Episode 5
ஏதுவொரு பாடலை சந்தோஷமாய் முணுமுணுத்த ரசிகாவைக் கண்டு யுவிக்கும் மகிழ்வுதான். அவளும் காலை வந்தது முதலே பார்க்கிறாள் ரசிகாவின் முகத்தில் என்றுமில்லா ஒரு புது பொலிவு, தெளிவு!
“மேடம் என்ன வந்ததில இருந்து நீதானே நாள்தோறும் நான் பாட காரணம்னு பாடுறியே? க்யா யே?” என்று யுவி காலை ப்ரேக்கில் கேண்டீனில் இதழசைத்துப் பாடிய தோழியிடம் கேட்க,
“சர்வா கிட்ட ஸாரி சொல்லிட்டேன், சர்வாவும் என்னை மன்னிச்சிட்டார்” என்றவளின் முகத்தில் அவ்வளவு நிம்மதி.
“என்னமோ சர்வர் ஓசியில நாலு பூரி கொடுத்த மாதிரி பில்டப் கொடுத்தியே டி, நான் கூட மிலிட்டர் மாப்ள பார்த்துட்டாரோ, அதான் கனவுல பாடுறீயோன்னு நினைச்சிட்டேன்” என்ற யுவியைக் கடுப்புடன் பார்த்த ரசிகா,
“என்னோட எவ்வளவு பெரிய ஸ்ட்ரெஸ் குறைஞ்சிப் போச்சு தெரியுமா? எனக்குக் கல்யாணம்னா உனக்கு என்னடி அவ்வளவு ஆர்வம் அல்பமே?” என்று திட்டினாள் ரசிகா.
அவளின் இத்தனை வருட அழுத்தம் சர்வாவின் மன்னிப்பில் காணாமல் போகுமென்று தெரியும்தான் யுவிக்கு. தெரியாமல் எப்படி போகும்? இருந்தும் அதிலே தோழியின் உள்ளம் உழல வேண்டாம் என்ற எண்ணம்.
“என்ன இப்படி சொல்லிட்ட, ஆரூயிர் தோழியின் கல்யாணம்னா சும்மாவா? நான் உன்னோட கல்யாணத்தை சாக்கா வச்சு இரண்டு மூணு டிரஸ் எடுப்பேன். விதவிதமா ஃபோட்டோஸ் எடுக்கலாம், அப்புறம் மாப்ள கூட முசோலினி இஷ்டப்பட்டி இருக்கட்டும். ஆனா உன் கல்யாண மெனு மட்டும் என்னைக் கேட்டு போடனும் சொல்லிட்டேன்” என்றதும்,
“சோத்துக்காக வாழ்ற மாதிரி பேசாத” என்று ரசிகா பல்லைக் கடித்தாள்.
“சோறில்லாம வாழ்ற மாதிரி நீயும் பேசாத” என்றாள் யுவராணியும். ரசிகாவிற்கு தோழியின் பேச்சில் கடுப்பே, பின் எவ்வளவு சந்தோஷ செய்தி இது? இதற்கு இவளின் பிரதிபலிப்பு இவ்வளவுதானா? வேறு யாரிடம் இதனை சொல்லி மகிழ முடியும் என்ற சோர்வு உண்டாக அமைதியாகிப் போனாள்.
இதே சின்ன வயது ரசிகாவாக இருந்திருந்தால், புது உடை போட்டால் கூட,
‘எப்படி இருக்கு அம்மா? எப்படி இருக்கு பாட்டி?’ என்று கேட்டுக்கொண்டே சுற்றுவாள். ரசிகா சட்டென்று அமைதியாகிவிட,
“டார்லிங்! ஏன் இந்த அமைதி? எனக்கும் சந்தோஷம்தான் அந்த சர்வர் உன்னை மன்னிச்சது, ஹி ஹி சர்வா” என்று ரசிகாவின் முறைப்பில் திருத்தினாள்.
“நிஜமாவா?” கேட்டவளின் விழிகளில் வினா.
“இல்லையா பின்ன? ஆனா அவர் உன்னை மன்னிக்கலனாலும் நீ உன் லைஃபை அமைதியா லீட் செய்யனும் டி, எப்பவும் யாரோட உணர்வோட உன்னோடதை சம்மந்தப்படுத்தாத, அப்போ சர்வா மன்னிக்கலன்னா நீ சந்தோஷமா இருக்க மாட்டியா? இதோ உன்னோட லைஃப். உன்னோட சந்தோஷமோ துக்கமோ உன்னை சார்ந்து இருக்கணும், நீ அடுத்தவங்களை சார்ந்து இருக்காத” என்று அறிவுரை சொன்னாள்.
