Pavithra Narayanan - Literary Image 129
Pavithra Narayanan - Literary Image 129
Episode 21

நிலா முற்றம் 21

“அச்சோ சர்வா, எல்லாரும் பார்ப்பாங்க” என்று ரசிகா விலகப் பார்க்க,

ரேஷ்மியோ, “விடுங்க பத்ரி, கையைப் பிடிச்சதுக்கெல்லாம் குத்தம் சொல்லிட்டு” என்று கணவனைத் திட்டினாள்.

“இரு டா உன்னை சித்திட்ட சொல்றேன், பெரியவங்க சொன்னாதானே நீ அடங்குவ” என்ற பத்ரி விளையாட்டாக,

“சித்தீ…” என்று அழைத்துவிட்டான். ஹாலில் நின்றிருந்த புஷ்பாவிற்கு பத்ரியின் குரல் நன்றாய்க் கேட்டுவிட அவர் வெளியே வர,

“அய்யோ நிஜமாவே வந்துட்டாங்க” என்று பத்ரி புலம்ப, ரேஷ்மி அவனை முறைக்க, சர்வாவோ அசையாமல் அப்படியே இருந்தவன்,

“எங்க மம்மி வெஸ்டர்ன் மம்மிண்ணா” என்று சொல்லி புஷ்பாவைப் பார்த்தவன் காலை அவர்கள் வீட்டுப்பக்கமாய் காம்பவுண்டினுள் போட்டு அம்மாவை பார்த்தான். ரசிகாவும் அவர் பக்கம் பார்க்க,

“ரசி நீ எப்போ வந்த? எங்கிட்ட சொல்லவே இல்லை” என்று அவர் மகனைப் பார்க்க,

“மா, உன் மருமக மேரேஜ் ஆன பின்னாடிதான் நம்ம வீட்டுக்கு வருவாளாம், அதுவரைக்கும் பார்டர் தாண்ட மாட்டா” என்று சொன்னவனின் பேச்சுக்கு,

“அதுவும் சரிதான், ஆனா சொல்லியிருந்தா நான் வந்திருப்பேன்ல ரசி?” என்று ரசிகாவிடம் கேட்டார்.

“இல்லைத்த.. இப்போதான் வந்தேன்” என்று ரசிகா திணற,

“அதை விடு, எதாவது சாப்பிட்டியா?” என்று கேட்டவர் அவளுக்கு சாப்பிட கொடுக்கலாம் என்று வீட்டுப்பக்கம் திரும்பும்போது அங்கே வாசலில் முழித்துக் கொண்டிருந்த பத்ரி பார்வையில் விழுந்தான்.

“நீ ஏன் பத்ரி என்னைக் கூப்பிட்ட?” என்று கேட்க,

“அது நான் இவ கையைப் பிடிச்சிருந்தேனாம், நீங்க என்னைத் திட்டுவீங்கன்னு அண்ணா சொன்னான்மா. நான் சொன்னேன் எங்கம்மா மங்கம்மா இல்லை மாடர்ன் அம்மான்னு, ரைட்தானேம்மா?” என்று கேட்டான்.

‘நல்லா வைக்கிறான் இவன் ஐஸ்’ மனைவியிடம் மெல்ல முணுமுணுத்தான் பத்ரி.

புஷ்பாவோ இதையெல்லாம் பெரிதாய் நினைப்பவர் இல்லை, அதுவும் மகன் வேறு பாராட்டாய்ப் பேசியிருக்க, “அதெல்லாம் சரிதான், ஆனா கையைப் பிடிக்கிறதோட நிறுத்திக்கோ டா” என்றதும்,

“சூப்பர் சித்தி” என்றான் பத்ரி. அவரும் சிரித்தபடி ரேஷ்மியிடம்,

“சீக்கிரம் வாக்கிங் முடி ரேஷ்மி, பனி வந்திடும்” என்று சொல்லி போக, அவர்கள் நடைபயிற்சியை மேற்கொண்டனர்.

புஷ்பா உள்ளே போகவும்,
“கையை எடுங்க சர்வா, அத்தை வேறு சிரிச்சிட்டே போறாங்க” என்றாள் ரசிகா கூச்சத்துடன்.

