந்தான். கார்த்திக்கு அந்த ஊரின் மென்மையான குளிரும், அந்த காலை நேர சில்லென்ற பனியும், பருவமழைக் காலமென்பதால் காற்றில் நிலவிய குளிர்ச்சியும் அவ்வளவு பிடித்தது. காளிதாஸனின் கையோடு தன் கை கோர்த்தவள்,
“செல்ஃபி எடுப்போம்” என்று அவனோடு வழியெங்கும் படம் பிடித்தாள்.
இருபக்கமும் மலை, நடுவே நதி. பச்சை, பசுமை எங்கும்! அவ்வளவு மரங்கள் நதியின் கரையில். வானும் நீலம், நதியும் அப்படியொரு தூய்மையான நீர். மலைகளின் நடுவே இளம் செந்தூர நிறத்தில் சூரியன் மெல்ல தெரிந்தது. கடினமான பாறைகளின் மீது பாய்ந்தோடியது கசோலின் பார்வதி நதி.
இயற்கையின் ஜாலம் எங்கெங்கிலும்!
இவர்கள் போன போது இரண்டு பேர் மட்டுமே நதியின் கரையில் செல்ஃபி எடுத்துக் கொண்டிருந்தனர். கார்த்திக்கு, அந்த இடத்தைப் பார்க்கவும் அவ்வளவு பிடித்தது. நீரின் ஓசை மட்டுமே நதியின் சங்கீதமாய்.
“இதான் பார்வதி ரிவர். கசோலை இந்தியாவோட amsterdam சொல்லுவாங்க. இங்க பார்க்க நிறைய இடம் கிடையாது கண்ணா. ஆனா, பார்க்கிற இடமெல்லாம் அழகுதான்” என்றான் நதிக்கரையில் நடந்தபடி.
“என்ன கார்த்தி மேடம்? பிடிச்சிருக்கா ஹனிமூன்?” என்று காளிதாஸன் சிரிப்புடன் கேட்க,
“ரொம்ப பிடிச்சிருக்குங்க, நான் எதிர்ப்பார்க்கவே இல்லை. லவ்லி!” என்றாள்.
“உனக்குப் பிடிச்சதுல எனக்கும் சந்தோஷம்டா. தண்ணீயில கை வைக்கிறியா, பனிப்பாறை உருகி அதுல வர நதி. கொஞ்சம் ஜில்லுனு இருக்கும். ஃபீல் இட்” என்றான்.
அந்த நதிக்கரையில் இருந்த பாறையில் அமர்ந்தபடி புகைப்படங்கள் எடுத்த கார்த்தி, அதனை இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் பதிவேற்றினாள்.
“ஒரு போட்டோ எத்தனை தடவ எடுப்ப கார்த்தி, கொஞ்சம் நடந்துட்டு ரூம் போய் சாப்பிடலாம்” என்று காளிதாஸன் மனைவியைப் பார்க்க,
“நான் இன்ஸ்டாவுல ஸ்டோரி போடுறேன்” என்றாள் கார்த்தி.
“இந்த உலகத்துல ஈசியான விஷயம் என்ன தெரியுமா கண்ணா?” என்று காளிதாஸன், மனைவியை அருகே அழைத்து கேட்க,
“நீங்களே சொல்லிடுங்க” என்று அவன் கையோடு கைக் கோர்த்தாள்.
“சந்தோஷமா இருக்கறது, அதே நேரம், கஷ்டமான விஷயம் அதுவும் சந்தோஷமா இருக்கிறதுதான்” என்று சொன்ன கணவனை விழிகளை உருட்டிப் பார்த்தவள்,
“தெளிவா குழப்புறது இதானா பாஸ்?” என்று கேட்டாள்.