“அப்போ நீ இருந்தா நான் சந்தோஷமா இருக்கேன், அதுவும் இருக்க கூடாது சொல்றியா?” என்று ரசிகா தன் முன் இருந்த ஜூஸைப் பருகியபடி கேட்க,
“நான் கூட இருக்கும்போது எப்படி சந்தோஷமா உன் மனசு இருக்கோ, நான் இல்லாதப்பவும் அதே சந்தோஷத்தோட அமைதியோட இருக்கணும். எனக்குத் தெரியும் இதெல்லாம் சொல்ல ஈசின்னு, பட் நான் கொஞ்சம் கொஞ்சமா ட்ரை பண்றேன். லைஃப்ல எமோஷன்ஸ் இருக்கறது தப்பில்லை, அதை ஹாண்டில் செய்ற விதம்தான் இங்க தப்பா போயிடுது, நீ ஹாப்பியா இருந்தா எனக்கும் ஹாப்பி” என்று சீரியஸாய் யுவி பேச ரசிகாவும் ரசித்துக் கேட்டிருந்தாள்.
அதற்குமேல் யுவியின் வாய் சும்மா இராமல்,
“பட் இப்ப நான் ஹாப்பியாகணும்னா உங்கிட்ட இருக்க மசால் வடையை என்கிட்ட கொடுடி, காலையில டைம் ஆச்சுன்னு ஒரே இட்லியில் ஓடி வந்துட்டேன்” என்று யுவி சொல்ல,
“ஏன் இப்படி பண்ற? சீக்கிரம் எழுந்து கிளம்பி சாப்பிட்டா என்ன?” என்று ரசிகா கொஞ்சம் கண்டிப்பாய்க் கேட்டாள்.
“முசோலினியின் வாரிசு என்று அடிக்கொருதரம் நிரூபிக்காத டி, லைஃப் எப்பவும் ஒரே மாதிரி இருந்தா போரடிக்கும். இந்த நதியெல்லாம் பார்த்திருக்கியா, ஸிக் ஸேக்னு வளைஞ்சு நெளிஞ்சு போகும். அப்படிதான் நம்மளும் இருக்கணும், டெய்லி அஞ்சு மணிக்கு எழுந்து பொறுமையாய் ரெடியாய் பொறுப்பா எட்டு மணிக்கு வந்து என்ன கிழிக்கப் போறோம்?”
“இப்படி லேட்டா எழுந்து பரபரப்பா கிளம்பி முசோலினி கிட்ட மாட்டாம ஜஸ்ட் மிஸ்ல காலேஜ் வரதெல்லாம் ஒரு கிக் டி” என்றதும்,
“என் முன்னாடியே என் அப்பாவை திட்டுறியா நீ?” என்று முறைத்த ரசிகாவின் கன்னத்தில் தட்டியவள்,
“அப்பா பொண்ணு எல்லாம் அவுட்சைட் கேம்பஸ், எங்க சிவசங்கர் ரூல்ஸ் இது” என்றதும் ரசிகா இன்னும் முறைக்க அதற்குள் பெல் அடித்து விட, அவரவர் வகுப்புக்குப் போனார்கள்.
அடுத்த நாள் விடுமுறையாய் இருக்கவும் மாலையில் ரசிகாவை அழைத்துக் கொண்டு, ரேஷ்மியைப் பார்க்கலாம் என சக்தியின் இல்லம் வந்தார் சிவா.
வாசலில் அவரின் புல்லட்டில் வந்து மகளுடன் இறங்க, சக்தியின் வீட்டு காம்பவுண்ட் சுவரில் உட்கார்ந்து, காலை ஆட்டிக்கொண்டு தன் முன்னால் நின்று கொண்டு இருந்த பத்ரியிடம் என்னமோ பேசிய சர்வஜனன் விழுந்தான்.
பார்த்தவுடனே அவன் உட்கார்ந்திருந்த விதம் பிடிக்கவில்லை, அதுவும் கால்களை ஆட்டிக்கொண்டு இருக்க,
“இவனெல்லாம் என்ன படிச்சானோ, எப்படி உட்கார்ந்து இருக்கான்?” என்று கேட்டைத் திறக்கும்போதே முணுமுணுக்க அது ரசிகாவிற்கு நன்றாய்க் கேட்க கொஞ்சம் வருத்தமாய் உணர்ந்தாள்.
இவர்கள் கேட் திறக்கும் சத்தம் கேட்டு, பத்ரியும் சர்வாவும் பார்க்க பத்ரி,
“மாமா” என்றபடி முறுவலுடன் சிவசங்கரன் பக்கம் நடந்தான்.
