Pavithra Narayanan - Literary Image 129
Pavithra Narayanan - Literary Image 129
Episode 14

அரி தாத்தாவுக்கு டீ கொடுத்து அவனும் குடிக்க, பேரனின் முகத்தில் இருந்த பிரகாசம் பார்த்த ராமசாமி,
“என்னடா? என் பேத்தி வந்ததும் மூஞ்செல்லாம் பல்லா இருக்கு?” என்று கிண்டல் செய்ய,

“ஏன் அதுக்கு முன்னாடி என் பல்லை நீ பார்த்ததில்லையா?” அரி புருவம் உயர்த்திக் கேட்டான்.

“என் பேத்தியால சிரிக்கிறன்னு ஒத்துக்கிட்டா என்னடா படவா உனக்கு? இதே என் பேரன் ராஜதுரைன்னா உடனே ஆமானு சொல்லியிருப்பான் தெரியுமா?” ராமசாமி விடாது அவனை வம்பிழுத்தார்.

அரி அவரை முறைத்தவன், பதில் பேசவில்லை. டீயை எடுத்துக் கொண்டு அறைக்குள் சென்று பார்க்க, ஆதினி குளிக்கும் சத்தம் கேட்டது. ப்ளாஸ்கில் ஊற்றிவிட்டு, அவன் வழக்கு சம்மந்தமான பேப்பர்ஸ் எடுத்தபடி வாசற்படியில் சென்று உட்கார்ந்து அதனை பார்த்தான். தை மாத காற்று, தென்றலாய் தீண்டி செல்ல, காலை நேர குளுமை, இரவின் இனிமை எல்லாம் அரியின் முகத்தில் புன்னகையை விளைவித்தது.

சமையலுக்கு ஆள் வந்திருக்க, அவன் வேலையைப் பார்த்தான்.

ஆதினி தலைக்குக் குளித்து, புடவை கட்டியிருந்தாள். ஒற்றையாய் முந்தானையை விட்டிருக்க, ஆதினி நடக்கையில் அது காற்றில் ஆட, அரிச்சந்திரன் வாசலில் இருக்க, அவன் அருகே வந்தாள். அரி வேறு டீஷர்ட் அணிந்திருப்பதைப் பார்த்து,

“குளிக்காம ஏன் வேற டீஷர்ட்?” என்று கேட்க,

“அது நைட்டு ஒரு பொண்ணு என்னை கடிச்சிட்டா. வெளியே தெரிஞ்சா எல்லாரும் அவளை கேள்வி கேட்பாங்க” என்று ஆதினியை ஆசைப் பார்வை பார்க்க,

“ஏன் யாரும் செய்யாததா இது? உலகத்துல அதிகம் தெரிஞ்சது, ஆனால் இது ‘ரகசியம்’ தெரியுமா? இப்பவும் கடிப்பேன்” உதடு மடக்கி ஆதினி கண்ணோரம் சிரிக்க சொல்ல,

“ரகசியமா? கரெக்ட்! வேணும்னா கடிச்சிக்கோ, தடுக்க மாட்டேன்” என்று அவன் அவளை நன்றாக பார்த்தான். தாமரைப் பூ செவ்வரளி வைத்திருந்தது! இதுதான் அரிச்சந்திரன் மனதின் எண்ணம்.

செந்தாமரை வண்ணp புடவை, அதன் இலை வண்ணத்தில் ப்ளவுஸ், செவ்வரளி பூ அவளின் இருப்பக்கமும் தொங்கியது. கழுத்தைத் தொடும் கூந்தல், நாலைந்து முடி கற்றையாய் சிறு நதி போல் வளைந்து அவள் முகத்தின் இருப்பக்கமும் விழும். அது மட்டும் அரிக்குப் பிடிக்காது.

“கட் பண்றவ ஃபுல்லா கட் பண்ணுடி, இது என்ன சும்மா சும்மா முன்னாடி வந்து, டிஃபன்ஸ் லாயர் குறுக்க வர மாதிரி என்னை கடுப்பேத்துது” என்று அவளின் முடியைப் பற்றி சொல்ல,

“அது ஸ்டைல்” என்றவள் இரண்டு பக்கமும் கையை வைத்து அந்த முடியை காதருகே தள்ளினாள். ஆனாலும் அது முன்னால் விழ, அரி முறைத்தான்.

