Episode 32
“ஸார் ஏதோ திருட்டுத்தனம் பண்ணிருக்கார் தெரியுது. என்னனு சொல்லுங்க” என்று அவனை செல்லமாய் மிரட்டினாள் கார்த்தி. உண்மையை சொல்ல வேண்டுமானால் வெகு மாதங்களுக்குப் பிறகு அவ்வளவு மகிழ்ச்சி, அளவீடா ஒரு ஆனந்தம் அவளுக்கு. பேரின்பத்தில் திளைத்திருக்க, முகத்திலே அந்த சந்தோஷம் மின்னியது.
“இன்ஸ்டால உன் ப்ரோஃபைல் பார்த்தேன். உன் போட்டோ விட இதான் அதிகம் இருந்தது” என்றதும்,
“ப்ராடு நீங்க! என்னை ஸ்டாக் பண்ணியிருக்கீங்களா?” என்று கேட்டாள்.
“வைஃபை ஃபாலோ பண்ணினா ஸ்டாக் பண்றதா கண்ணா? ஹனிமூன் ப்ளான் பண்ணும் போதே கொஞ்சம் வொர்க் பண்ணினேன். உன்னைக் கேட்டாலே நீ என்ன வேணும் சொல்லுவதான். ஆனாலும், நானே உனக்காக செஞ்சா நீ சந்தோஷப்படுவதானே? அதான் இந்த வேலையெல்லாம் செஞ்சேன்மா” என்று சொன்ன காளிதாஸனைக் காதலாகப் பார்த்தவள்,
“நான் உங்களுக்காக ஒன்னுமே செய்யல” என்றாள் சின்னக்குரலில்.
“ஒன்னும் செய்யலயா? வாட்? கண்ணா! என்ன பேசுற நீ? நிஜமா சொல்றேன் உன்னோடு யார் இருந்திருந்தாலும் கண்டிப்பா அவங்க சந்தோஷமா இருந்திருப்பாங்க. ஆனா, என் கூட இருக்கிறது கஷ்டம், என்னால என்னை மாத்திக்கவும் முடியாது, பட், நீ என்னை இந்தளவு ரசிக்கிற, என்னையும் எல்லாத்தையும் ரசிக்க வைக்கிற. யூ ஆர் ஸ்பெஷல், எல்லா வகையிலும். கல்யாணம் செய்ய எனக்கு இன்ட்ரஸ்ட் இல்லை. அரசியல் ஆர்வம் எல்லாம் தாண்டி யார்கிட்டவும் இப்படி ஒரு ஃபீல் வந்ததே இல்லை. சொல்லப்போனா ஒவ்வொரு நாளும் இந்த ஃபீல் அதிகமாகுது. உன்னோட என் நாட்கள் ரொம்ப அழகானதுடா” என்றான் உணர்ந்து.
அன்று முழுவதும் வெளியே சுற்றினர் காளிதாஸும், கார்த்தியும். சுற்றிப்பார்க்க அவன் சொன்னது போல் பெரிதான இடங்கள் இல்லையென்றாலும், ஊரின் இதமான வானிலைக்கும் கார்த்தி இருந்த காதல் நிலைக்கும், கணவனின் அருகாமையில் மகிழ்வுடனிருந்தாள்.
மாலை போல் அவர்கள் இருந்த dome வர, அந்த இடத்தில் இருந்து பார்த்தால் மலை நன்றாகவே தெரிந்தது. வெளிச்சத்திற்காக நிறைய மஞ்சள் விளக்குகள் ஒளிர்ந்திருக்க ரம்யமாக இருந்தது அவ்விடம். மெல்ல பனிபுகை .
அந்த மாடத்தின் மேற்கூரை வழியே பார்த்தால் வானம் தெரியும். வேண்டாம் என்றால், அதற்கென இருக்கும் ஸ்கீரினை இழுத்து விடலாம். இருவருமே தலையணையில் சாய்ந்தபடி உட்கார்ந்து வானத்தை வேடிக்கைப் பார்த்தனர்.
“என்னாச்சு என் கவிதைக்கு? அமைதியாவே இருக்காங்க” என்று அவள் கன்னத்தைப் பிடிக்க, அவன் தோளில் சாய்ந்தவள்
“உங்களை முதல் தடவ பார்த்த பின்னாடி உங்களை சந்திச்சிருக்கவே கூடாது நினைச்சேன். ரொம்ப கஷ்டமா இருந்தது அந்த நாட்களைக் கடக்க. எதுவுமே தெரியலன்னா கூட நிம்மதியா இருந்திருக்கலாம்னு நினைச்சிருக்கேன். அப்புறம்தான், அதெல்லாம் தப்புன்னு புரிஞ்சது. வாழ்க்கைன்ற எவ்வளவு உண்மையா வாழ்றோம்ன்றதுலதான் இருக்கு. ஏன் வாழணும் நினைச்சிட்டு இருந்த எனக்கு வாழ அர்த்தம் கொடுத்ததுக்கு ரொம்ப தேங்க்ஸ்” என்றபடி அவனை இறுக்கியணைத்துக் கொண்டாள் கார்த்தி.
