Episode 35
அன்று கார்த்தி மிகுந்த பரபரப்பாக இருந்தாள். கூடவே சந்தோஷம் மிகுதியாக இருந்தது. காளிதாஸன் வந்த பின்னும் அவளின் உற்சாகம் குறையவில்லை. முகத்தில் பொலிவு பன்மடங்கானது.
“கண்ணா! இன்னிக்கு செம ஹாப்பியா இருக்க போல? என்ன விஷயம்?” என்று கேட்க,
“ம்ம், என் வீட்டுக்காரர் வீட்டுக்கு சீக்கிரம் வந்துட்டார்ல, அதான்” என்றாள் கொஞ்சம் கோபத்துடன்.
“விடு கண்ணா! அரசியல் எல்லாம் சகஜமப்பா” என்றான் புன்னகையுடன்.
“அய்யே!” என்று கார்த்தி பார்க்க,
“கவிதை சொல்லவா? உன் கோபம் போயிடும்” என்றான் கண்சிமிட்டி.
அவனின் கண்சிமிட்டலில் கரைந்து போனவள், “முதல்ல சாப்பிடுங்க, இங்க என்ன கவிதை?” என்றாள் வெட்கத்துடன். அவளின் வெட்கத்தின் அர்த்தம் வேண்டும் என்பதே! காளிதாஸனோ, குறும்பான புன்னகையுடன்,
“கவிதை எங்க படிச்சா என்ன?” என்றதும் கார்த்தி முழித்தாள்.
“நீ என்ன கண்ணா நினைச்ச?” என்றான் கிண்டலாக.
கார்த்தி பேசாமல் அமைதியாகி விட,
“சொல்லவா? உனக்குக் கவிதைன்னா பிடிக்கும்தானே? நான் நிஜமா கவிதையை சொல்றேன்” என்றான்.
“எனக்குக் கவிதையெல்லாம் பெருசா முன்னாடி பிடிக்காது, நீங்க சொல்றதால பிடிக்குது எனக்கு” என்றதும்,
“அப்போ சொல்லிடலாம்” என்றவன் கார்த்தியின் கைகளைப் பிடித்துக் கொண்டான்.
“எனக்காகப் பிறந்தவளைக்
கண்டு பிடித்தேன்! – அவள்
கண்ணசைவில் ஒரு கோடி
கவிதை படித்தேன்!
என் பாதி எங்கே என்று
தேடி அலைந்தேன்! – அவளை
பார்த்தவுடன் அடடா நான்
முழுமை அடைந்தேன்!”
அவன் அடடா! என்றதே அடடா போட வைத்தது. கார்த்திக்கு காளிதாஸனைப் பிடித்தது, காளிதாஸனால் கவிதைப் பிடித்தது!
கம்பீரத்தில் வழிந்தது அவனின் காதல்.
கவிதையை ரசித்த போதிலும், “நீங்க சொன்னதுலயே பெரிய பொய் இதான், பார்த்தவுடனே முழுமை அடைஞ்சீங்களா? எவ்வளவு திட்டுனீங்க என்னை?” என்றாள் கோபமாகவே.
“ஹே கண்ணா! கவிதையில உண்மை, பொய் ஆராய்ச்சி எல்லாம் கூடாது. மனசுக்கு சந்தோஷம் தர வார்த்தையெல்லாம் கவிதைதான்!”
“கல்யாணமாகி ஆறு மாசம் ஆச்சு, இன்னும் அதையே சொல்லுவியா? அப்போ இருந்த காளிதாஸ் வேறடா” என்றான்.
“அப்போ, இப்போ??”
“இப்போ நான் கார்த்திதாஸன்ப்பா” என்றதும், கார்த்தியால் புன்னகையை அடக்க முடியவில்லை. வெட்கமும், மகிழ்வுமாக விரிந்தது அவள் சிரிப்பு.
“யாரோ எழுதின கவிதையை சொல்லியே என்னைக் கவுத்துடுறீங்க நீங்க!”
