Episode 17

கல்கி அப்படி தன்னைப் பார்த்து சொல்லிவிடவும் வரப்ரசாத்தினால் அவளின் வார்த்தைகளை ஏற்கமுடியவில்லை. தங்கள் வீட்டில் வந்து இருக்கிறாள், அதுவும் ஊரில் உறவுகளை விட்டு என்ற காரணத்தால் அவளை மிகவும் நன்றாகப் பார்த்துக் கொள்கிறோம் என்ற கர்வத்தில் இருந்தவனுக்கு அவளின் வார்த்தைகள் பிடிக்கவே இல்லை.

அப்படி என்ன நான் இவளிடம் போலிஸாக நடக்கிறேன் என்ற எண்ணமே. இதே வெளியாட்கள் என்றால் ஆம் நான் போலீஸ் அப்படித்தான் இருப்பேன் என்றிருப்பான் கர்வத்துடன்!

ஆனால் உறவாய் நினைக்கும் கல்கியிடம் இதனை கொஞ்சம் எதிர்ப்பார்க்கவில்லை அவன். உறவுதான்! கல்கியின் வீட்டாள்கள் எப்படியோ, கல்கியையும் தையல் நாயகியையும் அவன் மனம் இத்தனை நாளில் உறவாய் ஏற்றுக் கொண்டது உண்மைதான்.

“அப்படி என்ன நான் உங்கிட்ட போலீஸா பிஹேவ் பண்ணினேன், டெல் மீ?” என்றான் அவனது அக்மார்க் அதிகார குரலில்.

“இதோ! இதான் சொல்றேன். எப்படி பேசுறீங்க நீங்க? யுனிஃபார்ம் போட்டுட்டு இப்படி அதட்டி கேள்வி கேட்டா எனக்குன்னு இல்லை யாருக்கா இருந்தாலும் இப்படித்தான் ஃபீல் ஆகும்” என்றாள் கல்கி. கல்கியின் குரல் உயர்ந்திருக்க தையல் நாயகிக்கு பேத்தியின் சத்தம் டீவியை விட அதிகமாய் இருக்க கடுப்புடன் இவள் பக்கம் பார்த்தவர்

“என்னடி பேரன்ட்ட என்ன சத்தமா பேசுற?” என்று அதட்டினார்.

கல்கி பேசும் முன் வரப்ரசாத்தோ, “ஒன்னுமில்ல நீங்க சீரியல் பாருங்க” என்று அவரிடம் சத்தமாய் சொல்லியவன் சத்தம் கேட்டு கிச்சனில் இருந்து வெளியே எட்டிப் பார்த்த வசந்தி அக்காவிடம்

“அக்கா, மேடம் கத்தி டயர்டா ஆகியிருப்பாங்க. சாப்பிட எதாவது ரெடி பண்ணுங்க. டீ காஃபி என்ன வேணுமோ கொடுங்க” என்றவன் கல்கியிடம்

“சாப்பிட்டு முடிச்சு கம் டூ மை ரூம்” அதிகாரம் தெளிக்கும் குரலில் கட்டளையாய் சொல்லியவன் அவனின் அறைக்குள் புகுந்தான்.

“என்ன பாப்பா ஆச்சு? தம்பி இன்னிக்கும் கத்துது? இன்னிக்கும் சொல்லாம வெளியே போய்ட்டியா?” வசந்தி அக்கா பரபரப்பாய்க் கேட்க

“லேட்டாச்சுனு சத்தம் போட்டார்க்கா, சொல்லிட்டுத்தான் போனேன்” என்றாள் கல்கி சலிப்புடன்.