ரசிகாவைப் பார்த்த சர்வாவின் கண்களில் ஒரு வரவேற்பு புன்னகை.
“எப்படி இருக்க பத்ரி?” என்று இவர் அவனிடம் கேட்க,
“நல்லாயிருக்கேன் மாமா, ம்மா அப்பா” என்று குரல் கொடுத்தவன் ரசிகாவிடம்,
“ஏய் அப்பு இப்போதான் வர உனக்கு டைம் கிடைச்சதா? அவ்வளவு பிஸீ மேடம்” என்று கிண்டலாய் சொல்ல,
“ஆமா டா திரி! மேடம்க்கு கேண்டீன்ல தான் ஃபுல்டைம் டியுட்டியே” என்று சர்வா வழக்கம்போல் வம்பு செய்ய, அப்பாவைத் தான் பார்த்தாள் ரசிகா. அவர் சக்தியிடம் பேசியபடி உள்ளே சென்றிருக்க, இவள் பத்ரி சர்வா மூவரும் வாசலில் நின்றனர்.
“இல்ல பத்ரீண்ணா, என் ப்ரண்ட் கூட ப்ரேக்ல போவேன், அவ்வளவுதான்” என்று பத்ரியிடம் பதில் சொன்னவள் வேகமாய் உள்ளே சென்று ரேஷ்மியிடம்,
“ரேஷ்மிக்கா, கங்கிராட்ஸ். எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு, சீக்கிரமே ஒரு குட்டி பேபி வரப்போகுது” என்றாள் அவ்வளவு சந்தோஷமாக.
“நீயும் சீக்கிரமே கல்யாணம் பண்ணினா உனக்கும் ஒரு குட்டி பாப்பா வரும்” என்று உமா சொல்ல,
“உமா!” அதட்டல் குரல் சக்திவேலனிமிருந்து.
“என்னங்க? நம்ம பொண்ணுதானே அவ” என்ற உமாவின் குரல் கம்மி வர,
“நீ சும்மா இருடா, உமா சொல்றது சரிதான், நானே ரசிகாவுக்கு வரன் பார்க்க ஆரம்பிச்சிட்டேன்”
அப்பா சொல்லவும் ரசிகா உள்ளம் ஒரு நொடி அதிர்ந்தவள் வெளியே காட்டாமல் இருந்தாள். அவளிடம் இன்னும் சிவசங்கர் இதனைப் பற்றி சொல்லவில்லை.
சிவாவோ சொல்லிவிட்டு ரசிகாவைக் கூட பார்க்கவில்லை, சர்வாவின் மீதே பார்வை இருக்க, அவனோ சாதாரணமாகத்தான் இருந்தான். மனதிலோ
‘இவர் என்ன என்னையே உத்துப் பார்க்கிறார்?’ என்ற எண்ணம்.
“என்னடா தீடீர்னு சொல்ற?” என்று சக்தி கேட்க,
“இல்லடா இப்போ கொஞ்ச நாளாதான் இந்த யோசனை, அவளுக்கு இப்பவே பண்றதுதான் சரின்னு தோணிச்சு. படிச்சு முடிச்சிட்டா, வேலைப் பார்க்கிறா நெக்ஸ்ட் இதானே?” என்றார் சிவசங்கரன்.
“நீங்க சொல்றது ரொம்ப சரிண்ணா” என்ற உமா சர்வாவின் முகத்தில் பார்வையை வைத்தபடி,
“எதாவது வரன் வந்துச்சா அண்ணா, பிடிச்சதா?” என்று கேட்டார்.
“இல்லம்மா இப்போதான் ஆரம்பிச்சேன், நாலஞ்சு வந்திருக்கு. ஒன்னும் திருப்தியில்ல”
“அதெல்லாம் நம்ம அப்புவுக்கு நல்லாதவே அமையும்” என்ற உமாவின் பேச்சில் சிவசங்கர் புன்னகை செய்ய பெரியவர்கள் எல்லாம் பேசிக்கொண்டிருந்தனர்.
ரசிகாவை ரேஷ்மி தனியே உட்காரவைத்து,
“ஓய்! நீ எப்படி மாப்பிள்ளை வரணும்னு யோசிச்சு வச்சிருக்க?” என்று கேட்க,
“அப்பா இஷ்டம்தான் க்கா” என்றாள்.
