Pavithra Narayanan - Literary Image 129
Pavithra Narayanan - Literary Image 129
Episode 26

காதல் 26

காலையில் கணவன் மனைவி இருவராலும் எழவே முடியவில்லை, ஆழ்ந்த உறக்கம் இருவருக்கும்.

நேற்றையைப் இரவில் தன்னை முறைத்த மனைவியிடம் ஜனா,

“மலர், முதல்ல வா நம்ம ரூம்க்குப் போகலாம்” என்றழைக்க,

“என்னைத் தனியா விடுங்க ஜனா” என்று சொல்லி அவள் அசையாமல் இருந்தாள்.

“அப்படியெல்லாம் விட முடியாது, கோவத்தைக் காட்டுறதுக்கு இது இடமில்லை. பனி வேற, வா மலர் ப்ளீஸ்” என்று ஜனா கெஞ்சிக் கூப்பிட,

“இவ்வளவு நாள் என்னைத் தனியா தானே விட்ட? இப்போ மட்டும் என்ன அக்கறை?” என்று முறைத்தாள்.

“மலர், சொல்றதைக் கேளு. ரூமுக்குப் போய் பேசலாம்” என்று அவன் விடாமல் அழைக்க,

“என்னால கேட்க முடியாது” என்றாள் பிடிவாதமாக.

ஜனா கைகளை உயர்த்தி நெட்டி முறித்தவன்,

“ஜெய் மகிழ்மதி” என்று சொல்லி மலரைத் தூக்கிக் கொள்ள, அவள் அதனை எதிர்ப்பார்க்கவில்லை. அவள் துள்ளித் திமிற,

அவளுடன் படிகளில் இறங்கியவன் “மலர் அசைஞ்சா இரண்டு பேரும் உருண்டுட்டு விழுந்துடுவோம்” என்று சொல்ல, மலர் அமைதியாய் வந்தாள். அறைக்குள் வந்ததும் உடனே இறங்கிக் கொண்டாள்.

இருவரும் அமைதியாய்ப் படுத்துக் கொள்ள, மலர் அங்கிருந்த பாட்டிலை எடுத்து ஒரு வாய் மட்டும் தண்ணீர் குடித்துவிட்டு வைத்துவிட, ஜனா அதைப் பார்த்தவன் உடனே எழுந்து வெளியே சென்றான். சென்றவன் வரும்போது மலருக்கு சுடுதண்ணீர் எடுத்துவந்தான்.

“ஹாட்வாட்டர் குடி மலர்” என்று சொல்லிக் கொடுக்க, இப்படிதான் கத்தி சண்டையிட்ட பின் ஜனா வழக்கமாக அவளுக்குத் தண்ணீர் எடுத்துவந்து கொடுப்பான். மலரும் மறுக்காமல் அவன் கொடுத்த தண்ணீரை வாங்கிக் குடித்தாள்.

மனமோ ‘இதுக்கு மட்டும் குறைச்சல் கிடையாது’ என்று அலுத்துக்கொண்டது. இப்படி ஒவ்வொன்றிலும் அவள் மீதான அக்கறை அவனிடமிருந்து வெளிப்படும்தான்.

கனிவான செயலும் காதல் மொழியுமாக கண்ணும் கருத்துமாய்ப் பெண்ணைப் பார்த்தவன். கோபம் வந்தால் அவன் பேசும் சொற்கள், அதனை எப்போது மறக்கவே முடியாது!

அவளினது கரை காணா காதல் என்றால் அவனுடையது குறை காணா காதல்!

தண்ணீரைக் குடித்துவிட்டு மலர் கண்களை மூடி உறங்க, ஜனா மலரை நெருங்கிப்படுக்க,

“ஒழுங்கா தள்ளிப்படு” என்று கத்தினாள்.

“இத்தனை நாளா இப்படிதானே மலர் தூங்குவோம்” என்று அவன் சலிப்பாய் சொல்ல,

“அது உனக்கு எல்லாம் மறந்துடுச்சுன்னு நினைச்சு நான் அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டேன். இப்போதான் உண்மை தெரிஞ்சுடுச்சல, ஸோ சண்டை சண்டை தான், டிஸ்டன்ஸ் டிஸ்டன்ஸ் தான்” என்றாள்.