“அக்கா, எனக்கு பசிக்குது. காஃபி தரீங்களா?” என்று கேட்ட கல்கியிடம்

“பசிக்குதுன்னு சொல்லி காஃபி குடிப்பியா? பத்து நிமிஷம் இரு. உப்புமா செய்றேன்” என்றார் வசந்தி. கல்கி குளித்து உடைமாற்றி வர வசந்தி அக்கா உப்புமா தயார் செய்து வைத்திருக்க இவள் அதை தட்டில் போட

“சக்கரை வச்சுக்கிறியா கல்கி?” என்றதற்கு

“ம்ஹூம், எனக்குப் பிடிக்காது. சட்னி இல்லையாக்கா?” என்றாள்.

“சட்னி நைட்டுக்கு தேங்காய்த் துருவி வச்சிருக்கேன், இரு இரண்டு நிமிஷம்” என்றவர் வேகமாய்த் தேங்காய்ச் சட்னி செய்து அவளுக்குப் பரிமாறினார்.

“இன்னும் இரண்டு பச்ச மிளகா போட்டிருக்கலாம்க்கா, காரம் பத்தல” கல்கி சொல்லிவிட்டு உப்புமாவை வாயில் போட்டுக்கொள்ள, வசந்தி அக்கா

“தம்பியும் இப்படித்தான் காரம்தான் சாப்பிடும். நீ கும்பகோணம்தானே அங்கேயும் காரம் சாப்பிடுவீங்களா என்ன?”

“என்னக்கா ஆந்திரா காரங்கதான் காரம் சாப்பிடனும்னு இருக்கா என்ன? நாங்களும் நல்லா காரம் சாரமாத்தான் சாப்பிடுவோம்க்கா” என்றாள் கல்கி.

“என்னவோ போ, இரண்டு பேரும் காரமா சாப்பிட்டு சாப்பிட்டு காரமாவே கத்திட்டு இருக்கீங்க?” என்று வசந்தி சொல்ல

“நானா கத்துறேன்? உங்கத்தம்பிதானே என்னை வந்ததும் வராததுமா கேள்வி கேட்டார். இரண்டு மணி நேரத்துல எங்க ஊர்ல அடுத்த மாவட்டமே போயிடலாம். இங்க நாலு தெரு தாண்ட முடியல, பழைய புக்ஸே அவ்வளவு விலை சொல்றாங்க. பாதி புக்ஸ் கிடைக்கவே இல்லை. தெரியாத ஊர்ல அலைஞ்சு திரிஞ்சு வர லேட் ஆச்சு, அதுக்குள்ள அவர் விசாரணையை ஆரம்பிச்சிட்டார்” என்று புலம்பினாள் கல்கி.

“என்ன கல்கி நீ? தெரியாத ஊர்ல எங்காச்சும் மாட்டியோப்பியோன்னுதானே தம்பி அக்கறையா விசாரிக்குது. அது புரியாம தம்பிட்ட சத்தமா பேசுற நீ” என்று வசந்தி சொல்லிக்கொண்டிருக்கையிலேயே

“அவளை சும்மா விடாதடி பார்வதி, அவதான் உன் வாழ்க்கை இப்படி ஆனதுக்குக் காரணம்”

“அந்த பொசுக்கேட்ட பயலையும் சேர்த்து அடி” என்ற சத்தம் வர வசந்தியும் கல்கியும் கிச்சனில் இருந்து எட்டி பார்க்க ஹாலில் டீவியைப் பார்த்தபடி பேசிக்கொண்டிருந்தார் தையல் நாயகி.

“இவங்கதானா?” என்று வசந்தி சிரிக்க

“எங்கப்பத்தா அப்படிதான், டீவியில வரவங்களை எல்லாம் வச்சு செய்யும். நேர்ல இவங்களாம் மாட்டினாங்க சட்னி. அப்படி பேசும் அப்பத்தா” கல்கி சிரித்தபடி சொல்ல

“வயசானவங்கனா அப்படித்தான், என் மாமியாரும் இப்படிதான்” என்றார் வசந்தி.

