Episode 44

“அம்மடூ! நான் காலேஜ் வெளியே நிக்குறேன், பஸ்ல போக வேண்டாம்” என்று வரப்ரசாத்தின் மெசெஜைப் பார்க்கவும் பதட்டமாய் நகரின் அந்த பெரிய கல்லூரியில் இருந்து வெளியே வந்து நின்றாள் கல்கி.

கல்கி இப்போது எம்பிஏ இரண்டாம் ஆண்டு படிக்கிறாள். சென்னையில் ஒரு பிரபல கல்லூரியில் சீட் கிடைத்துவிட, சிரஞ்சீவி இப்போது விசாகப்பட்டிணத்தில் வேலையில் இருந்தான். இவளுடன் தான் சூர்யாவும் யமுனாவும்.

ஆசை ஒரு புறம் இருந்தாலும் அச்சம் அதனை மறைக்க வேகவேகமாய் கல்கி கார் நின்ற திசையைப் பார்த்தாள். சிரஞ்சீவி அவள் முகத்தில் சந்தோஷத்தைப் பார்க்கவென ஆவலாய் அவளைப் பார்த்து நிற்க, அவள் வந்த வேகம் கண்டு

“ஹே! ஏன் இவ்வளவு வேகம்?” என்று கேட்டவனிடம்

“எல்லாரும் நல்லாயிருக்காங்க தானே?” என்றாள் படபடப்பாய்.

“ஏன்? எல்லாரும் நல்லாதான் இருக்காங்க கல்கி. நீ ஏன் டென்ஷனா இருக்க?” என்று கேட்டபடியே அவளைக் காரில் உட்கார வைத்தான் வரப்ரசாத்.

“பின்ன தீடீர்னு மெசெஜ் பண்ணி வந்திருக்கேன்னு சொன்னா, முன்னாடி நீங்க அப்பாவுக்கு உடம்பு சரியில்லாதப்போ வந்ததுதான் டக்குனு ஞாபகத்துல வருது” என்றவளைத் தோளோடு அணைத்து ஆசுவாசப்படுத்தி தண்ணீர் கொடுத்தவன்

“சர்ப்பரைஸா இருக்கட்டுமேனுதான்” என்றதும் கல்கி முறைத்தாள்.

“ஏமிரா? சர்ப்பரைஸ் பிடிக்கலையா?”

“வராத ப்ரசாத் இப்படியெல்லாம் சர்ப்பரைஸ் செய்ய மாட்டாரே, கல்யாணமாகி இந்த இரண்டரை வருஷத்துல இதெல்லாம் நடந்ததே இல்லையே, அதான் ஷாக்காயிட்டேன்” என்று அவனைக் குறை சொன்னாள்.

“நாளைக்கு ஈவினிங் பரத் ரிசப்ஷென் இருக்கு, மறந்துட்டியா?”

“நான் மறக்கல, நீங்க ஜெகா மாமா கல்யாணத்துக்கே முகூர்த்த நேரத்துக்கு அரைமணி நேரம் முன்னாடி வந்தவர் ஆச்சே. எப்படியும் டைரக்டா பரத் அண்ணா மேரேஜுக்குத்தான் வருவீங்க நினைச்சேன்” என்று படபடவென பேச அவளுக்கு மூச்சு வாங்கியது.

“பேபி இருக்கும்போது கொஞ்சம் உன் பேச்சைக் குறை கல்கி, ரிலாக்ஸ் ஆகு ஃபர்ஸ்ட் நீ” என்றவன் மெல்ல காரை செலுத்தினான். கல்கிக்கு இப்போது ஆறு மாதம். அவன் பேசாதே என்ற கடுப்பில் கார் கண்ணாடியை இறக்கி விட்டு அமைதியாய் வெளியே வேடிக்கை பார்த்தவளைக் கண்டு மெல்ல புன்னகைத்தவன்

“அம்மடூ! வேகமாகப் பேசாதன்னு சொன்னேன். பேசாதன்னு சொல்லல, எதுக்கு டென்ஷன் ரா? உன்னைப் பார்த்து ஃபிஃப்டின் டேய்ஸ் ஆச்சு, அதான் வொர்க் ரொம்ப இல்லை. லீவ் போட்டு வந்துட்டேன்” என்று பொறுமையாப் பேச கல்கியின் கண்கள் லேசாய்க் கலங்க

“இத்தனை நாள் கழிச்சு வந்தா உங்ககிட்ட பேசணும்தான் தோணும். உங்களைப் பார்த்தா என்னால கன்ட்ரோலா இருக்க முடியல. போதுமா?” என்று ரோஷமாய் சொன்னாள் கல்கி. சிரஞ்சீவி சமாதானம் செய்தபடி வண்டியை செலுத்தினான்.

