Pavithra Narayanan - Literary Image 129
Pavithra Narayanan - Literary Image 129
Episode 13

“யாரோ அவங்க அருமை தெரியணும்னு சொன்னாங்க, ஒரு வாரம் ஹாஸ்டல் போனதும் என் அருமை தெரியுது போல..” அரிச்சந்திரன் மனைவியின் அணைப்பில் இருந்தபடி தோசைக் கல்லில் முட்டையை உடைத்து ஊற்றினான்.

“பெப்பர் தூக்கலா” ஆதினி பின்னிருந்து தலையை நீட்டி சொல்ல,

“கேட்டதுக்குப் பதில் சொல்லு” என்றபடி சிட்டிகை மிளகுத் தூளை முட்டை மீது தூவினான். சமையல் வேலையாக இல்லாமல் கலையாக செய்த கணவனை ரசித்து பார்த்தாள் ஆதினி. அவன் ஸ்லீவெல்ஸ் பனியன் அணிந்திருக்க, எக்கி நின்று அவன் கழுத்தில் தன் தாடையை வைத்து கணவனின் சமையலைப் பார்க்க, ஆதினி பேசும் போது அவளிதழ்கள் மென்மையாய்த் தோளில் உரசிப் போனது.

“ஹேய் அரைடிக்கெட்! தள்ளி நில்லு” அரிச்சந்திரன் உணர்வுகளை அடக்கி சொன்னான். ஏற்கெனவே கொடுத்த முத்தம் மொத்தமும் கேட்டது அவனிடம்.

“ஏன், நீங்க கில்ஃபான்ஸ் பண்ணும் போது நான் எதாவது சொன்னேனா?” இந்த பேச்சு சிரிப்பைக் கொடுத்தது.

ஆதினி அழுத்தி ஒரு முத்தம் கொடுத்தால் கூட தெரியாது, அவளோ அப்படி செய்யாது பேசியே உரச, பாவையைப் பற்றிக்கொள்ள துடித்தது அரிச்சந்திரன் மனம்.

“முட்டையை எடுக்கணும், தள்ளும்மா” என்றதும் ஆதினி விலகி நின்று,

“என்னைக் கேட்டது இருக்கட்டும், வந்ததும் அரிச்சந்திர மகாபிரபுக்கு என் அருமை தெரிஞ்சது போல” ஆதினி அவன் அணைத்து, கொஞ்சியது சொல்ல,

“எனக்கெல்லாம் தெரியும்டி, உனக்குத்தான் தெரியல” என்றவன் உடையாது ஆஃப் பாயிலை எடுத்து தட்டில் வைத்தான். ஆதினி தட்டை எடுத்துக் கொண்டு நடுவீட்டுக்கு வந்தாள்.

“எப்படி இவ்வளவு நல்லா சமைக்கிறீங்க அரி?” கேட்டபடி இட்லி, சட்னியை இருவருக்கும் பரிமாறினாள்.

“எங்கம்மா கூட சுத்திட்டே இருப்பேன். இந்த தாளிக்கிற சத்தம், பருப்பு சாம்பாரா மாறுறது எல்லாம் எனக்கு மேஜிக் மாதிரி இருக்கும். அப்படியே அதுல ஒரு ஆர்வம்” என்றவன் உணவில் கவனம் வைத்தான்.

“எப்படி நான் வந்ததை கண்டுபிடிச்சீங்க, தாத்தா கிட்ட சொல்ல கூடாது சொன்னேனே”

“உள்ள வந்த அப்புறம் பார்த்தேன், வாசல்ல உன் செப்பல் இருந்தது” என்றான்.

“ஓஹோ..” என்று ராகமிழுக்க,

“நாளைக்குக் க்ளாஸ் கட் அடிச்சியே, திரும்பவும் உன் எச்.ஓ.டி என்னைக் கூப்பிட்டு திட்டவா? என்ன பொய் சொன்ன?” கண்டிப்பாக அவன் குரல் வர,

“வந்ததும் எல்லா கில்ஃபான்ஸூம் பண்ணிட்டு இப்ப என்ன உண்மையான அரிச்சந்திரனாட்டாம் என்னை ஏன் பொய் சொன்னேன் கேட்கிறீங்க?” என்று கேட்ட ஆதினி ஆஃப் பாயிலை ஒரே வாயிலை முழுங்கினாள்.

“பார்த்துடி” என்று அதட்டினான் அரி.

ஆதினியோ, “இதெல்லாம் ப்ரஃபஷனல் செய்றது, எனக்கு நிறைய எக்ஸ்பீரியன்ஸ் இருக்கு” என்று பழிப்புக் காட்டி உண்டாள்.