“க்கா, இதுல நியூஸ் வாசிக்கிறவங்க வணக்கம் சொன்னா அப்பத்தாவும் சேர்ந்துட்டு சொல்லும் பாருங்க, செம காமெடியா இருக்கும்”

இவர்கள் பேசிக்கொண்டிருக்க, தையல் நாயகியின் சத்தம் கேட்டு வரப்ரசாத் தனது அறைக்கதவைத் திறந்து பார்க்க தையல் நாயகி டீவியிடம் பேசிக்கொண்டிருக்க, அதை சிரிப்புடன் பார்த்தவன் அங்கிருந்தே

“வசந்திக்கா, ஒரு டீ” என்றான்.

“வரேன் தம்பி” என்று வசந்தி குரல் கொடுத்துவிட்டு அவனுக்கு பாலைக் கொதிக்க வைத்தார். வேலை செய்துகொண்டே

“நீ வரலன்னு டென்ஷன்ல தம்பி டீ கூட குடிக்காம வாசலையே பார்த்துட்டு இருந்துச்சு, நீ அவரைப் பேசுற பாப்பா” என்றார்.

“உங்க தம்பி தங்க கம்பின்னு ஒத்துக்கிறேன், நீங்க முதல்ல டீயைக் கொண்டு போங்க க்கா” என்றாள் கல்கி. கல்கி உண்டு முடித்து அவன் அறைக்குப் போனாள்.

அவன் அறைக்குள் நுழைய, அங்கிருக்கும் நாற்காலியில் அவன் உட்கார்ந்திருக்க, இவளைப் பார்த்தவன்

“எங்க உன்னோட எவிடன்ஸ் எல்லாம் காட்டு” என்றான். குரலில் நக்கல் நிரம்பி வழிந்தது.

கல்கி உடனே வேகவேகமாய் அறைக்குள் வந்தவள் பையையும் வாங்கிய புத்தங்களையும் எடுத்துக் கொண்டு அவன் அறைக்குச் சென்று அங்கிருந்த மேஜையில் எல்லாம் வைத்தாள். அவள் செயலின் வேகமே அவளின் கோபத்தை சொல்ல கிண்டல் பார்வை வரப்ரசாத்திடம்.

“பாருங்க, வாங்கின புக்ஸ். பில் எல்லாம்” என்றதும்

“பார்க்கிறேன் நான். நீ ஃபர்ஸ்ட் உட்காரு, அப்புறம் என்னை கைதி மாதிரி விசாரிக்கிறேன்னு சொல்லுவ” என்றான் கிண்டலாக.

“உட்கார்ந்தாலும் அதேதான்” உர்ரென்று சொல்லிவிட்டு அங்கிருக்கும் இன்னொரு நாற்காலியில் கல்கி உட்கார்ந்தாள்.

“இரண்டு புக்ஸ் வாங்க நாலு மணி நேரம்? ஹ்ம்ம்?” என்று அவளைக் கேள்வியாய்ப் பார்க்க, அந்த பார்வை பாவையைப் பற்றி எரிய செய்தது. என்னமோ அவள் பொய் சொல்லுவது போல் அல்லவா அவன் பார்வை தன்னைப் பார்க்கிறது? என்று நினைத்தாள்.

“ஆமா, செகண்ட் ஹாண்ட் புக்ஸே அவ்வளவு ரேட் சொல்றாங்க, ஒரு செம்க்கு அவ்வளவு செலவு பண்ண முடியுமா? எல்லா கடையிலும் அதே ரேட் சொல்றாங்க. இதுல நான் பாரீஸ், மூர் மார்க்கெட்னு அலைஞ்சேன். நான் என்ன இங்கேயேவா பொறந்து வளர்ந்தேன். எல்லாம் தேடித்தானே கண்டுபிடிக்கனும். என் காலேஜ்ல இருந்து அங்க போறதுக்கே ஒன் ஹவர் மேல ஆச்சு தெரியுமா?” என்றாள் மூச்சு வாங்க.