வீட்டிற்குள் நுழையும்போது கல்கியின் முகம் அவ்வளவு ப்ரகாசமாய் இருக்க, யமுனா அதனைக் கண்டு

“பாருங்களேன், இவளை என்னதான் நம்ம பார்த்துக்கிட்டாலும் ப்ரசாத் வந்தா மட்டும்தான் முகத்துல பொலிவு வருது” என்று கிண்டல் செய்தார்.

அத்தையை முறைத்தவள் “ப்ரசாத், நீங்க போகும்போது மாமாவை உங்களோட வைசாக் அழைச்சிட்டுப் போயிடுங்க” என்றதும்

“போகட்டும், எனக்கென்ன? நானும் சூர்யா கூடவே போய்டுவேன். என்னை விட்டுட்டு என் சூர்யா போக மாட்டார்” என்றதும் சூர்யா வாய்விட்டு சிரிக்க,

கல்கியைப் பார்த்த ப்ரசாத் “அம்மடூ! விடுடா. நான் சீக்கிரமே ட்ரான்ஸ்ஃபர் வாங்கிடுறேன்” என்று மனைவியை சமாதானம் செய்தான்.

“முதல்ல போய் ஃப்ரஷ் ஆகிட்டு வா” என்று கல்கியிடம் சொன்ன யமுனா அவள் வரவும் சத்துமாவு கொடுத்துவிட்டு கிச்சனுக்கு சென்றுவிட, கல்கி கொஞ்சம் குடித்தவளுக்கு அதற்கு மேல் இறங்கவில்லை. சூர்யாவைப் பார்த்தவள்

“மாமா போதும் மாமா, உங்க ப்ரியத்தம்மா கிட்ட சொல்லி என்னைக் காப்பாத்துங்க” என்று அவருக்கு ஐஸ் வைக்க

“நானா, இதான் டெய்லி நடக்குதா?” என்று அப்பாவிடம் விசாரித்தான் வரப்ரசாத்.

மகள் இல்லாத சூர்யாவுக்கும் யமுனாவுக்கும் கல்கி மகள்தான். மகள் போல என்றெல்லாம் கிடையாது. கல்கியை ஒவ்வொரு நொடியும் ஆசிர்வதிக்கப்பட்டவளாகவே உணரவைத்தார்கள் அவர்கள், முன்பெல்லாம் இரண்டாவது பெண் என்று தன்னை எல்லாரும் கொஞ்சம் குறைவாய் நடத்தும் எண்ணம் இருக்கும். எதாவது ஒரு நொடியெனும் அதனை யாராவது உணர்த்திவிடுவார்கள். இப்போது அந்த எண்ணம் அணு அளவும் அவளிடம் கிடையாது.

அவள் எம்பிஏ படிக்கிறேன் என்று சொன்னபோது, சூர்யாவோ யமுனாவோ தடை சொல்லவே இல்லை.

“யமுனா கூட மேரேஜ் அப்புறம்தான் ஹையர் ஸ்டடீஸ் பண்ணினா. நாங்க இருக்கோம்டா, நீ என்ன வேணுமோ படி” என்று சொல்லிவிட்டார். உதயமூர்த்தியிடம் சொன்னதிற்கு

“அத்தை மாமா ஒத்துக்கிட்டா எனக்கொன்னுமில்லை கல்கி” என்றுவிட்டார்.