“அம்மா பேச்சைக் கேட்டிருக்கணும், இதை சொல்லியே இனிமே என்னைப் படுத்துவா” என்று தனக்குள் முணுமுணுக்க,

“என்ன உங்க அம்மா பேச்சைக் கேட்டிருக்கனும்? என்னை விட்டு வேற யாராச்சும் கட்டியிருக்கணுமா?” என்று மலர் சிலிர்த்துக் கொண்டு சண்டையிட்டாள்.

“அய்யோ, அதில்லடி” என்று புலம்பியவன்,

“அம்மா இப்படியெல்லாம் ட்ராமா செய்ய வேண்டாம்னு சொன்னாங்க, உங்கிட்ட உண்மையை சொல்ல சொன்னாங்க, நான்தான் கேட்கல” என்று உளறிவிட,

“அப்போ அத்தைக்குத் தெரியுமா?” என்றாள் மலர் அதிர்ச்சியாக.

“உன்னையும் வர்ணவியும் தவிர எல்லாருக்குமே தெரியும்” என்று ஜனா எல்லாம் சொல்ல அதுவரை ஏமாந்துவிட்டோம் என்ற வருத்தம் இருந்த இடத்தில் எல்லாரும் ஏமாற்றிவிட்டார்கள் என்ற கோபம்.

“உன்னையெல்லாம்” என்று பல்லைக் கடித்தவள் இரண்டு கைகளும் கொண்டு அவனின் தோளிலேயே அடித்து,

“இந்த ஒரு மாசமா நான் எவ்வளவு ஃபீல் பண்ணியிருப்பேன், அதுவும் அத்தை அவங்க சில டைம் பேசும்போது என்னைக் காப்பாத்துறாங்கனு இத்தனை நாள் நினைச்சிருந்தா அவங்க உன்னைக் காப்பாத்தி இருக்காங்க” என்றாள் கோபத்துடன்.

“என்னோட எமோஷன்ஸோட விளையாடிருக்கீங்க எல்லாம்” என்று அவள் உணர்ச்சிவயப்பட்டுப் பேச பேச ஜனாவால் பதில் சொல்ல முடியவில்லை.

அப்படியே அவனைத் திட்டிக்கொண்டே மலர் உறங்கிவிட, விடிந்தும் கூட விழிப்பு வரவில்லை.

“மா…” என்று அமிழ்தாவின் குரலில்தான் இருவருக்குமே விழிப்புத் தட்ட, கதவின் பக்கமாக அமிழ்தாவுடன் வர்ணவி நின்றுகொண்டிருந்தாள்.

“முழிச்சதுமே அம்மாட்ட போகணும்னு அழுகைண்ணா” என்று அண்ணனிடம் சொன்னாள். ஜனா எழுந்து சென்று குழந்தையை வாங்கிக்கொள்ள மெத்தைக்கு வந்தவுடனே,

“மா” என்று தூக்க கலக்கத்தில் அம்மாவைக் கட்டிக்கொள்ள ஜனா அதனை ஏக்கமாய்ப் பார்த்தான். அமிழ்தா அம்மாவின் மீது சாய்ந்தபடி மிச்சமிருந்த உறக்கத்தைத் தொடர, அம்மாவையும் மகளையும் பார்த்த ஜனா,

“நீ மட்டும் அவசரப்படலன்னா என் பொண்ணு என்னையும் தேடியிருப்பா” என்றான் வருத்தம் மிகீய குரலில்.

அமிழ்தாவைத் தட்டிக்கொடுத்துத் தன்னருகே படுக்க வைத்த மலர்,

“அமிழ்தா இருக்க விஷயமே உனக்கு இப்போதானே தெரியும்? அந்த விஷயம் உன்னைப் பாதிச்சது கூட இப்ப கொஞ்ச நாளாதான். அப்படியிருக்கும்போது இத்தனை வருஷம் நீ என்னைத் தேடல” என்றாள்.