“நோ எக்ஸ்ப்ளனேஷன்ஸ், ஐ ட்ரஸ்ட் யூ கல்கி” என்றான் மிக மிக பொறுமையாக. கல்கியின் குரலுக்கு அப்படியே எதிர்பதமாய் அவனின் குரல்.

அந்த குரலை விட அவன் வார்த்தைகள் கல்கியை அவனைப் பார்க்க வைக்க
“அப்புறம் ஏன் எங்கொயரி பண்றீங்க?” என்றாள் முறைத்தபடி.

“ஓஹ், இதுவும் எங்கொயரி லிஸ்டா?” என்றான் சிரிப்புடன்.

“அப்படித்தான் இருக்கு. அன்னிக்கும் அப்படித்தான் மாத்திரை போட்டாச்சா கேட்டீங்க, போட்டேன் சொன்னாலும் நம்பாம செக் பண்றீங்க. இன்னிக்கும் இதை எல்லாம் பார்த்த பின்னாடிதானே நம்புறீங்க” கல்கி கோபத்தில் பொங்க

“ரிலாக்ஸ்! மாத்திரை போடாம இருந்தா உனக்குப் ஃபீவர் குறையாது. சின்ன பிள்ளை ஏமாத்திடுவியோன்னு கேட்டேன். அது மட்டுமில்லாம அன்னிக்குக் கல்கியை எனக்குத் தெரியாது”

“இன்னிக்கு மட்டும் என்னைத் தெரியுமா?” என்று கேட்டாள் கல்கி.

“அப்கோர்ஸ்! ஏன் தெரியாது? கல்கி தேவையில்லாம பொய் பேசமாட்டா. அதுவும் அவளை நம்புறவங்களை ஏமாத்த மாட்டா. நியாயமான விஷயத்தை மத்தவங்க ஒத்துக்கலன்னா மட்டும்தான் மறைக்கறதோ பொய் சொல்றதோ செய்வா. அவளோட பக்க நியாயத்தைப் புரிஞ்சிக்கிறவங்க கிட்ட கல்கிக்கு ஒளிவு மறைவே கிடையாது” என்று அவளைப் பற்றி சொல்ல ஆச்சரியமாய்ப் பார்த்தாள் பெண்.

“ரைட் தானே?” என்று அவளைப் பார்த்து புருவம் உயர்த்தி வரப்ரசாத் கேட்க அவள் தலையாட்டவும்

“நேனு எஸ்பி ம்மா” என்றான் பெருமையாக.

“அதேதான் நானும் சொல்றேன் பாருங்க போலீஸ் மாதிரி எல்லாம் தெரிஞ்சு வச்சிருக்கீங்க” என்றாள் கல்கி.

” ஏன்ட்டீம்மா இதுக்கும் போலீஸா? சரி லெட் இட் பீ கல்கி” என்றவன்

“உன்னை ஏன் கூப்பிட்டேன் தெரியுமா?” என்று கேட்டவன்

“புக்ஸ் எல்லாம் இப்படி அலைஞ்சு வாங்க வேண்டாம், ஒரு செம்க்கு செலவும் இவ்வளவு செய்ய வேண்டாம். உன்னோட சீனியர்ஸ்ட்ட பேசு, அவங்க கிட்ட புக்ஸ் வாங்கு, இல்லையா லைப்ரரில உன் சிலபஸ்ல உள்ள டாபிக்ஸ் மட்டும் ஃபோட்டோ காப்பி எடு. ரொம்ப அவசியமான புக்ஸ் மட்டும் வாங்கிக்கோ செகண்ட் ஹாண்ட் புக்ஸ் அமெசான் மாதிரி ஆன்லைன் வெப்சைட்ஸ் ல கூட அவைலபிள். ஸோ தேவையில்லாத டென்ஷன் வேண்டாம். புரிஞ்சதா?” என்று அவளிடம் கேட்க, அவளோ யோசனையாய் அவனைப் பார்த்தான்.