வரப்ரசாத் சோஃபாவில் மனைவியின் அருகே உட்கார்ந்து
“இப்படித்தான் எங்கம்மாவை ஏமாத்துறியா நீ? வளர்ந்துருக்கதானே? ஹெல்த்தியா சாப்பிடனும்னு தெரியாதா? ஏமி நானா இதெல்லாம்?” என்று சூர்யாவையும் பார்க்க

“மாமா, உங்க பங்காரத்தை ஸ்டாப் பண்ண சொல்லுங்க. அட்வைஸ் பண்ண ஆரம்பிச்சா நிறுத்த மாட்டார்” என்றதும்

“ஹாஹா, அதெல்லாம் பாப்பா ஒழுங்கா சாப்பிட்டுடுவா சிரு. நீ பேசாத” என்றார். அதற்குள் யமுனா வந்து பார்க்க இன்னும் அரை கிண்ணம் அப்படியே இருக்க திட்ட ஆரம்பித்துவிட்டார்

“சொல்ற பேச்சே கேட்காத கல்கி நீ. உனக்கெல்லாம் எங்கண்ணா தான் சரி. எப்போ கொடுத்துட்டு போனேன் நான்? ப்ரசாத் இவளுக்கு உங்கப்பா ரொம்ப செல்லம் கொடுக்கிறார் டா. ரெஸ்ட் எடுக்க சொன்னா கேட்கிறதே இல்லை, காலையில சீக்கிரமே எழுந்து படிக்கிறா, ஈவினிங் வந்தும் படிக்கிறா. படிச்சா மேடம் சாப்பிடவும் மாட்டாங்க” என்று அவள் மீது கொண்ட அக்கறையில் பேசினார்.

வரப்ரசாத் கல்கியைப் பார்க்க, யமுனா விடாமல்
“பத்து நிமிஷத்துல இதை காலி பண்ற நீ. ஏழு மணிக்கு டிஃபன் சாப்பிடுற?” என்று சொல்ல வீட்டிற்குக் கிளம்பிய வசந்திக்கா சிரஞ்சீவியைக் கண்டுவிட்டு நலம் விசாரித்தவர்

“அம்மா சொல்றது சரிதான் தம்பி, பாப்பா முன்ன மாதிரி சாப்பிடுறதில்ல” என்று சொல்ல, அவரையும் முறைத்தாள் கல்கி.

“எனக்கு இந்த டேஸ்டே பிடிக்கலங்க” என்று கல்கி சொல்ல,

“ம்மா, நீங்க போங்க. நான் இவளை சாப்பிட வைக்கிறேன்” என்றவன் அவளுக்கு ஊட்டிவிட அவனைத் திட்டிக்கொண்டே கல்கி சாப்பிட்டு முடித்தாள்.

“நீங்க இருங்க. எனக்கு ஆன்லைன்ல இன்னிக்கு க்ளாஸ் இருக்கு” என்று சூர்யா அவர் அறைக்குள் போக, கல்கியைத் தோளோடு சேர்த்தணைத்த வரப்ரசாத்

“ஏன் கல்கி உன்னை ஸ்டெர்ய்ன் பண்ணிக்கிற?” என்று கேட்டவனின் கரத்துக்குள் வாகாய் சாய்ந்த கல்கி

“அதெல்லாம் இல்லை, அத்தை என் மேல இருக்க பாசத்துல சொல்றாங்க. அஞ்சு மணிக்குத்தான் எழுந்துப்பேன்” என்றாள்.

அவளை அணைத்தபடியே “நான் படிக்கலைன்னா திட்டுவேன் நினைக்கிறியா நீ? எனக்கு உன்னோட டீரிம்ஸ் அளவுக்கு உன் ஹெல்த்தும் முக்கியம் கல்கி. இவ்வளவு தூரம் டெய்லி ட்ராவல் பண்ணி படிச்சிட்டு வர, இன்னும் உன்னை ப்ரஷர் பண்ணிக்காத. பேபி வந்தது சந்தோஷம்னாலும் படிச்சிட்டு இருக்கும்போது இப்படி..” என்று அவன் சொல்லி முடிக்கும் முன்னே அவன் வாயில் பட்டென்று அடி போட்டாள் கல்கி.

“இந்த பேச்செல்லாம் பேசாதீங்க ப்ரசாத். எனக்கு கோவம் வருது, வரதே மாசத்துக்கு ஒரு தடவ, இதுல இப்படி பேசி என்னை இரிட்டேட் செய்யாதீங்க” என்றாள் அதட்டலாக.

“எனக்குப் படிக்க பிடிச்சிருக்குப் படிக்கிறேன். செய்வன திருந்தச் செய்னு தெரியுமா இல்லை தெல்லேதா?” என்று அவள் கேட்க

“செய்வினையா? ப்ளாக் மேஜிக்?” என்று அவன் விழிக்க, அவனின் தமிழில் இந்த பொன்மொழிக்கெல்லாம் இடமில்லையே. பேச்சுத்தமிழ் மட்டுமே அவன் அறிவான்.