“சொல்லாம போனது நீ?” என்று அவனும் முறைத்தபடி பேச,

“அமெரிக்கா ஒன்னும் அவ்வளவு தூரமில்லை ஜனா” என்றாள் அழுத்தமாய். அவன் பதில் சொல்லும் முன்,

“மனசில என்னை நீ தூரமா வச்சிட்ட, அதான் என்னைத் தேடி வரலை. அவ்வளவு ஈகோ ஜனா உனக்கு. பிரசன்னா யுகே போனபோது அவனோட பர்த்டேக்காக நீ அங்க போன, நீயே இதை எங்கிட்ட சொல்லியிருக்க, அப்படியிருக்கும்போது நீ என்னைத் தேடி வருவன்னு நான் ரொம்ப ரொம்ப எதிர்ப்பார்த்தேன்”

“எஸ்! நான் சொல்லாம போனேன்தான், உங்கூட சண்டைப் போட்டுதான் போனேன். ஆனா அதுக்காக என்னை வேண்டாம்னு உதறிடுவியா? என் மேல தப்பாவே இருக்கட்டும் ஜனா, நான் தப்பு செஞ்சா என்னை விட்டுடுவீங்களா?” என்று கேள்விகளால் அவனைத் தாக்கினாள்.

“யார் கிட்டவும் சொல்லாத ஒரு உண்மை சொல்லவா ஜனா? என்னோட ப்ராஜக்ட் ஜஸ்ட் த்ரீ மந்த்ஸ்தான். ஆனா அந்த மூணு மாசம் கூட என்னை நீ தேடி வரலை, அதுதான் என்னை அங்கேயே தங்க வச்சது. கொஞ்ச நாள் பிரிஞ்சு இருக்கணும்னு நினைச்சேன், பிரிஞ்சுப் போகணும்னு என்னைக்குமே நினைச்சதில்ல” என்றவளின் பேச்சில் உள்ளத்தில் அதுவரை இருந்த கோபத் துகள் எல்லாம் சிதறிப்போக, சிந்திக்க முடியாமல் ஜனா இருந்தான். மலர் இன்னும் பேசினாள்.

“அமிழ்தா பத்தி உங்ககிட்ட சொல்லாம இருந்து எனக்கு என்ன சந்தோஷம் கிடைக்கப் போகுது ஜனா? ஒரு குழந்தை உண்டாகும்போது சந்தோஷம், வலி எல்லாமே ஆணை விட பெண்ணுக்குத்தான் அதிகம். டெலிவரி அப்போ நான் உன்னை எவ்வளவு தேடினேன் தெரியுமா? அப்பா கூட உங்கிட்ட பேசுறேன் சொன்னாங்க, பட் நான் வேண்டாம் சொல்லிட்டேன்”

“என்னை நினைக்காத உன்னை நான் ஏன் தேடனும்னு எனக்குள்ள ஒரு வைராக்கியம். அது திமிரா? ஈகோவா என்னவா வேணும்னாலும் இருக்கட்டும். என்னைப் பொறுத்தவரைக்கும் அது தப்பே இல்லை, தப்பா இருந்தாலும் கூட எனக்கு வருத்தமில்ல”

“இப்ப மட்டும் என்னோட செல்ஃப் ரெஸ்பெக்ட் விட்டு ஏன் இங்க இருக்கேன் தெரியுமா? அமிழ்தாவுக்காக. இத்தனை நாள் அவளுக்கு விவரம் தெரியாது. ஆனா இனி என்னோட பொண்ணு என்னோட சுய கௌரவத்துக்காக தனக்குக் கிடைக்க வேண்டிய எதையும் இழக்க கூடாதுன்னு நான் நினைக்கிறேன். நான் ஒன்னும் எப்பவும் உன்னையும் அவளையும் பிரிச்சு வைக்கனும்னு நினைக்கல, அப்படி நினைச்சிருந்தா வர்ணவி கிட்ட அமிழ்தா பத்தி சொல்லியிருக்கவே மாட்டேன்”

“இனிமே எனக்கும் உனக்கும் உள்ள ரிலேஷன்ஷிப் அமிழ்தாவோட அம்மா அப்பா, தட்ஸ் இட்” என்றாள் முடிவாக.