“நீ வெளியே போக வேண்டாம்னு எல்லாம் நான் சொல்லல, இப்படி புக்ஸ் வாங்க அலைஞ்சு டைம் வேஸ்ட் பண்ணவேண்டாம். அந்த டைம்ல நீ வேற எதாவது விஷயத்துல உன் டைம் யூஸ்புல்லா ஸ்பெண்ட் செய்யலாம். ஃபர்ஸ்ட் செம்ல இப்படிதான் ஆர்வமா புக்ஸ் வாங்கத்தோணும். நாங்களும் அதெல்லாம் செஞ்சிருக்கோம். உன்னோட புக் லிஸ்ட் கொடு நான் எனக்குத் தெரிஞ்சவங்க கிட்ட கேட்டு பார்க்குறேன்” என்று சிரஞ்சீவி சொல்ல

“தேங்க்ஸ்” என்றாள் கல்கி.

“ஏமிரா இதி? சொன்னதும் கேட்டுட்ட கல்கி?” கிண்டலாய் அவளைப் பார்த்துக் கேட்க

“நீங்க கரெக்டா சொன்னீங்க, ஸோ ஒத்துக்கிட்டேன். எனக்கு எப்பவும் சண்டை போடனும்னு ஆசையா என்ன?” என்றாள் கல்கி ரோஷமாக.

“இல்லையா பின்ன?”

“எஸ்பி ஸார், நல்லா உங்க போலீஸ் மூளையை யூஸ் பண்ணுங்க, எல்லா டைமும் நீங்கதான் சண்டை போட்டு இருக்கீங்க. நான் இல்லை” என்றதும் அவனும் யோசிக்க அதுதான் உண்மையும் கூட, கல்கி எதாவது பேசினாலும் இவன் பேச துவங்கவும்தான் அது பெரும் சண்டையாகிப் போயிருக்கிறது.

“அது என்னோட அம்மாவைப் பேசினா எனக்குக் கோபம் வராதா?” என்றவனின் பேச்சில் மெல்ல கோபம் எட்டிப்பார்த்தது,

“இப்பவும் நீங்கதான் கோபமா பேசுறீங்க?” கல்கி அவனை குற்றம் சாட்டவும்

“லிஸன் கல்கி, எது நடந்திருந்தாலும் அதெல்லாம் முடிஞ்சு போனது. அதுக்காக நீ அம்மாவைப் பேசினா எனக்குக் கோபம் வராதா சொல்லு?” என்று அவளிடம் நேருக்கு நேராய்க் கேட்க அவள் கோபமாய் அவனைப் பார்த்தாள்.

“இப்போ நான் போலீஸ் டிரஸ் எல்லாம் போடல, உன்னோட அத்தை பையனா பேசுறேன். ஹானஸ்டா பதில் சொல்லு! உங்கப்பா நினைச்சிருந்தா உன்னையும் உன்னோட அக்காவையும் படிக்க வச்சிருக்கலாமா இல்லையா?” என்று கேட்க

“ம்ம், வச்சிருக்கலாம். ஆனா அத்தையால..” என்று ஆரம்பித்தவளைக் கை காட்டி நிறுத்தினான்.

“கல்கி! உன்னோட அப்பா மேல கூட தப்பு இருக்கு. உன்னால அக்செப்ட் செய்ய முடியல, அது மாதிரிதான் எனக்கும். அம்மா உன்னோட அப்பா கிட்ட சொல்லி இருக்கலாம், அவங்க சிட்டிவேஷன் சொல்லாம போய்ட்டாங்க. ஜென்ட்ஸ்க்கு சரிசமமா உட்கார கூடாதுன்னு சொல்ற ஃபேமிலில லவ் பண்றேன் சொன்னா ஒத்துக்குவாங்களா கல்கி?”