“ப்ரசாத், அய்யோ” என்று சிரிப்புடன் அவன் தோளில் சாய்ந்தவள்

“எது செஞ்சாலும் பெஸ்டா செய்யணும் சொல்றேன்” என்றவள் சிரிப்புடனே

“எனக்கு என்ன இல்ல? காலேஜ் பஸ்ல போய்ட்டு வரேன், அத்தை மாமா வீட்ல ஒரு வேலை செய்ய விடுறதில்லை. படிக்கிற வேலை மட்டும்தான். அதை ஒழுங்கா செய்ய வேண்டாமா? எனக்கு நீங்களும் நம்ம குழந்தையும் எப்பவுமே என்னோட பலம்தான். கல்யாணம் செஞ்சதால, குழந்தை வந்ததால இதை எக்ஸ்யூஸா என்னால சொல்ல முடியாது, முன்னாடி விட இப்போ நான் மிசஸ். வரப்ரசாத் ஸோ என்னால உங்களுக்குப் பெருமைதான் வரனும். புரிஞ்சதா?” என்று அவள் அவன் அவனின் சட்டைக் காலரைப் பற்றியபடி தோளில் சாய்ந்தவண்ணம் கேட்க

“யூ ஆர் ஆல்வேய்ஸ் மை ப்ரைட் அம்மடூ” என்றவன் அவள் கன்னத்தில் முத்தமிட

“அத்தை வந்துடுவாங்க” என்றதும் அவள் நெற்றியில் செல்லமாய் முட்டியவன்

“நம்ம மட்டும் இருக்கோம்ன்ற தாட்ல இருந்துட்டேன், என்னை எப்பவும் எல்லாம் மறக்க வச்சிடு நீ” என்றவன் அவளை விட்டு விலகி உட்கார

கல்கி எழுந்து கொண்டவள் சோஃபாவில் பின் நின்றபடியே முன்னால் அவனை நெருங்கி “போலீஸூக்குத் திருட்டுத்தனம் கிடையாது, ஆனா நான் அப்படி இல்லை” என்றவள் அவனுக்கு முத்தங்கள் வழங்க

“ஏய்! அம்மடூ! அம்மா வந்துடுவாங்க” என்றவன் வேகமாய் எழுந்து அவளை அறைக்குள் இழுத்துப் போய் தன் முத்தங்களால் அவள் முகத்தை ஒரு இடமின்றி நிறைத்து இதழில் வந்து நிலைத்தான்.

களைத்து உட்கார்ந்த கல்கியை அணைத்து கட்டிலில் சாய்ந்தவன்
“நான் சீக்கிரமே ட்ரான்ஸ்ஃபர் வாங்கிடுவேன். ஹையர் அபிஷியல் கிட்ட பேசியிருக்கேன். உனக்கு டெலிவரி ஆகும்போது நான் உன் கூடத்தான் இருப்பேன்” என்று சொல்லி அவள் கையைப் பிடித்துக் கொண்டான்.

“ஓஹ், அப்போ உங்க குழந்தை வரும்போது இருப்பீங்க, இப்போ எங்கூட இருக்க முடியல” என்று முகம் தூக்கிய கல்கியின் கன்னத்தைப் பிடித்தவன்

“அம்மடூ! அம்மடூ! அப்போ நம்ம குழந்தையைப் பார்க்க நிறைய பேர் இருப்பாங்க. எல்லார் கவனமும் பாப்பா மேல இருக்கும். ஆனா டெலிவரி முடிஞ்சு என்னோட அம்மடூவைப் பார்க்க நான் இருக்க வேண்டாமா?” என்று கேட்டவனை அப்படியே இறுக கட்டிக்கொள்ளத் தோன்றியது. நெஞ்சம் அவன் நேசத்தில் நெகிழ்ந்து இருந்தது.