“இல்லை! சந்தோஷமா இருக்கிறது ரொம்ப ஈசி, அடுத்தவங்களை விட சந்தோஷமா இருக்கணும் நினைக்கிறதுதான் தப்பு. கஷ்டமும் கூட, நம்ம சந்தோஷம் எதுன்னு நம்மதான் முடிவு செய்யணும். நம்ம திருப்திக்கு மெமரீஸ்க்கு போட்டோ எடுக்கிறோம், அதை ஏன்மா சோசியல் மீடியாவுல போடணும்? ” என்று கேட்க, கார்த்தி அவனை யோசனையாகப் பார்க்க, உடனே,
“தட்ஸ் மை ஓபினியன் கண்ணா! உனக்கு அது விருப்பம்னா போட்டுக்கோ” என்றான், அவளின் எண்ணங்களுக்கும் மதிப்பளித்து.
“நீங்க இதை பெருசா எடுக்க மாட்டீங்கன்றதால சொல்றேன்ங்க. நம்ம மேரேஜ் முடிஞ்சப்போ என் ப்ரண்ட்ஸ்லாம் ஏன் இப்படின்ற மாதிரி ரொம்ப பேசினாங்க. என்ன ஆச்சுன்னு என்னோட நியாயம் கேட்கக் கூட இல்லை. அதான், பாருங்க என் ஹஸ்பண்ட் எவ்வளவு ரொமாண்டிக், ரசனைக்காரர்னு காட்டணுமேன்னு…” என்று கார்த்தி இழுக்க, காளிதாஸன் சிரித்தான்.
“அப்போ அடுத்தவங்களுக்காகத்தான்..” என்று அவன் கேட்க,
“இந்த இடம் தெரியாதவங்களும் தெரிஞ்சிக்கட்டுமேனு ஒரு பொது சேவைதான்” என்றாள் குறும்புப் பார்வையுடன்.
“கண்ணா! நான் எப்படினு உனக்கு மட்டும் தெரிஞ்சா போதும்மா. மத்தவங்களுக்குத் தெரியவே வேண்டாம், எப்படி இருந்தாலும் குறை சொல்றவங்க இருப்பாங்க. நீ நிஜமா சந்தோசமா இருக்கியா அதை சொல்லு?” என்றதும் கார்த்தி முறைத்தாள்.
“என்ன கேள்வி இது? சந்தோஷமா தெரியலையா என்னைப் பார்த்தா?” என்றாள் சிடுசிடுப்பாக.
“சரி, சரி கோவப்படாத. வா, உன் ஆசைக்காக ஒரு செல்ஃபி எடுத்து உன் ப்ரண்ட்ஸை வெறுப்பேத்தலாம்” என்றான் சிரிப்புடன். அவள் தோள் மீது கைப் போட்டு கார்த்தியின் போனை உயர்த்திப் பிடிக்க,
“வேண்டாம், வேண்டாம்! இவ்வளவு அழகான ப்ளேஸ் எல்லாம் ஒருத்தியும் போனதில்ல, இந்தியாவுல இப்படி இருக்குன்னு கூட தெரியாது. அதுவும் நம்ம ரூம், தட்ஸ் ஆவ்சம். அதெல்லாம் பார்த்தா பொறாமைப்படுவாங்க. கண்ணுபடும்” என்றவள்,
“இன்ஸ்டாவுல வேண்டாம். நார்மல் கேம்ல பிக் எடுப்போம்” என்று கார்த்தி சொல்ல, காளிதாஸனுக்கு அடக்க முடியாத சிரிப்பு. கஷ்டப்பட்டு சத்தம் குறைத்தான்.
“என்னவெல்லாம் யோசிக்கிற நீ?” என்று தொப்பியோடு அவளின் தலையைப் பிடித்தான்.
“அச்சோ என் கேப்” என்று கார்த்தி சிணுங்க,
“யூ லுக் கிரேட்!” என்றான், அதனை சரியாய் வைத்து.