அரிச்சந்திரன் பதில் பேசாது அவளையே பார்க்க, “அரி, அட்டெண்டென்ஸ் எல்லாம் ஷெரின் போட்டுடுவா, பிரச்சனையில்லை.” என்றதும் அரிச்சந்திரன் எழுந்து பாத்திரத்தை ஒதுங்க வைத்து, கதவைப் பூட்டி விட்டு வந்தான். ஆதினி இரவு உடைக்கு மாறி, பல் துலக்கி விட்டு வந்து மெத்தையில் சாய, அரிச்சந்திரன் மெல்ல அவளை பின்னிருந்து கட்டிக்கொண்டான்.

அரிச்சந்திரனுக்கும் இன்னும் மனைவி தன்னைக் காண வந்த இன்பமயம் போகவில்லை, முத்தமிட்ட இந்திரஜாலம் மீண்டும் வேண்டும் என்று வேண்டியது மனம். உடலில் பரவசம், பரபரப்பு!

அவன் சந்தோஷத்தை சொல்ல வார்த்தையின்றி இருக்க, முழுமையான நெருக்கத்தைத் தேடியது தேகம். எப்போதுமே அவர்களின் நெருக்கம், இயல்பானதாகவே இருக்கும். இருவருக்கும் பிடித்ததாகவே இருக்கும், மற்றவரின் சிறு தொடுகை கூட கதகதப்பை, அன்பை உணர்த்த அதில் வாஞ்சையே இருக்கும்.

இப்போது அதைத் தாண்டி அங்கம் தேட நினைத்தான் அரிச்சந்திரன். ஆவல் தீர்க்க, தேட ஒரு ஆவல் பிறந்தது. எண்ணம் செயலாக மாற எண்ணும் முன்னே, அனிச்சையாக அவன் கரம் அவளை அழுத்தியது. அரிச்சந்திரனின் அழுத்தமான அணைப்பிலே ஆதினிக்கு உள்ளே சிலிர்ப்பு ஓட, கண்கள் மூடினாள்.

அணைத்திருந்த அரியின் கரங்கள் முன்னால் சேர்ந்து வயிற்றோடு கோர்த்திருக்க, ஆதினிக்கு மூச்சடைத்தது. இடைவெளியை இஷ்டம் போல் குறைக்க நினைத்தான். ஆதினிக்கு அப்போதுதான் அவன் விரல்களின் வேற்றுமை புரிய,

“என்ன பண்றீங்க அரி?” என்றாள்.

“தூங்கலயா?” அரி பேசாமல் இருக்க, ஆதினி மீண்டும் கேட்டாள்.

ஆதினி அணிந்திருந்த டீஷர்ட்டின் கையைக் கொஞ்சம் தோளில் இருந்து விலக்கியவன், அவள் கழுத்தில் முகம் பதித்து இதழ் உரசினான்.

“தடுத்தால் கூட தருவேன்னு சொன்னியே, தரியா ஆதினி?” அரியின் பேச்சு உரச, ஆதினிக்குப் புது உணர்வில் உடல் புல்லரித்தது. ஆதினி ஒரு நொடி மயங்கி இருக்க, அந்த மௌனத்தில்,

அரி, “என்னை உனக்குத் தரவா?” என்றதும் ஆதினியிடம் மையலாய் ஒரு பார்வை. அந்த குரல் கொள்ளையிட்டது. அவன் அணைப்பை விட்டு திரும்பியவள், “தாங்களேன்” என்றதுதான் போதும்.

தடை உடைய, உடைத் தளர அரிச்சந்திரனுக்கும் ஆதினிக்கும் அகப்போர்! காற்று புகா அணைப்பினை காமத்தின் இலக்கணம் என்பார் வள்ளுவர், அப்படியான அணைப்பு.

அரிச்சந்திரன் வேக அணைப்பில், “என்னை மிஸ் பண்ணீங்களா அரி?” ஆதினி தெரிந்து கொள்ள கேட்க, அரியோ பதில் பேசும் நிலையைக் கடந்து விட்டான். அப்போது அவனிடம் மொழி பஞ்சமாகியது.

தேகத்தின் தாகம் தணிக்க நினைத்தான், இஷ்டம்போல் முத்தங்களை காணுமிடம் எல்லாம் கொடுக்க, ஆதினியின் தேகத்தில் தீ வண்ணம். அவன் ஆசை உணர்வினை அவளிடம் கடத்தினான். அரியின் புருவ முடிகள் கூட தீண்டி அவளை இம்சித்தன, இச்சைக்காதல் மின்சாரமாய் இருவருக்குள்ளும் பாய, முத்தங்களின் ரீங்காரம் மட்டுமே.