“அம்மாவுக்கு டெலிவரி ஆனபோது பெத்தம்மா என்னைப் பார்த்தங்க. நானா அம்மாவைப் பார்த்தாராம். தாத்தா வீட்ல வேற ஏத்துக்கலன்னு அம்மா ஃபீல் செய்யக் கூடாதுன்னு என்னை விட அம்மாவை அதிகம் கேர் பண்ணிக்கிட்டதா அம்மா சொல்வாங்க. அம்மா டெலிவரி அப்போ கொஞ்சம் கஷ்டப்பட்டாங்களா, தனியா மேனேஜ் செஞ்சதால அப்போ ஒரே குழந்தை போதும்னு நிறுத்திட்டாங்களாம்” என்று சொல்ல சொல்ல

“அத்தை ரொம்ப லக்கில, மாமா எல்லாத்துக்கும் வொர்த்” என்றவளை அவன் ஒரு பார்வை பார்க்க

“என்ன லுக்? நாங்க உண்மையை எல்லாம் உடனே ஏத்துப்போம். பட் நானும் ரொம்ப லக்கி” என்றாள் கல்கி மிடுக்காக.

“நான் இதான் நினைச்சேன்னு தெரிஞ்சிடுச்சா உனக்கு?”

“அதெல்லாம் எனக்கு உங்களைப் பார்த்தாலே தெரியும்”

“அவுனா?”

“அவுனு, அவுனு” என்றவள் “அத்தை!!!” என்று கத்தினாள்.

“என்னாச்சு டா?” என்று பதட்டமாய் யமுனா ஓடி வர, கூடவே சூர்யாவும் வந்துவிட இவள் ஏன் கத்தினாள் என புரியாமல் பார்த்தான் சிரஞ்சீவி.

“ஒன்னுமில்ல, பக்கத்துல வாங்க” என்று சொல்லி யமுனாவை இழுத்து தன்னருகே மெத்தையில் உட்கார வைத்தவள்

“இப்படி ஒரு சூப்பரான பையனைப் பெத்து எனக்குக் கொடுத்தீங்க இல்ல” என்று சொல்லி அவர் கன்னத்தில் பட்டென்று முத்தம் வைத்தாள். யமுனா சிரிப்புடன் அவள் கன்னத்தில் “வாலு டி நீ” என்று தட்ட

“எங்கப்பா உன்னை முறைக்கிறார்” என்றான் வரப்ரசாத்.

“மாமா!” என்று அவரைப் பார்த்தவள் “அத்தை மடி மெத்தையடின்னு நாங்க ஆட வேண்டிய வயசுல எங்கத்தையை இங்க அழைச்சிட்டு வந்துட்டீங்க, ஸோ இதெல்லாம் நீங்க கேட்க கூடாது” என்றதும் சூர்யா புன்னகையுடன் கல்கியைப் பார்த்தார்.

“அதுக்குத்தானே உன்னை உங்க அத்தை கூடவே இருக்க விட்டாச்சு பாப்பா” என்றார் அவர்.

“இருந்தாலும் மாமா பொண்ணு மக்கும்மா” என்ற வரப்ரசாத்

“அழகா வளர்த்து வச்ச பையன் நான் பக்கத்துல இருக்கேன், உங்களைக் கூப்பிட்டு கிஸ் பண்றா” என்றதும் எல்லாருக்குமே புன்னகை.

இரவு உணவு முடிந்து கல்கியும் வரப்ரசாத்தும் அறைக்குள் வர, கல்கிக்கு அவன் வார்த்தைகள் அவ்வளவு பலம் கொடுத்தன. அவனால் அந்த சமயம் உடன் இருக்க முடியுமோ என்னவோ ஆனால் இப்படி யோசிக்கவே ஒரு மனமும், உயர்வான குணமும் வேண்டுமே, எத்தனைப் பேர் பிள்ளைப் பெற்ற பின் மனைவியின் நலனை நினைப்பார்கள் என்று நினைத்தாள்.

அவனின் தோளில் தலைவைத்துப் படுத்திருந்தவளைப் பார்த்தவன்
“இப்பவும் என்னோட மெசெஜ் வந்தப்பறம்தான் தூங்குறியா?” என்று விசாரித்தான்.

“நோ நோ! நான் திருந்திட்டேன் ப்ரசாத். உங்க பாப்பா ரொம்ப தூங்கமூஞ்சி, என்னை ஒன்பது மணிக்கெல்லாம் தூங்க வச்சிடுவா. பாப்பா இருக்கா இல்ல ப்ரசாத், அப்படியெல்லாம் செய்ய மாட்டேன். மார்னிங் உங்க மெசெஜ் பார்த்ததும் அப்படியே அந்த நாள் பூஸ்ட் அப் ஆகிடும்” என்றாள் புன்னகையுடன்.