“எனக்கும் உன்னோட பிக் போன்ல வைக்க ஆசைதான் டா. பட் தேவையில்லாத பிரச்சனை வரும். இப்போ நிறைய விஷயம் நம்ம போன்லயே வச்சிடுறோம். அது காணாம போகும்போது உயிரே போற அளவு ஃபீல் பண்றோம். அதனால, நான் என் போன் தொலைஞ்சி போனா கூட கவலைப்படக் கூடாதளவுதான் டேட்டா வச்சிருப்பேன். ஒன்லி நம்பர்ஸ், வேற முக்கியமானது ஒன்னுமில்லை. கேமிராவுல எடுத்து ஆல்பம் போடுறதுதான் நல்லது, தொட்டுப் பார்த்து ஃபீல் பண்ணலாம், பெர்சனல் போட்டோ எதுவும் போன்ல வைக்காத கண்ணா எப்பவும்” என்றவன்,
“சாரி, ரொம்ப அட்வைஸ் பண்றேன்” என்றான்.
“இல்லை, இல்லை. நீங்க சொல்றதும் சரிதான்” என்று உடனே ஒத்துக் கொண்டாள் கார்த்தி. அவன் சொல்வதிலும் அர்த்தம் இருக்கிறதே, புகைப்படங்கள் நினைவின் சின்னங்கள். அதற்கு அவன் மறுப்பு சொல்லவில்லையே, அதனை எல்லாம் பொதுவெளியில் போடாதே என்றுதானே சொல்கிறான். அவன் அரசியலில் இருக்கிறான், பப்ளிக் ஃபிகர்! அதனால், எல்லாம் யோசித்து நடக்க வேண்டும் என்று முடிவு செய்தாள் கார்த்தியாயினி. அவள் யோசனையில் இருக்க,
“ஹே கண்ணா! எல்லாத்துக்கும் சரி சொல்லாத, டக்குனு பேச்சு முடிஞ்சு போகுது பாரு. பதில் பேசணும், அப்போதானே பேச்சு வளரும்…” என்றான் ரசனையாக.
“ஓஹோ!!” என்றவளுக்கு கணவனின் மீதான காதல் நாளும் பெருகிக் கொண்டே போனது. என்றுமே இந்த உணர்வு தீராது என்று மனம் சொன்னது.
“அப்படியெல்லாம் கார்த்தி ஈசியா ஒத்துக்க மாட்டா யார் சொன்னாலும். ஆனா, நீங்க சொன்னா சரியா இருக்கும்னு எனக்குத் தெரியும். தப்பா இருந்தாலும் நீங்க சொன்னா நான் கேட்பேன். இதுக்கு ஒன்னும் அட்வைஸ் பண்ணக்கூடாது” என்றதும் சிரித்து விட்டான்.
“ஓகே கண்ணா, டைம் ஆச்சு. வா சாப்பிடலாம்” என்று கார்த்தியை அங்கிருக்கும் கஃபே ஒன்றுக்கு அழைத்துப் போனான்.
அவளுக்காக சுட சுட சாக்லெட் ப்ரவுனி சிஸ்லர் வர வைத்தான்.
“எனக்குப் பிடிக்கும்னு எப்படி தெரியும்? நான் சொன்னதே இல்லையே?” என்று கார்த்தி யோசிக்க, அவனிடம் கள்ளச்சிரிப்பு.
✅ End of Episode 31
தாஸ் thought thaan எங்க வீட்டு owner kkum..... நம் சந்தோசம் நம்மோடு.... உனக்கு மட்டும் தெரிந்த என்னை உனக்குள் வைத்து கொள்...
House owner ??
@Pavithra Narayanan house wife kku owner house owner என்று அழைக்கப்படுகிறார்😂😂😂😂🔥❤️
@Mrs Beena loganathan ohhh unga owner ahh 😂😂😂😂
Das story epo padichlum 1st time padikira mathiri.....semma feeling🥰🥰
Enjoy 😍
Super point. Very nice