“அட நான்தான் சொன்னேனே எங்கம்மா மாடர்ன் அம்மான்னு, நீ செய்யாதன்னு சொல்ல சொல்லத்தான் எனக்கு செய்யத் தோணுது ரசீ..” என்று ராகம் இழுத்தான் சர்வா.

“அப்போன்னா வச்சிக்கோங்க” என்றதும் வாய்விட்டு சிரித்தவன்,

“ரசி பேச்சை சர்வா மீறமாட்டான்” என்றதும் ரசிகாவுக்கு அவனின் பேச்சு புரிந்துவிட அவன் கையைப் பிடித்துக் கிள்ளியவள் தள்ளி உட்கார்ந்து கொண்டாள்.

புஷ்பா வீட்டினுள் சென்றவர் இவர்களுக்கு உண்பதற்கு முறுக்கு, குக்கீஸ் என்று எடுத்து வந்து தந்தவர்,

“கல்யாணம் முடிஞ்சதும் இந்த பக்கம் வந்துடலாம், உனக்குப் பிடிக்கும்னு ரேஷ்மி சொன்னா இந்த குக்கீஸ், அதான் வாங்கி வச்சேன்” என்றதும்,

“ஹலோ மிஸஸ்.சுகுமாறன் அமேசான்ல நான் வாங்கிக் கொடுத்தேன்” என்று சர்வா சொல்ல,

“நான் சொல்லித்தானே டா வாங்கின?” என்றார் அவர் கடுப்புடன்.

ரசிகாவைப் பார்த்தவர்,
“இவனை எப்படிம்மா லவ் பண்ணின, எவ்வளவு வாய் பாரு இவனுக்கு?”

“ரசி உன் கண்ணுக்கு மட்டும் நிறைய வாய் தெரியுதா? அப்போன்னா முறுக்கு ஒரு வாய்லயும் குக்கீஸ் ஒரு வாய்லயும் சாப்பிடலாம் போல” என்றவன்,

“எங்க காதல் கதையைத் தெரிஞ்சக்கனுமாம்மா நீங்க?” என்று புஷ்பாவிடம் கேட்டான். அவரும் தலையசைக்க,

“பத்ரீண்ணா” என்று சுவரில் இருந்து குதித்தவன் வாசலைப் பார்த்து,

“எங்க லவ் ஸ்டோரி கேட்கிறாங்க அம்மா, நீயே சொல்லேன்” என்று சொல்ல,

“சித்தி, இவனை நம்பாதீங்க. கதை சொல்றேன்னு சொல்லி மொக்கைப் போட்டுட்டான்” பத்ரி கடுப்பாக சொல்லியபடி கேட்டைத் திறந்தான்.

“இவன் அப்படிதான் செய்வான்” என்று மகனை அறிந்தவராக சொல்லி அவர் உள்ளே போனார். ரேஷ்மி வாக்கிங் முடித்து வந்து களைப்பாக நாற்காலியில் அமர, பத்ரி தண்ணீர் எடுத்து வர,

“கொடுங்க” என்று சொல்லி அவள் வாங்கப் போக,

“வைஃப் மினிட்ஸ் கழிச்சு குடி, அமைதியா இரு” என்றான்.

இவர்கள் வரவும் ரசிகா மெல்ல நாற்காலியில் கால் வைத்து கீழே இறங்கி ரேஷ்மியுடன் உட்கார்ந்து விட்டாள்.

“ரசி, ஒரு பாட்டு பாடேன். பாப்பாவுக்கு சித்தி வாய்ஸ் கேட்கட்டும்” என்று கேட்டாள் ரேஷ்மி.

“உன் பார்வையில் பாடு ரசி” என்று மறுத்தான் சர்வா.

“எனக்கு அப்பவே டவுட் டா உன் மேல, உன் பார்வையில்னு கடைசியில உன்னோட பார்வையைத்தான் ரசி பாடினாளா?” என்று பத்ரி கேட்க,

“டேய் அண்ணா, நிஜமா இல்லைடா. அந்த சாங் இவ ரொம்ப நல்லா பாடுவா அதனால்தான் கேட்டேன்” என்று சர்வா உண்மையை சொல்ல,

“நான் நம்பமாட்டேன் உன்னை” என்று பத்ரி சிரித்தான்.