“அப்போ நேத்து யாரோ உன்னை விட்டு இருக்க முடியலன்னு சொன்னாங்க” என்று அவன் அவள் கண்கள் பார்த்துக் கேட்க,

“சொன்னேன்தான், ஸோ வாட். இத்தன வருஷம் மனசுல உன்னை நினைச்சிட்டே தானே இருந்தேன், இனியும் அப்படியே இருந்துப்பேன்” என்று சொல்லியவள் எழுந்து பாத்ரூமினுள் புகுந்து கொண்டாள்.

ஜனா கையால் தலையைத் தாங்கியபடி உட்கார்ந்துவிட்டான்.
‘டெலிவரி அப்போ நான் உன்னை எவ்வளவு தேடினேன் தெரியுமா?’ என்ற மலரின் கேள்வி முள்ளாய் அவனைத் தைத்தது.

மலர் சொல்வது சரிதானே? தந்தையாய் நான் இழந்த தருணங்களைப் போலவே தானே, அவளும் தாய்மையடைந்த கணம் என்னைத் தேடியிருக்கிறாள் என்று நினைக்க நினைக்க கடந்து சென்ற காலங்கள் காயங்களாய் உள்ளத்தினுள் உளியாய் வலியாய்த் தாக்கியது.

அவள் போனால் அப்படியே விட்டுவிடுவாயா என்ற அகத்தின் கேள்விக்கு அவனிடம் பதில் இல்லை! அப்போது அவள் என்னிடம் சொல்லாமல் சண்டைப்போட்டு சென்றுவிட்டாளே என்பது மட்டுமே தலையாயதாய் இருக்க, அவள் அவனை நீங்கினால் என்பதையே ஏற்கமுடியாமல் தவித்தான் அந்த காலங்களில். காதலுக்கும் அவனின் கர்வத்துக்கும் விழுந்த அடி!

குடும்பத்தினரும் இன்னும் அவனைக் குத்திக்காட்டினார்கள். அந்த கோபம் கூட அப்போது மலரின் மீதே திரும்பியது. இத்தனை நாள் என்னை விட்டுப் போனாள் என்பதே பிரதானமாய் இருக்க, இப்போதுதான் போகுமளவிற்கு என்ன செய்தேன் நான் என்று யோசித்தான்.

ஒன்றும் நினைவில் வரவில்லை. நிஜத்தில் பார்த்தால் மலர் அருகே வந்து நின்றாள். அவள் முகத்தைப் பார்க்க இத்தனை நாள் இல்லாத ஒன்று அவள் வதனத்தில் இருக்க, பொலிவோ என்று பார்க்க தெளிவாய் இருந்தாள் பெண்.

அதனை வாய்விட்டும் கேட்க,

“இத்தனை நாள் உனக்கு ஆக்சிடெண்ட் ஆச்சுன்னு ஒரு டென்ஷன், கூடவே ஹீரோ சார் நடிச்சதுக்கு என்னையுமறியாம நானும் நடிக்கிற மாதிரி ஆகிடுச்சு. இவன் உன்னை என்னவெல்லாம் பேசினான் இப்போ இவனைக் கவனிக்கும்படி ஆகிடுச்சேன்னு கடுப்பா இருந்துச்சு, பட் நவ் சுதந்திரமா சண்டைப் போடலாமே, அதான் மனசு லேசானதால ஃபேஸ் ப்ரைட் ஆகிடுச்சுப் போல” என்றவள் அலுவலகத்திற்குக் கிளம்பியபடி அவனைப் பார்க்க, அவன் அசையாது இருந்தான்.

ஜனாவின் அருகே வந்து நின்ற மலர், கன்னத்தில் கைவைத்து,

“ஜனா கண்ணா, உன்னோட நடிப்பு இருக்கே ஆஹா ஓஹோதான். நீ மட்டுமா உன் குடும்பமே. அதுவும் என் அத்தை இருக்காங்களே நடிகையர் திலகம்” என்று அவனை வெறுப்பேற்றினாள்.

“இந்த ஐடியா எல்லாம் யார் கொடுத்தா? எனக்குத் தெரிஞ்சு இந்த கிரிமினல் மைண்ட் எல்லாம் உன்னோட உயிர்த்தோழனுக்குத்தான் உண்டு” என்று யோசிப்பது போல் பேச,

“எப்படி டி கரெக்டா சொல்ற?” என்றான் ஜனா ஆச்சரியமாக.