அவளை ஆதுரமாக அணைத்த காளிதாஸன், “உன்னைக் கஷ்டப்படுத்துற எதையும் நினைக்காத கண்ணா” என்றான்.
“இல்லை! அதை தாண்டி இன்னிக்கு இப்படி சந்தோஷமா நான் ஒரு லைஃப் லீட் செய்வேன் நினைக்கவே இல்லைங்க. அதான்” என்றாள் கார்த்தி உணர்வுப்பூர்வமாக.
“நாட் அட் ஆல்!” என்று மனைவியை மடியில் அமர்த்திக் கொண்டவன்,
“காதலித்துக் கெட்டுப் போன்னு ஒரு கவிதை நா.முத்துக்குமாரோடது. அதுல சில லைன்ஸ் வரும், என் லைஃப்ல என்னைக்குமே வராது நினைச்ச விஷயம் அதெல்லாம்” என்றவன் அந்த கவிதையை வாசித்துக் காட்டினான்.
“ஆனா, உன்னால நிறைய அதுல நிறைவேறிடுச்சு” என்று அவள் காலை மெல்ல பிடித்தவன்,
“ஹே! கண்ணா! உன் கொலுசு எங்க?” என்றான்.
“அது ஜீன்ஸ் போடுறதால நம்ம வீட்லயே வச்சிட்டு வந்துட்டேன்” என்றதும்,
“மேகமென கலை
மோகம் வளர்த்து மித
மதி கெட்டு மாய்
கவிதைகள் கிறுக்கு
கால்கொலுசில் இசை உணர்
தாடி வளர்த்து தவி
எடை குறைந்து சிதை“
என்று காளிதாஸன் கவிதைப் படித்தான்.
அவன் கவிதைப் படிப்பது ஒன்றும் புதிதல்ல! வீட்டில் இருக்கும்போது அவளிடம் கவிதைப் படித்திருக்கிறான், அவளையே கவிதையாய்ப் படித்திருக்கிறான்.
ஆனால், இந்த அனுபவம் புதிது! குளிருக்கு இதமாய் இருந்த அறை, மேலே வான்! அதில் வீண்மீன்! காளிதாஸன் மடியில் கார்த்தி, காதருகில் கணவனின் குரலில் காதலாய் ஒரு கவிதை!
வாழ்க்கையில் ஒவ்வொரு நொடியும் விரக்தியில் வாழ்ந்த காலம் போய், இன்று அத்தனை ரசித்து நொடிகள் நீளாதோ, நாட்கள் நீளாதோ என்று வாழ வைத்தான் காளிதாஸன்.
“உளறல் வரும் குடி
ஊர் எதிர்த்தால் உதை
ஆராய்ந்து அழிந்து போ
மெல்ல செத்து மீண்டு வா
திகட்ட, திகட்ட காதலி..” என்றவனின் இதழ்கள் காதோரம் உரசின. காதல் கவிதை, காதலாய் கவிதை என்று கார்த்தியை உணரச் செய்தான் காளிதாஸன்.
அவன் சொன்ன கவிதையில் லயித்திருந்தவள், “உளறல் வரும் குடியா?” என்று கணவனை முறைத்தாள்.
“கார்த்தி! அந்த பழக்கமெல்லாம் கிடையாதுடா. என்னோட கோதையும் நீயே, போதையும் நீயே” என்றவனின் குரலில் நிச்சயம் போதைதான்.
கோதையினால் உண்டான மயக்கம்தான்! மையல் மையம் கொள்ள, இடையின் இடைவெளிகளில் இசை மீட்டினான் காளிதாஸன்.
“திகட்ட திகட்ட காதலின்னு சொன்னாரே, அதை நோட் பண்ணு கண்ணா, வாழ்க்கையில நிறைய அனுபவம் இருக்கணும் நினைக்கிறவன் நான். உயிர்ப்போடு புதுசா ஒவ்வொரு நாளும் பார்த்து வாழணும் ஆசை எனக்கு, இந்த லைன் படிச்சப்போ திகட்டினா காதல் எப்படி இனிக்கும் தோனுச்சு, சிலதை எல்லாம் அனுபவிக்கணும் போல உணர… இல்லையா?” என்றவனின் முத்தங்களில் மூழ்கினாள் மனைவி. அதன்பின் முத்தங்களின் சத்தங்கள் மட்டுமே அறையெங்கிலும்.!!
அங்கிருந்த நான்கு நாட்களும் கார்த்திக்கு வாழ்வில் என்றுமே மறக்க முடியாது.