“அடப்பாவி அண்ணா! நிஜமா அந்த பாட்டு ரசி ரொம்ப ரசிச்சு பாடுவா, ஒருவேளை அவளுக்கு என்னை நினைச்சுப் பாட தோணியிருக்குமோ என்னவோ?” என்று சொல்லிவிட ரசிகாவின் முகத்தில் வெட்கம் மலர்ந்தன. உண்மை அதுதானே?

என்று அவன் அகம் நுழைந்தானோ அன்று முதல் அவள் பாடலில் பாட்டுடைத் தலைவன் ஆகிப்போனானே சர்வா?

“சர்வா சொல்றதுதான் உண்மை போலயே” ரேஷ்மி கண்ணடித்துவிட்டு தண்ணீரைப் பருகினாள். இது எதையும் ரசிகா கவனிக்கவில்லை வெகு நாள் கழித்து ரசித்து லயித்து சர்வாவை நினைத்து பாடினாள். இதயம் முழுவதும் ஒரு நிறைவான உணர்வு, தன்னுள் நித்தியமாய் நிலைத்திருப்பவனை நினைத்தபடி

‘உன் பார்வையில்
ஓராயிரம் கவிதை நான்
எழுதுவேன் காற்றில் நானே
நிதமும் உன்னை நினைக்கிறேன்
நினைவினாலே அணைக்கிறேன்’

என்று அவளின் பார்வை மொத்தமும் சர்வஜனனிடம்தான்.

சர்வஜனனோ மெய் மறந்து அவளின் பாடலைக் கேட்டிருந்தான். தன்னை அவள் நேசிக்கும் உணர்வு அவனை நெகிழச் செய்தது. அந்த நொடி அவளை அணைத்து முத்தமிடத் தோன்றியது. அருகில் யாருமில்லை என்றால் நிச்சயம் செய்திருப்பான்.

காதலைக் கொஞ்சம் கொஞ்சமாய்க் காட்டிக் கொண்டிருந்த காரிகையின் மீது அவனுக்கும் காதல் மெல்ல மெல்ல மலரத் தொடங்கியது.

சர்வாவும் ரசிகாவும் பாடலில் லயித்திருக்க, அந்த மோன நிலையைக் கலைத்திட வேண்டாமென மெல்லமாய் சத்தம் செய்யாது வீட்டினுள் நுழைந்தனர் பத்ரியும் ரேஷ்மியும்.

பாடி முடித்து ரசிகா பார்க்க, பக்கத்தில் சர்வா தவிர யாருமில்லை. அவனும் சுவரில் இருந்து குதித்து இவள் அருகே உட்கார்ந்திருந்தான்.

“ரசீ, ஒரு டவுட்” சர்வா கேட்கவும்

“சொல்லுங்க” என்றாள் ரசிகா.

“இல்லை, அண்ணி சொன்ன மாதிரி என்னை நினைச்சுப் பாடினியா?” என்றான் ஆழ்ந்த குரலில்.

“அது.. நினைச்சிட்டுப் பாடுறதில்லை, பாடினா நீங்க தானா ஞாபகத்துல வந்துடுவீங்க” என்று அவள் உணர்வை சொன்னாள்.

“அப்போ எப்போ பாடினாலும் நான்தான் ஞாபகம் வருவேனா?” ஆர்வமாய் சர்வா கேட்க ‘ஆமாம்’ என்பது போல் அவளிடம் ஒரு தலையசைப்பு.

“காதலிச்சா எப்படி இருக்கும்னு தெரியல, ஆனா நம்மை ஒருத்தங்களுக்குப் பிடிக்கும்ன்றது தனி ஃபீல் ரசி, தேங்க்ஸ்” என்று அவள் கையைப் பிடித்தவன் அவளது வலக்கையில் இருந்த ஒற்றை வளையலை வருடினான்.

“நீ அசைந்து இசைத்தது வளைக்கரம்னு பாடும்போதெல்லாம் என் கண்ணு உன் கையைத்தான் பார்க்கும்” என்றதும் ஆச்சரியமாய் அவனைப் பார்த்தவள்,

“நான் ஒன்னு கேட்கணும்” என்று சொல்லி,

“நீங்க என்னை எப்பவும் ஏன் அந்த பாட்டு பாட சொல்றீங்க?” என்று புருவம் உயர்த்தினாள்.