“நா.முத்துக்குமார் கவிதைதான்! ஆனா, அவரே என்ன சொல்லியிருக்கார் தெரியுமா? காதல் கவிதை எழுதுகிறவர்கள் கவிதை மட்டுமே எழுதிக் கொண்டு இருக்கிறார்கள். அதைப் படிக்கும் பாக்கியசாலிகளே காதலித்துக் கொண்டு இருக்கிறார்கள்! நான் பாக்கியசாலிதானே கண்ணா?” என்று காளிதாஸன் கேட்க,
“எல்லாத்துக்கும் கவிதையா?” சலிப்பும், காதலும் சேர்ந்த ஒரு குரலில் கார்த்தி கேட்க, காளிதாஸன் உண்டு முடித்திருந்தான். கை கழுவியவன் கார்த்தியின் பின்னால் வந்து நின்று, அவள் தோளைப் பிடித்துக் கொண்டு, கன்னம் இழைந்து,
“எஸ்! எல்லாத்துக்குமே எனக்கு கவிதை வேணும்” என்றவனின் பேச்சைக் கேட்டவளுக்குத் தெரிந்தது, அந்த கவிதை அவளென!
“விட்டா பேசிட்டே இருப்பீங்க, டூ மினிட்ஸ். சாப்பிட்டு மாடிக்குப் போகலாம்” என்றவள் உண்ண, காளிதாஸ் எல்லாவற்றையும் கிச்சனில் எடுத்துக் கொண்டு போய் வைத்தான்.
மாடியேறியதும் அவன் அலெக்ஸாவில் பாட சொல்ல, “அடியே! அலெக்ஸா! ஷட் அப். என் வீட்டுக்காரர்ட்ட நான் பேசணும்” என்று மிரட்டினாள். அவள் பேச்சைக் கேட்டு சிரித்த காளிதாஸ் பாடலை நிறுத்த சொன்னான்.
மெத்தையில் உட்கார்ந்தவள், தன்னருகே வந்த கணவனை இன்னும் அருகே இழுத்தாள். அவள் மீதே அவன் விழ,
“கண்ணா! வலிக்கும் உனக்கு. நீ வேணும்னா இப்படி வா” என்று அழைக்க, அவள் மறுத்தாள். ஒன்றும் பேசாமல் கணவனை அணைத்துக் கொண்டாள். அவளின் புடவை முந்தானை பறக்க, வாகாய்ப் பிடித்தவன் அவள் முகத்தில் மேல் போட்டான்.
“காற்று வந்து கதை பேசும் கொடிக் கயிற்றில்,
அவள் புடவை அன்றாடம் கூட்டம் போடும்! காத்திருப்பாள் ஒருத்தி என்ற நினைவு வந்து கடிகார முள் மீது ஆட்டம் போடும்!”
மீண்டும் கவிதை!
“அப்படியே கடிகார முள் ஆட்டம் போட்டு சீக்கிரம் வந்த மாதிரி” என்று திட்டினாள்.
“இன்னிக்கு நிறைய கவிதை சொல்றதைப் பார்த்தா, இன்னும் ஒரு மாசம் என் பக்கமே வரமாட்டீங்கனு தோனுது. என்ன கட்சி மீட்டீங்கா?” என்று அவனை அறிந்து கேட்டாள்.
“உள்ளாட்சி தேர்தல்டா” என்றதும் முகம் சுருங்கியது. இப்போது அதைப் பேச வேண்டாமென நினைத்தவன்,
“என்ன நைட்ல புடவை கட்டியிருக்க? டிஸ்டர்பன்ஸா இருக்குமே. எங்க உன் மேக்ஸீ?” என்று கேட்க,
“புடவை எப்படி இருக்குங்க?” என்று கேட்டாள்.
“புடவையில நீ நல்லா இருக்க” என்று அவன் சொல்ல,
“என்ன அறிவு?” என்று வியந்தாலும், அவளின் விழைதல் அதுதானே?
முந்தானையை கணவன் மேல் போட்டு, முகத்தோடு முகம் சேர்த்து நெற்றியில் முத்தம் வைத்து, கணவனின் கழுத்தைக் கட்டிக் கொண்டவள்,
“காளிதாஸ்! நானும் நீங்களும் சேர்ந்து எழுதின கவிதை, எனக்குள்ள இருக்கு. நம்ம கவிதை!” என்றாள் காதலாக, தாய்மையின் சந்தோஷத்துடன்.