“தட்ஸ் குட்! இப்போ பத்து மணி ஆகிடுச்சு, தூங்கு” என்று சொல்லி அவளை வாகாய்ப் படுக்க வைத்து இவன் பின்பக்கமாய் வந்து அணைத்துப் படுக்க, கல்கி அவனுடன் நன்றாய் ஒன்றினாள்.

அவளின் நெருக்கத்தில் “என்ன ம்மா என்னை ரொம்ப மிஸ் பண்றியா?” என்று கேட்டான்.

அவள் பதில் சொல்லாமல் இன்னும் அவனுடன் நெருங்கிப் படுக்க “ஐ மிஸ் யூ மோர்” என்றான்.

“உனக்கு என் மேல கோவமில்லையே கல்கி? இப்படி ப்ரக்னென்ஸீ டைம்ல நீ என்னை ரொம்ப தேடும்போது டியுட்டித்தான் முக்கியம்னு வைஸாக்ல போய் உட்கார்ந்துட்டேன்னு” என்று கேட்டவனிடம் மறுப்பாய்த் தலையசைத்தாள் கல்கி.

“மிஸ் பண்றதை விட ரொம்ப லவ் பண்றேன் உங்களை” என்று திரும்பி அவன் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டவள்

“உங்க மேல இதுல கோவப்பட ஒன்னுமே இல்ல. நான் இப்போ படிக்கலன்னா உங்க கூட இருந்திருப்பேன், அத்தை மாமாவும் கூட அவங்க வேலையில இருந்திருப்பாங்க. இப்போ எனக்காக எல்லாம் விட்டு அவங்க இங்க இருக்காங்க. காலேஜ் கூட நீங்க அங்க படிக்க சொல்லாம என்னோட இஷ்டம்னு சொல்லிட்டீங்க, அப்போ உங்க மேல எப்படி கோவப்பட முடியும்?” என்றாள் கல்கி.

“இருந்தாலும் இது நம்ம பேபி இல்லையா? நீ என்னை மிஸ் பண்றேன்னு தெரிஞ்சும் எதுவும் செய்யாம இருக்கறது கஷ்டமா இருக்கு ரா” என்றவன் அவளை இன்னும் தன்பக்கம் இழுத்துக்கொண்டான்.

“ரொம்ப சீன் போடாதீங்க சிங்காரம்” என்றதும் அவன் முறைக்க

சிரித்த கல்கி “இதுக்கெல்லாம் ஃபீல் பண்ணாம இருக்க நேரம் சந்தோஷமா இருக்கலாம். மிலிட்டரில இருக்கவங்க வைஃப் விட நான் ஒன்னும் பாவமில்லை. நினைச்ச நேரம் போன் பேசலாம், இதோ நீங்க நினைச்சதும் வந்துட்டீங்க. இப்படி நினைச்சிட்டு இருக்கறது கூட நல்லாத்தான் இருக்கு. உண்மையை சொல்லணும்னா இன்னும் லவ் பண்ற ஃபீல்தான். அப்பவும் இப்படித்தானே தள்ளி இருந்தோம்” என்றதும்

“ஏன்ட்டீ? தள்ளி இருக்கோமா?” என்று அவளைப் பின்னால் இருந்தால் நன்றாய் அணைத்துக் கொண்டவன்

“இதுவா தள்ளி இருக்கறது?” என்று கேட்டான்.

“அடங்கேப்பா! ரொம்பத்தான்” என்றாள் கிண்டலாக.

வரப்ரசாத்தின் விரல்கள் அவள் வயிற்றை வருடிக் கொடுத்தவன்,
“ஐ மிஸ் யூ மோர் அம்மடூ, இருக்க நேரம் என் பக்கத்துலதான் இருக்கனும் நீ” என்று அவன் அணைத்துக்கொள்ள, அணைப்பு அடுத்த கட்டம் செல்ல, கல்கி அவனை தடுக்க பார்த்தாள்

“ப்ரசாத், லிமிட் க்ராஸ் பண்றீங்க” என்றாள் முணுமுணுப்பாக.

“உங்கிட்ட ஐ ஹேவ் நோ லிமிட்ஸ்” என்றவன்

“தூக்கம் வருதா?” என்று கேட்டான்.