“அப்பா இஷ்டம் ஒகே, உனக்குன்னு எதாவது இருக்கும்ல, இப்போ எனக்கு என்னோட ஃபீல்டுல இருக்கறவர் வேணும் நினைச்சேன், அப்படி சொல்லு”
“அப்படி ஒன்னுமில்லக்கா, அப்பா சொல்றதுதான்” என்றவளை பாவமாய்ப் பார்த்தவள்,
“போ அப்பு நீ” என்று சொல்லும்போது சர்வாவும் பத்ரியும் அவர்கள் பக்கம் வந்தனர்.
“என்ன லேடீஸ் டிஸ்கஷன்?” என்றான் பத்ரி.
“இவ கிட்ட மாப்பிள்ளை எப்படி வேணும் கேட்டா, அப்பா பார்த்துப்பார்னு சொல்றா. கொஞ்சம் கூட எக்ஸ்பெக்டேஷன்ஸ் இல்லை…ப்ச்” என்று ரேஷ்மி சலிக்க,
“விடுங்க ரேஷன், இருந்தாலும் கொஞ்சம் யோசிச்சு ஓகே சொல்லு ரசி. உங்கப்பா அவரை மாதிரியே ஒரு மிலிட்டரி மேனா பார்த்துட போறார்” என்று சர்வா சொல்ல,
“சும்மா இருங்க ரெண்டு பேரும், மாமா அதெல்லாம் நல்லா பார்ப்பார். நம்மளும் இருக்கோம்தானே? நம்ம பார்க்க மாட்டோமா?” என்ற பத்ரியின் கேள்வியில்,
“அதானே” என்று ரேஷ்மி கணவனுக்கு ஹைஃபைக் கொடுத்தாள்.
“ரேஷ்! உனக்கு வாக்கிங் டைம், வா ஒரு டென் மினிட்ஸ் நடக்கலாம்” என்று சொல்ல,
“இன்னிக்கு வேண்டாமே, பாருங்க நம்ம ரசிகா வந்துருக்கா” என்று சாக்கு சொல்ல,
“என்ன அண்ணி நீங்க? டாக்டரா இருந்துட்டு அண்ணா பேச்சுக் கேட்காம இருக்கீங்க, நான் இங்க இருக்கேன். நீங்க எஸ்கேப் ஆகாம வாக்கிங் போங்க” என்று ரசிகா சொல்லவும்,
“உன்னை வச்சு நான் ப்ளான் போட்டா, நீ இப்படி பண்ணிட்டியே? ” என்று புலம்பினாள் ரேஷ்மி.
பத்ரி ரேஷ்மியை அழைத்துக் கொண்டு அவர்கள் தெருவில் நடைபயில, காம்பவுண்ட் சுவரில் சாய்ந்தபடி வெளியே இவர்கள் நடப்பதை சர்வாவும் ரசிகாவும் வேடிக்கைப் பார்த்தனர்.
“உனக்கு மாப்பிள்ளை பிடிக்கலன்னா எங்ககிட்ட சொல்லு. முசோலினிக்கெல்லாம் பயப்படாத ரசி, உங்கப்பா சொல்றார்னு பிடிக்காத உறவுல சிக்காத. ஒகே?” என்றவனின் பேச்சுதான் அவளில் சிக்கிக் கொண்டது.
‘ரசி!’
இப்படி அவன் அழைத்து எத்தனை வருடங்கள் ஆகிறது? இந்த அக்கறை, அன்பு எல்லாம் அவளின் அவசரத்தால் அவள் இழந்தவை. நினைக்கையிலேயே வலித்தது. இருந்தும் அப்பாவை அவன் முசோலினி என்று சொன்னது அவளுக்குப் பிடிக்கவில்லை.
“அப்பாவை அப்படி சொல்லாதீங்க” என்று முறைத்தபடி சொல்ல,
“என்ன சொல்லிட்டு இருக்கேன் நான்? எரும அப்பாவைப் பேசாதன்னு சொல்ற” என்று தலையில் கொட்டினான். அவளுக்கு வலிக்க தலையைத் தேய்த்து
“சர்வா!” என்று அவள் இன்னும் முறைக்க,
“அதெல்லாம் அப்படிதான் நாங்க சொல்லுவோம்” என்றான் இன்னும் விரிந்த புன்னகையுடன்.
“நான் சொன்னது புரிஞ்சதா?” என்று அவன் மீண்டும் அதையே கேட்க,
“புரிஞ்சது” என்று தலையாட்டியவள் இவனுடன் தனியே நின்றால் அப்பா பேசுவார் என்பதால் உள்ளே சென்றுவிட்டாள்.
——————————————–
Read and Share your thoughts friends
✅ End of Episode 5
பிடிக்காத உறவில்
Nice
Yuvi super friend