“உன் மூஞ்சிக்கு ஸ்கிரிப்ட் எழுத கே பாக்யராஜா வருவார், அந்த கேனைப்பயதான் வருவான்” என்று திட்டியவள் அமிழ்தாவைப் பார்க்க குழந்தை நன்றாய்த் தூங்க,

“அமிழ்து தூங்குறா, எழுந்தவுடனே அவளுக்குப் பால் கொடுத்து அப்புறம் சாப்பிட வைங்க” என்று சொல்ல, ஜனாவின் முகம் நேற்றை நிகழ்வுக்குப் பின் இன்னும் தெளியவே இல்லை.

இத்தனை வருடமாய் அவனும் அவன் கோபமும் நினைத்துப் பெரிதாய் இருந்தவனுக்கு மலரும் அவள் உணர்வும் புரிய, தனது பிழை புரிந்தாலும் என்ன செய்து எல்லாம் சரி செய்வது என்று தெரியவில்லை.

அதில் முகம் தெளியாமல் ஜனா இருக்க, அவன் முன்னே போய் நின்றவள் அவனை உற்றுப் பார்த்து,

“ஹலோ! என்ன லுக் இது? ஒரு மாசமாதான் உன்னை சைட் அடிக்க முடியுது, இந்த மூஞ்சியை எப்படி பார்க்க, எப்பவும் போல இரு” என்றதும் அவன் புரியாமல் பார்க்க,

“வாழ்க்கைதான் பசுமையா இல்ல, அட்லீஸ்ட் கண்ணுக்காச்சும் பசுமையா இருந்துட்டுப் போங்க ஜனா. இந்த வர்ணவி மட்டும் குறுக்க வந்து கோர்த்து விடலன்னா நான் பாட்டுக்கு உன்னை சைட் அடிச்சிட்டு சந்தோஷமா இருந்திருப்பேன், கவிதையெல்லாம் சொல்லி என்னைக் கவுத்துட்டான் ஃப்ராட்” என்று விளையாட்டாக சொல்வது போல் மலர் சொல்லிச் சென்றாலும் கூட ஜனாவிற்கு வலித்தது.

கீழே இறங்கிப் போனவள் சௌந்தர்யாவிடம் பேசாது வர்ணவியிடம் மட்டும்,

“வரு, எனக்கு லஞ்ச் மட்டும் கொடுடி, டைம் ஆச்சு இப்போ சாப்பாடு வேண்டாம்” என்று சொல்ல,

வர்ணவி அவளுக்கு சாப்பாடு எடுத்துத் தந்தாள். போகும்போதும் கூட வர்ணவியிடம் மட்டும் சொன்னாள். சௌந்தர்யா மகளிடம்,

“அவ என்ன எங்கிட்ட பேசலை” என்று கேட்டார்.

“டைம் ஆச்சுன்னு அவசரத்துல போறாம்மா” என்று தோழிக்குப் பரிந்து பேசினாள். சிறிது நேரம் கழித்து ஜனா அமிழ்தாவைத் தூக்கி வந்து வர்ணவியிடம் கொடுத்து பால் கொடுக்க சொல்ல, மகனின் கலையிழந்த முகம் பார்த்த சௌந்தர்யா,

“என்னாச்சு ஜனா? சரியா தூக்கமில்லையா உனக்கு?” என்று கேட்க,

“மா, மலருக்கு உண்மை தெரிஞ்சிடுச்சு” என்றான்.

“என்ன உண்மை அண்ணா?” என்று வர்ணவி கேட்க,

“நீ அமிழ்தாவை முதல்ல பால் குடிக்க வை” என்ற சௌந்தர்யா மகனிடம்,

“பரவாயில்லடா சொல்லிட்டியா?” என்றார் சந்தோஷமாக.

“நானா சொல்லல, அவளா கண்டுபிடிச்சிட்டா” என்றான் இறங்கிய குரலில்.

“அதானே பார்த்தேன், இதுல ட்ராமாவுல அவார்ட் வாங்கினேன்னு பேச்சு மட்டும். எப்படியோ தெரிஞ்சா சரிதான்” என்றவருக்கு மலரின் பாராமுகம் அப்போது நினைவில் வர,

“மகனே! உனக்கு நாங்க எல்லாம் உடந்தைனு சொல்லிட்டியா?” என்று அவர் சந்தேகமாய்க் கேட்க,

“எல்லாம் சொல்லிட்டேன்” என்றதும் அவனை முறைத்துப் பார்த்தவர் தக்காளியைத் தூக்கி அவன் மேல் அடித்தார்.