“ப்ராமிஸா வேற காரணம் இல்லடி, அது அன்னிக்கு உன் ப்ரண்ட் சொல்லி உன்னை பாட சொன்னேன், நீ ரொம்ப நல்லா பாடுற. அதான் கேட்டுட்டே இருக்க பிடிச்சது” என்றான் உண்மையாக.

“அதை விடு ரசி” என்று மீண்டும் அவன் விரல்கள் அவள் வளையலைப் பிடித்து மேலும் கீழும் அவள் கைகளில் இழுத்து விட்டபடி,

“வளைக்கரம்னு சொல்லிட்டு ஒரே ஒரு வளையல் போட்டிருக்க, நிறைய வளையல் போட்டா நல்லா இருக்கும் ரசி, நானும் இப்படியே வச்சு விளையாடலாமில்ல” என்றதும் அதிசயமாய் அவனைப் பார்த்தாள் ரசிகா.

“என்ன ஷாக்கா பார்க்குற?”

“இல்லை யுகே போன பின்னாடி கூட இந்த பண்பாடு பாரம்பரியம் எல்லாம் போகாம இருக்கே அதை நினைச்சேன்”

“யுகேல என்னோட கலிக்ஸ் கிட்ட நம்ம கலாச்சாரத்தை தான் பரப்பிட்டு வந்திருக்கேன், வளையல் கலாச்சாரம்னு இல்லை. இட்ஸ் எ சைக்காலஜி, அதோட சவுண்ட் பாசிட்டிவ் வைப்ஸ் கொடுக்கும்” என்று பேச பேச,

“நீங்க தயவு செஞ்சு க்ளாஸ் பக்கம் வந்துராதீங்க, பத்ரீண்ணா சொல்ற மாதிரி ரொம்ப மொக்கை” என்றதும்,

அவள் மூக்கைப் பிடித்தவன் “என்னையா மொக்கை சொல்ற நீ? இனிமே நிறைய வளையல் போடணும் நீ. எனக்கு அந்த சத்தம் கேட்டுட்டே இருக்கணும்” என்றான் ஆசையுடன்.

“அது போர்ட்ல எழுதும்போது ரொம்ப சத்தம் செய்யும், அதனால ஒன்னோட நிறுத்திட்டேன். வீட்ல போட்டுக்கிறேன், ஓகேவா?” என்று ரசிகா சொல்ல,

“ஒகே ரசி, நம்ம கல்யாணத்துக்கு அப்புறம் ஒரே ஒரு கன்டிஷன் மட்டும் ஃபாலோ செய்யனும். செய்வியா?” என்று ரசிகாவைப் பார்க்க,

“சொல்லுங்க என்ன கண்டிஷன்?”

“அது உனக்கு மனசுல என்ன தோணினாலும், எங்கிட்ட தயங்காம சொல்லிடணும். உனக்கு பெர்சனலா, உன்னோட ப்ரண்ட்ஸ் அது மாதிரி வேண்டாம், ஆனா நம்ம இரண்டு பேர் விஷயம்னா எந்த ஹெசிடேஷனும் இல்லாம நீ என்னோட ஷேர் செய்யணும், நானும் செய்வேன். எதையும் நீ மனசுல வச்சு கஷ்டப்படக் கூடாது” என்றான் சீரியசாக.

“ஏன் இவ்வளவு சீரியசா பேசுறீங்க சர்வா?”

“இல்லை, எனக்குக் கொஞ்சம் பயமா இருக்கு ரசி. முன்னாடி லைஃப்ல எந்த டிசிஷன் எடுத்தாலும் அது என்னோட போயிடும், இனி நம்மை யோசிச்சு எடுக்கணும். அதை விட உன்னோட இந்த காதல், அதுக்கு எந்தளவு என்னால திரும்பி காதலிக்க முடியும் தெரியல. ஆனால் நீ அழுதாலோ கஷ்டப்பட்டாலோ மட்டும் என்னால தாங்க முடியாது. ஐ ரியலி கேர் ஃபார் யூ” என்று பேசினான். பேசும் அவனைப் பார்த்த ரசிகா,

“உங்க கிட்ட பிடிச்சதே உங்க ப்ராக்டிலான பேச்சும், ஜோவியல் நேச்சுரும்தான். என்னை மாதிரி சீரியசா பேசாதீங்க” என்று ரசிகா புன்னகை செய்யவும்,

“ஒருவேளை ரசியோட சர்வாவா மாறிட்டு வரேனோ?” என்று கண்சிமிட்டினான்.