“ஒத்துக்கமாட்டாங்கன்னா ஏன் லவ் செய்யணும்?” பட்டென கேள்வி கேட்டாள் கல்கி.

“லவ் எல்லாம் தானா வரது. கோவம், பசி மாதிரி தட்ஸ் எ ஃபீல். யூ காண்ட் கன்ட்ரோல். நாளைக்கு உனக்கும் கூட வரலாம்” என்றான் அவன்.

“எனக்கெல்லாம் லவ் ஒன்னும் வராது” என்றாள் கல்கி அவசரமாக.

“வந்தாலும் தப்பில்லை”

“அதான் வராது சொல்றேன்ல” என்றாள் கடுப்பாக.

“நீ ஏன் டென்ஷன் ஆகுற, உன்னை லவ் பண்ணினா அந்த பையன்தான் டென்ஷன் ஆகனும்” என்று சொன்னது பின்னாளில் அப்படியே பலிக்கும் என அறியாது போனான் அவன்.

“ரொம்ப பேசுறீங்க நீங்க”

“உன்னை விடவா?” என்றவன்

“ஓகே லீவ் தட், என்னோட அம்மாவைப் பேசினா எனக்கு சுத்தமா பிடிக்காது கல்கி. உனக்கும் உன்னோட அப்பா அம்மாவைப் பேசினா கோபம் வரும்தானே? எங்க அம்மா செஞ்சது உங்க பாயிண்ட் ஆஃப் வியுல தப்புன்னா அதுக்கு உங்களை தண்டிச்சது யாரோட தப்பு? கண்டிப்பா என்னோட அம்மாவோடது இல்லை. நம்ம பசங்கன்னு உன்னோட அப்பா உனக்கு சப்போர்ட்டீவா இருந்திருக்கணும். அதை விட்டு அடுத்தவங்களை ப்ளேம் பண்றது ரொம்ப தப்பு” என்றதும் அதுவும் கூட ஒருவகையில் சரிதான் என்பதால் கல்கி அமைதி காத்தாள்.

“உங்க மேல அவங்க தேவையில்லாம திணிச்ச அத்தனைக் கட்டுப்பாட்டுக்கும் என்னோட அம்மாவைக் காரணம் சொல்றது எந்த வகையில நியாயம் சொல்லு? சமமா உட்காரக் கூட ரூல்ஸ் போடுறாங்க, அதையெல்லாம் உன்னோட அப்பா கேட்காம இருக்கார்னா அவருக்குள்ள ஒரு டாமினேட்டீங் மெண்டாலிட்டி இருக்குன்னுதான் அர்த்தம். இதுக்கும் என்னோட அம்மாவை குறை சொல்லுவியா நீ?”

“ஊர்ல எங்கம்மா லவ் மேரேஜ் பண்ணினபோது நிறைய பேசினாங்க சொன்ன இல்லையா? இப்போ நீ படிக்க வந்திருக்க கேர்ள்ஸ் எல்லாம் டீச்சிங்கோ இல்லை வேற டிகிரி தான் படிக்கனும்னு இன்னமும் சிலர் சொல்றாங்க, கேட்டா சேஃப்டின்னு. அதையெல்லாம் நீ காதுல வாங்குறியா இல்லைதானே?” என்றதும் தயலின் தலை தானாய் அசைந்தது.

“எஸ், அது மாதிரி எங்கம்மா அவங்க லைஃப் சூஸ் பண்ணினாங்க, உனக்குப் பிடிச்ச படிப்பை நீ சூஸ் பண்ணிட்ட. உனக்கு படிப்பு மேல காதல், என்னோட அம்மாவுக்கு எங்கப்பா மேல காதல். அது எப்படி தப்பு சொல்லுவ கல்கி?” என்று அவளைக் கேட்க மங்கை இதழில் மென்னகை.