“அரி..” என்று ஆதினி தவித்து போனாள் அவன் தீண்டலில். அவளின் கை நகங்கள் காதல் தடங்கள் பதிக்க, அங்கத்தின் அத்தனை திக்கிலும் அவன் தீண்டல், மூச்சுக்காற்றால் பேச்சின்றி அவளை முழுவதுமாக நிறைத்தான்.

காதலின் கம்ப ரசம் கண்டனர்! இரவுகளை இணைந்தே திருடினர்.

அடுத்த நாள் காலை விடிய, அரி எழவில்லை. தூங்கினால் தானே? உறங்கும் மனைவியைப் பார்த்தவன், அவள் முகத்தில் என்னவோ குறைவதைக் கண்டான். யோசித்தவன் ஒரு டீஷர்ட்டை மாட்டிக் கொண்டு, டிரெஸிங் டேபிள் அருகே போனான். கண்ணாடியில் அவள் ஒட்டி வைத்திருக்கும் ஸ்டிக்கர் போட்டு இருக்க, அதனை எடுத்தவன், ஆதினி அருகே மண்டியிட்டு, அந்த வட்டமான அரக்கு நிற பொட்டை அவள் நெற்றியில் ஒட்டினான்.

கூடவே அவள் நெற்றியில் அழுத்தமாய் முத்தமிட்டான். அத்தோடு நிறுத்தாமல் மீண்டும் கன்னத்தில் முத்தமிட, வழக்கம்போல் அவன் எதிரிகளான அந்த கார்குழல் சிறகுகள் அவனை முகத்தில் தீண்டி, முத்தத்தை அனுபவிக்க விடாது சீண்ட, அதனை ஒதுக்கித் தள்ளினான். அதில் ஆதினி விழித்துவிட, கண் விழிக்கும் போதே அரியின் முகம்.

இத்தனை நாள் அவன் சினேகிதியாய் மட்டுமே உணர்விருக்கும், இன்று பிரியத்தின் புதிய பாதைகள் கண்டிருக்க, நெருக்கம் கூடிய உணர்வு. அரியின் புருவத்தை அவள் விரல்கள் வருடிக் கொடுத்தன. மிகவும் அடர்த்தியான புருவங்கள், இரு புருவத்திற்குமான இடைவெளியும் மிகக் குறைவு, புன்னகைத்தாலோ, யோசித்தாலோ இரண்டும் ஒன்றாய் சேரும். அரியின் அனைத்து அவதாரமும் அவளுக்குப் பிடிக்க, அவனை கழுத்தோடு கட்டிகொள்ள, அவள் மீது விழுந்தான் அரிச்சந்திரன்.

“என்னடி காலையில கில்ஃபான்ஸா?” அரிச்சந்திரன் கழுத்தில் முத்தம் பதிக்க, ஆதினியின் உடல் சிலிர்த்து.
இரவெல்லாம் உறங்காமல் இருக்க, அவள் கண்கள் சிவந்திருந்தன. அரிக்கு வாஞ்சை பெருக,

“காஃபி எடுத்துட்டு வரேன், குடிச்சிட்டு தூங்கு” என்றான்.

“வேண்டாம்” என்று ஆதினி சொல்ல,

“ஏன்மா?” என்று கேட்க,

“டீ வேணும், சூடா ஏலக்காய்ப் போட்டு” என்றவள், அரியின் டீஷர்ட்டைப் பற்றி,

“தேங்க்ஸ்” என்று அவனை பார்த்து சொன்னாள்.

“எதுக்கு?”

“ஃப்ர்ஸ்ட் எக்ஸ்பீரியன்ஸ் வாஸ் பெஸ்ட்” ஆதினி அவனை பார்த்துக் கண்ணடிக்க, அவளை அப்படி உணர வைப்பது பெரிதல்ல, ஒரு பெண்ணை அப்படி உரைக்க வைப்பது பெரிதல்லவா? அந்த சுதந்திரத்தை என் மனைவி என்னிடம் உணர்கிறாள் என்பதே அரிச்சந்திரனுக்குப் பெருமையாக இருந்தது.

“உனக்கும் தேங்க்ஸ்” என்று அவன் கன்னம் தட்டி எழ, ஆதினி குளிக்க போனாள்.

✅ End of Episode 13
How did you feel about this episode?
❤️ 2 more...

You must Log in or Register to react here

💬 2 Replies
Srichitra Reader 2 months ago

Nice 

Mrs Beena loganathan Reader 2 months ago

ஆதினிக்கும் 

அரிச்சந்திரனுக்கும்
அகப்போர்.....
அருமை 
Log in or Register to reply

🔗 Insert Link

Scroll to Top