“சரி, எல்லாரும் கேட்கிறாங்க. எனக்கே ஒரு டவுட்? உன்னோட காதல் கதையை சொல்லேன், என்ன காரணம் லவ் எங்க இருந்து வந்துச்சு?” என்று சர்வஜனன் ரசிகாவிடம் கேட்டான்.

“காதலுக்கு கதை எப்படி முக்கியமில்லையோ, காரணமும் முக்கியமில்லை சர்வா ஸர், தெரியல எப்போவுமே உங்களை நான் க்ளோஸா நினைச்சிருக்கேன். இடையில நான் செஞ்ச லூசுத்தனம், நீங்க என்னை அவாய்ட் பண்ணிட்டீங்க, அப்போ ரொம்ப மிஸ் பண்ணுவேன். யாரும் பெருசா ப்ரண்ட்ஸ் இல்லை, காலேஜ் போய் யுவி கூட ப்ரண்ட் ஆனதும்தான் ஐ ஃபெல்ட் பெட்டர்” என்றதும்,

குறுகுறுவென அவளைப் பார்த்தவன்,
“ஓஹ், அந்த யுவி மேடம் இருந்ததால என்னை மறந்துட்டீங்களோ?” என்றான் பொறாமையுடன்.

“நான் அப்படி சொன்னேனா? எனக்குன்னு ஒரு ப்ரண்ட்னு பார்த்தா எப்பவும் நீங்கதான் ப்ரஸ்ட், பட் இப்போ யுவிதான் என்னோட பெஸ்ட் ப்ரண்ட், நீங்க ப்ரண்ட் இல்லையில்ல இப்போ” ரசிகா தலையசைத்து கனிவாய் சொன்னாள்.

“நான் நிஜமா இப்படியெல்லாம் நம்ம சேருவோம்னு நினைக்கல, இது ஒரு மேஜிக். சில விஷயம் அனுபவிக்கணும் ஆராயக்கூடாது, லவ்வுக்கும் லாஜிக்கும் சம்மந்தமே கிடையாது. அப்படிதான் எப்படியோ இந்த சர்வா மேல லவ் வந்துடுச்சு” என்று புன்னகையில் நிறைந்த முகத்துடன் ரசிகா சொல்ல,

“நீ எப்போ இப்படி தெளிவா பேச ஆரம்பிச்ச?” கிண்டலாய்க் கேட்டான் சர்வா.

“சர்வாவோட ரசியா மாறிட்டேனோ என்னவோ?” அவனைப்போலவே சொல்ல இருவருக்கும் அந்த மாலை பொழுது மனத்துக்குக்கு நெருக்கமாகிப்போனது. வாய்விட்டு சிரித்த சர்வா,

“சரி ரொம்ப நேரம் வெளியே இருக்கோம், என் அண்ணன் நம்மை வச்சு உள்ள படமே ஓட்டுவான், என் மாமனார் வரும்போது சமத்து பையனா இருக்கணும், கம் லெட்ஸ் கோ” என்று அவளை எழுப்பி உள்ளே அழைத்துப் போனான்.

✅ End of Episode 21
How did you feel about this episode?
❤️ 5 😂 1 more...

You must Log in or Register to react here

💬 4 Replies
Sathya Velusamy Reader 19 hours ago

Excellent epi....just loved it❤️❤️❤️

❤️ 2 more...
Mrs Beena loganathan Reader 17 hours ago
பாவை எண்ணத்தில் 

பார்க்கும் பார்வையில் 

பேசும் பேச்சில் 
பாடும் பாட்டில்
பாட்டின் இசையில் 
பரவியிருக்கும் காதல்.....
காதல் மட்டுமே....
ரசிகா சர்வாவை ரசிக்க 
ரசிகாவை ரசிக்கும் சர்வா
ரசனையில் காதல் வழிய
புரிந்து கொண்ட துணை 
பேரழகு.....
❤️ 1 more...
Srichitra Reader 16 hours ago

Very very nice 

❤️ 1 more...
Geethazhagan Reader 11 hours ago

Very nice epi

❤️ 1 more...
Log in or Register to reply

🔗 Insert Link

Scroll to Top