“நீங்க பக்கத்துல இருக்கும்போது அதெல்லாம் வராது” என்று அவள் சொன்ன பாவனையில் இருவரின் உறக்கத்தையும் மையலும் மயக்கமும் களவாடிக் கொள்ள, காதல் களவாடிய பொழுதுகளில் அதுவும் சேர்ந்தது.

அடுத்த நாள் காலையில் ப்ரசாத் வழக்கம்போல் வாக்கிங் செல்ல எழுந்து கொள்ள, அவன் அணைப்பிலிருந்து விலகிவிட, கல்கிக்கும் விழிப்பு வந்துவிட்டது.

அவள் பாத்ரூம் போய் வந்து படிக்க உட்கார
“கல்கி! நேத்து தூங்கவே லேட்டாகிடுச்சு, இப்போ ஏன் படிக்கிற? ரெஸ்ட் எடு” என்று சொல்ல

“தூக்கம் வரலங்க” என்றவளிடம் இருந்து புத்தகத்தை வாங்கியவன்

“அம்மா உன்னைத் திட்டுறதுல தப்பே இல்லை” என்றதும் அவன் முறைத்தபடி வாக்கிங் சென்று வருகிறேன் என்று சொல்ல

“நானும் வரேன்” என்றாள் அவளும்.

“அப்பவே நான் வராதன்னா என் பேச்சைக் கேட்க மாட்ட, இப்போ மட்டும் கேட்க போறியா என்ன?” என்று அதட்டலாய் சொல்ல

“ரொம்ப பண்ணாதீங்க. நீங்க என்ன சொன்னாலும் கேட்கிறேன் தானே?” என்றபடி அவளும் அவனுடன் வெளியே வர

“லீவ் நாளும் இவ தூங்க மாட்டா” என்று திட்டிய யமுனா வாக்கிங் போறேன் என்றதும்

“ஆறு மணிக்கெல்லாம் அழைச்சிட்டு வந்திடு ப்ரசாத். இவளுக்குக் குடிக்க கொடுக்கனும்” என்றார்.

அவனும் அவளுடன் கிளம்பி அருகே இருக்கும் பார்க் செல்ல, அவன் தள்ளி நடக்க சொல்வானோ என்ற யோசனை ஓடினாலும் மெல்ல அவனுடன் பேச்சுக் கொடுத்தபடியே கல்கி நடக்க, சிரஞ்சீவி கண்டுகொள்ளவில்லையோ என்று நினைத்தாள்.

அவன் கையோடு தன் கையைக் கோர்த்துக் கொண்டவள்

“ஈவினிங் அத்தை கூட வாக்கிங் வரப்ப இப்படி உங்க கூட வரனும்னு தோணிச்சு, இன்னிக்கு வந்தாச்சு” என்றாள் சந்தோஷமாக.

“சீக்கிரமே இங்க வந்துடுறேன்” என்றவன் “இங்க இப்போ நான் டியுட்டில இல்ல, பெருசா இப்போ மோசமான கேஸும் ஹாண்டில் செய்யல, அதான் உன்னை இப்படி பக்கத்துல வச்சிட்டு நடக்கிறேன். எப்பவும் அப்படியே இருக்கும்னு நினைக்கக் கூடாது” என்று சிரஞ்சீவி சொல்ல

“அதானே பார்த்தேன் நீங்க ஸ்ட்ரீக்ட் சிங்காரம் ஆச்சே, எப்படி மறந்தீங்கன்னு”

“ரொம்ப பேசாம வா, ஈவினிங் பரத் ரிசப்ஷனுக்கு உனக்கு எதாவது வேணுமா சொல்லு? அவனுக்கு என்ன கிஃப்ட் கொடுக்கலாம்?” என்று பேசியபடி இருவரும் நடந்தனர்.

✅ End of Episode 44
How did you feel about this episode?
❤️ 8 more...

You must Log in or Register to react here

💬 3 Replies
Kavi Natarajan Reader 5 days ago

💞💞💞💞💞💞

❤️ 1 more...
Mrs Beena loganathan Reader 4 days ago

வராத வரப்பரசாத்

ஸ்டிரிட் சிங்காரம் 
சிடூமூன்ஜி சிங்காரம்....
அவூனு அவுன்னு.....
❤️ 1 more...
Srichitra Reader 4 days ago

Very nice.

Log in or Register to reply

🔗 Insert Link

Scroll to Top