“நம்ம கவிதை?!” கேள்வியாய்த் தொடங்கி, ஆச்சர்யமாய் அவன் பதில். கார்த்தியின் பக்கவாட்டில் படுத்து மென்மையாய் அணைத்துக் கொண்டவன்,
“சந்தோஷமா இருக்கு கண்ணா! எனக்கு சொல்லத் தெரியல” என்றான். தந்தையாகும் தருணம் அவன் அப்பாவின் நினைவு. நெஞ்சத்தில் சொல்ல முடியாத ஒரு பெரும் உவகை.
“உங்களுக்கு சொல்லத் தெரியலன்னா பெரிய விஷயம்தான், எல்லாரையும் பேசி சமாளிக்கிற உங்களை நம்ம குழந்தை வாயடைக்க வச்சிடுச்சே” என்றாள்.
“நித்தி அண்ணி கிட்ட கன்ஃபார்ம் பண்ணிட்டேன். உங்ககிட்ட சொல்லிட்டு அத்தைகிட்ட சொல்லலாம்னு இருந்தேன்”
காளிதாஸன் அமைதியாக இருக்க, கார்த்தி பேசினாள். அவள் பேச்சிற்குப் பதிலின்றி போக,
“என்ன தாஸ் அமைதியாகிட்டீங்க?” என்று கேட்டாள் கார்த்தி.
புன்னகை செய்தவன், “என் கவிதையை ரசிக்கிறேன், உள்ள இருக்க குட்டி கவிதையை நினைச்சேன்” என்றவன், அவளின் கையைப் பற்றித் தன் நெஞ்சோடு வைத்து,
“தேங்க்ஸ் கார்த்திமா. நீ இல்லைன்னா வாழ்க்கையில இந்த உணர்வெல்லாம் இழந்திருப்பேன். என்னைக் காதலிக்கிறதுக்கு. என்னையும் காதலிக்க வைக்கிறதுக்கு, எதிர்ப்பார்க்காத எல்லாமே எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லாம நீ எனக்குத் தர, தேங்க்ஸ் ஸோ மச்” என்றான் ஆத்மார்த்தமாக.
“இதுக்கெல்லாம் தேங்க்ஸ் சொல்லுவாங்களா? அப்படின்னா நான்தான் நிறைய சொல்லணும்” என்றாள் கார்த்தி.
“அப்படி இல்லைம்மா! நான் காணாத கனவெல்லாம் நிஜமானது உன்னாலதான், என் கார்த்தியால” சொல்லியவனின் குரலில் காதல் கொட்டிக் கிடந்தது. அந்த காதலின் அச்சாரமாய் அவளின் நெற்றியில் முத்தம் வைத்தான் காளிதாஸன்.
************
PREORDERS ARE LIVE! GET YOUR COPIES SOON!!
அன்பான வாசகர்களுக்கு வணக்கம்!
உலா பதிப்பகத்தின் முதல் வெளியீடான எழுத்தாளர்
பவித்ரா நாராயணனின் ‘நனையாத மழை நாம்’
நூலின் முன்பதிவு தொடங்கியுள்ளது.
📚 நூல்: நனையாத மழை நாம்
💰 விலை: ₹350
வெளியீடு: அக்டோபர்
நூலை முன்பதிவு செய்ய விரும்பும் வாசகர்கள், கீழ்க்கண்ட விவரங்களைப் பகிரவும்:
பெயர்:
முழு முகவரி:
தேவையான பிரதிகளின் எண்ணிக்கை:
தொடர்பு எண்(வாட்ஸப் எண்):
உங்கள் முன்பதிவு விவரங்கள் பெறப்பட்டதும் உறுதி செய்யப்படும்.
8610841651 என்ற எண்ணுக்கு வாட்ஸ் அப் செய்யவும்.
(குறுஞ்செய்தி மட்டும்)
ulaapathippagam@gmail.com
mailmepavithranarayanan@gmail.com
என்கின்ற மின்னஞ்சல் முகவரிகள் மூலம் தெரிவிக்கலாம்.
அன்புடன்,
உலா பதிப்பகம்.
✅ End of Episode 35
Nice
Very nice ud ma
ஹைக்கூ கவிதை வர போகுது......
கவிதை கவிதை ❤️