************
ஊருக்கு வந்து ஒருவாரம் ஆகிவிட்டது. பதவியேற்பு விழா முடிந்த பின் காளிதாஸனை வேலைகள் இழுத்துக் கொண்டன. மந்திரி பதவி இல்லையென்றாலும் நிறைய குழுக்களில் உறுப்பினராகவும், தலைவராகவும் நியமிக்கப்பட்டான். கார்த்தி இப்போது வீட்டில் இருப்பதில்லை, முடிந்தவரையில் அவளும் தன்னை வேலைகளில் ஈடுபடுத்திக் கொண்டாள்.
அவர்களின் அலுவலகம் அவள் பொறுப்பு. கூடவே சிவகாமி அம்மாவுடன் இணைந்து பொதுப்பணிகளிலும் ஈடுபட்டாள். முன்பும் இப்படி செய்வாள். ஆனால், பணமாக மட்டும் இருக்கும். இருக்கிறது, கொடுக்கிறோம் என்ற பண்போடு செய்தவள் இப்போது மிகவும் ஆத்மார்த்தமாய் செய்தாள். சமூகத்தில் அவல நிலையில் இருக்கும் பெண்களுக்குத் தன்னால் முடிந்த உதவிகள் நிறைய செய்தாள்.
காளிதாஸன் சட்டசபை கூடுவதால் சென்னையிலேயே இருப்பான்.
கார்த்திக்குக் கணவனுடன் நிறைய நேரம் இருக்க வேண்டும் என்ற ஆவல் உண்டு. என்றாவது கோபம் வந்து கத்தினாலும் காளிதாஸன், அவளை உணர்ந்து பொறுமையாகவே பேச்சை வாங்கிக் கொள்வான். அன்றும் அப்படியே.
“திட்டுறேனே, பதில் பேசுறீங்களா நீங்க? தனியா கத்துறேன் தானே?” என்று கத்தினாள்.
“திட்டிட்டா உன் மனசு ரிலாக்ஸ் ஆகிடும் கார்த்தி, இல்லைனா இரண்டு வார்த்தை வெளியே வரும், திட்டாத வார்த்தையெல்லாம் சேர்ந்து உன்னை இன்னும் டென்ஷன் செய்யும்டா” என்றவன் மீது தலையணையை விட்டு எறிந்தாள்.
“அப்போ உங்க மனசு என் திட்டை கண்டுக்கவே இல்லை” என்று சொல்லி வயிற்றைப் பிடித்துக் கொண்டு சுருண்டு விட்டாள். ப்ரீயட்ஸ் சமயத்தில் அவளுக்கு வலி அதிகமிருக்கும். அம்மாவை தேடும் மனம். ரோஷக்காரி காட்டி கொள்ள மாட்டாள். அம்மா வீட்டோடு இருக்கும் ஒரே உறவு ராஜீவ் மட்டுமே.
அவளை மெல்ல அணைத்த காளிதாஸ்,
“ரெஸ்ட் எடுடா, பாட்டு போடவா?” என்று கேட்க, முறைத்தபடி அவன் நெஞ்சில் ஒட்டிக் கொண்டாள்.
“அலெக்ஸா! ஸ்விட்ச் ஆன் டீவி” என்று சொல்லி அதில் பாட்டு சேனலில் வைக்க சொல்ல, கார்த்தியும் டீவியைப் பார்த்தாள்.
‘அழகாகச் சிரித்தது
அந்த நிலவு
அதுதான் இதுவோ
அனலாகக் கொதித்தது
இந்த மனம்
இதுதான் வயதோ
மழைக்காலத்தில்
நிழல் மேகங்கள்
மலையோரத்தில்
சிறு தூறல்கள்’
என்று ஜெயச்சந்திரனின் கம்பீரக் குரலில் காதல் வழிந்தது.
கார்த்தியோ, பாட்டைக் கேட்டவள், “இந்த டைம்ல ரொமாண்டிக் சாங் வேற” என்றாள் கடுப்பாக.
“கண்ணா! எந்த நேரத்திலும் ரொமாண்டிங் சாங் கேட்கலாம்” என்றவன், மனைவியின் நெற்றியில் முத்தமிட்டான்.
“உன் கையைப் பிடிச்சிட்டு உன் கண்ணைப் பார்த்தா கூட அது ரொமாண்டிக்கான பொழுதுதான் எனக்கு… நம்மை புத்துணர்ச்சியா வச்சிக்கிற எல்லாமே ரொமான்ஸ்தான்” என்றான் ரசனையாக.
“அது என்னவோ ரைட்தான்! கிடைக்கிற கேப்ல எல்லாம் ரொமான்ஸ் பண்ணிடுவீங்களே ஸார்” என்று சொல்லி கணவனை வெட்கம் கொள்ள வைத்தாள் கார்த்தியாயினி.
✅ End of Episode 32
Very nice
https://youtube.com/shorts/POVKI50I760?si=UcV-iDwZJs0RQHYO
காளிதாஸ் எப்பொழுதும்
கிடைக்கும் நேரத்தில் எல்லாம்