“பிள்ளையாடா நீ? நீ மாட்டினா எங்களை ஏண்டா கோர்த்துவிட்ட? அவ காலையில என்னைப் பார்த்த பார்வையே சரியில்ல” என்று சௌந்தர்யா புலம்ப,

“மா, என்னம்மா நடக்குது இங்க? எதைப் பத்தி பேசுறீங்க நீங்க எல்லாம்?” என்று வர்ணவி ஒன்றும் புரியாது கேட்க,

“ம், சாயங்காலம் ஆகிப்போச்சு, சாயமெல்லாம் வெளுத்துப் போச்சு” என்று சொல்ல வர்ணவி இருவரையும் மாறி மாறிப் பார்த்தாள். இவளைக் கண்டுகொள்ளாது அவர்களுக்காகவே பேசினார்கள்.

“என்னை அவ என்ன நினைக்கிறான்னு கவலை இல்ல உனக்கு? அவ உன்னை என்ன நினைக்கிறானுதான் உனக்குக் கவலை” என்று ஜனா எரிச்சல்பட,

“உன்னோட இமேஜ் டோட்டல் டேமேஜ் டா, ஆனா நான் அவகிட்ட ஒரு மாண்புமிகு மாமியாரா ஃபார்ம் ஆகியிருந்தேனே டா, அதையெல்லாம் கெடுத்து என்னையும் ஒரு மாமூல் மாமியார் ஆக்கிட்டியே? யூ இடியட்” என்று திட்டினார்.

“உங்கிட்ட வந்து சொன்னேன் பாரு, என்னை சொல்லணும்” என்று ஜனா உச்சக்கட்ட கடுப்பில் ஹாலுக்குப் போய்விட, வர்ணவி அம்மாவைக் கேள்வியாய்க் கேட்டுத் துளைக்க மகளிடம் எல்லாம் சொல்ல, அவளும் அவரைப் பேசினாள். காலை உணவின்போது பிரசன்னாவிடம் ஜனா சொல்ல டையைக் கட்டிக்கொண்டே,

“எப்படி கண்டுபிடிச்சா?” என்று கேட்க,

ஒரு நொடி தயங்கிய ஜனா,
“அது பேசிட்டு இருக்கும்போது அப்படியே ஒரு ஃப்ளோவில எதோ உளறிட்டேன்” என்றான்.

“விடுடா, என்னைக்கா இருந்தாலும் தெரியத்தானே போகுது” என்று பிரசன்னா சமாதானம் செய்ய,

ஜகனோ “இதுக்குத்தான் இதெல்லாம் வேண்டாம்னு நான் முன்னாடியே சொன்னேன்” என்று பேச, ஜனா அப்பாவை முறைத்தான்.

“என்னை ஏன் முறைக்கிற?” என்று அவரும் முறைக்க,

“அட விடுங்க எல்லாம், சாயங்காலம் வந்து மலர் நம்மையெல்லாம் சட்னி ஆக்கப் போறா, அதைப் பத்திக் கவலையில்லாம உங்களுக்குள்ள சண்டைப் போடுறீங்க” என்று சௌந்தர்யா கவலையாக.

“அதெல்லாம் உங்களையெல்லாம் ஒன்னும் சொல்ல மாட்டா” என்று ஜனா சொல்ல,

“அப்போ சந்தோஷம்டா ஜனா” என்ற அம்மாவைப் பார்த்து பல்லைக் கடித்தான் ஜனா.

✅ End of Episode 26
How did you feel about this episode?
❤️ 3 😂 2 more...

You must Log in or Register to react here

💬 2 Replies
Mrs Beena loganathan Reader 4 weeks ago

சாயங்காலம் எல்லோரும்

சட்னி தான்.....
Sound சௌ கலக்கல் மாமி 
😂 2 more...
Srichitra Reader 4 weeks ago

Nice 

Log in or Register to reply

🔗 Insert Link

Scroll to Top