“என்ன சிரிக்கிற? சொல்லு?” அவன் கேட்க

“நீங்க எஸ்பியாகுறதுக்குப் பதில் லாயர் ஆகியிருக்கலாம். நல்லா கன்வீன்ஸ் பண்றீங்க” என்றாள் கிண்டலாக.

“கல்கி கன்வீன்ஸ் ஆகியாச்சா என்ன?” என்று அவனும் புன்னகையுடன் கேட்க

“கன்வீன்ஸ் ஆகிட்டேன்னா தெரியல, ஆனா அத்தையை பேச மாட்டேன்” என்றாள்.

“இது என்ன பதில்?”

“உங்களுக்கு சிலதெல்லாம் புரியல, புரியவைக்கவும் முடியாது. சின்ன வயசுல இருந்தே இருக்க கோவம், ஒரு நிமிஷத்துல போகாது. பட் ஒரு விஷயம் ஒத்துப்பேன், தாத்தாவும் அப்பத்தாவும் எவ்வளவு ஸ்டீரிக்டா இருந்திருந்தாலும் அப்பா எங்களுக்கு சப்போர்ட்டா இருந்திருந்தா நல்லா இருந்திருக்கும். அதனால உங்க சைட் ஒத்துக்கிறேன்”

“தேங்க்ஸ்” என்றான் புன்னகையுடன்.

“இப்படியே பேசுங்க. இதான் நல்லாயிருக்கு” கல்கி சொல்ல

“எப்பவும் இப்படித்தானே பேசுறேன்”

“இல்லை, ஸ்டீரிக்டா பேசுவீங்க. எனக்கு ஜூனியர் சற்குணப்பாண்டியன் கிட்ட மாட்டிக்கிட்டோமோன்னு இருக்கும்” என்றதும்

“தாத்தா ரொம்ப ஸ்டீரிக்டோ?”

“ஸ்டீரிக்டோ ஸ்ட்ரீக்ட், சத்தமா பேசக்கூடாது, சிரிக்க கூடாது. ஒரு சாங்க் ஓடினா டான்ஸ் கூட ஆடக் கூடாது..” என்று அவள் நீளமாய் சொல்லிக் கொண்டே போக

“ஏன்ட்டிம்மா அவ்வளவு கஷ்டமா?” சிரஞ்சீவி அவள் பேச்சிலும் அதன் பாவனையிலும் சிரித்தபடி கேட்க

“ம்ம், ஒரு நாள் சற்குணப்பாண்டியன் பேத்தியா இருந்தா தெரியும், இல்லைன்னா சற்குணப்பாண்டியன் பேத்தி கூட இருந்தா தெரியும் கஷ்டமா இல்லையான்னு” முறைப்பாய் சொன்னாள் கல்கி.

✅ End of Episode 17
How did you feel about this episode?
❤️ 5 more...

You must Log in or Register to react here

💬 6 Replies
Srichitra Reader 1 month ago

Very nice.

❤️ 1 more...
Mrs Beena loganathan Reader 1 month ago

பதமா சொன்னா எப்படி 

 இதமா இருக்கு😂😂😂😂
போலீசாக பேசினா 
பதட்டமும் கோபமும் 
பாவைக்கு வரத்தானே செய்யும்
பிரசாத் சார் 
❤️ 1 more...
Kavi Natarajan Reader 1 month ago

Very nice ud ma

Daily 2 ud kudutha nalla irukkum
❤️ 1 more...
Pavithra Narayanan 1 month ago

Nallarkum sis, ana long run Nan yosikanum la,  new story start pana apram rendu episode old stories ku tharen. 

Radhi Reader 4 weeks ago

Nice 

❤️ 1 more...
Sathya Velusamy Reader 3 weeks ago

அடேய் நீ எப்படி convince பண்ணாலும் உங்கம்மா பண்ணது தப்பு தான்.....

😂 1 more...
Log in or Register to reply

🔗 Insert Link

Scroll to Top