“காலையில என்ன புடவையை எல்லாம் கட்டியிருக்க?” என்று கண்களவை நேரிடையாகவே செய்தான் கணவன்.

“கோவிலுக்குப் போகலாமா அரி. எனக்கு திருவையாறு போகணும் போல இருக்கு, அழைச்சிட்டு போறீங்களா?” ஆதினி கேட்க, காலையில் அவனுக்கு எந்த வழக்கும் இல்லை. இன்று கோர்ட் செல்ல வேண்டியதுமில்லை.

“கோவிலுக்கா, சரி குளிச்சிட்டு வரேன்” என்று அவனும் எழுந்து போனான். அவன் குளித்துட்டு வர, ஆதினி தயாராகி நின்றாள். அவள் விருப்பபடி திருவையாறு சென்றுவிட்டு, அவளை அப்பா வீட்டில் விட்டு வந்தான். மதியம் மேல் இவன் வழக்கு விஷயமாக திருவாரூர் சென்றுவிட்டான். மாலை போல் ரவிக்குமார் மகளை வீட்டில் விட்டுப்போனார்.

இரவு இருவரும் உண்டு முடிக்க, ஆதினி அவள் லேப்டாப்பில் வேலைப் பார்த்தாள். அரி பாத்ரூம் சென்று வர,

“உங்க லேப்டாப் வச்சிட்டேன் அரி, ஷெரின் எங்கிட்ட கொடுத்திட்டா” என்றவள் அதனை அணைத்து வைத்தாள்.

அரி படுத்தவன், அவளின் விரல் பற்றி சொடக்கிழுத்தான்.

“இந்த கல்யாணம் ஆகிட்டு காலேஜ் போற எக்ஸ்பிரியன்ஸ் எப்படி இருக்கு?” என்று விசாரிக்க,

“பிஜி படிக்கிறப்ப எல்லாம் இது சகஜம்தானே?” என்று கொட்டாவி விட்டாள். காலையில் ஒரு உற்சாகத்தில் உறக்கம் வரவில்லை, அவள் வீட்டிலும் அப்பாவோடு, தாத்தாவோடு இருக்க வேண்டும் என்று தூங்கவில்லை. இப்போதோ மீண்டும் மீண்டும் கொட்டாவி விட, வாயருகே சொடக்கிட்டாள்.

அவள் கொட்டாவி விட, “ஹே! கையை வச்சு வாயை மூடு, எனக்கும் தூக்கம் வந்திரும் அப்புறம்” என்று சொல்லும் போதே அவனுக்கும் கொட்டாவி வர, ஆதினி அவன் வாயை தன் கை வைத்து மூடினாள்.

“நீங்க என்ன நினைச்சீங்க, என் கூட படிக்கிறவங்க எல்லாம் பாப்பா, என்னை வந்து கேள்வியா கேட்பாங்கன்னா” என்றதும் அரி தலையசைக்க,

“உலகம் தெரியாம இருக்கீங்களே, என் க்ளாஸ்ல எனக்கு முன்னாடியே நாலஞ்சு பேருக்கு ஃப்ர்ஸ்ட் நைட் ஓவர் தெரியுமா? நம்ம தான் லேட்” என்றாள் ரகசியம் போல.

“நாலஞ்சு பேரும் அன் மேரீட், யுனிவர்சிட்டிலயே கில்மா.” என்றதும் அரியின் புருவங்கள் சுருங்கின.

“படிக்கிற இடத்துலயேவா?” அரி முகம் சுழித்தான்.

“நாங்க படிச்சப்போ பசங்க லவ் பண்ணினாலும் கேம்பஸுக்குனு ஒரு மரியாதை கொடுத்தாங்க.” என்றான் கடுப்பாக.

“காலம் மாறி போச்சு” ஆதினி கிண்டலாக சொல்ல,

ஆதினியின் விரல்களைப் பிடித்திருந்தவன் அவளை அணைத்தான், உறங்க நினைத்தவனால் முடியவில்லை. அரியின் அழுத்தமான அணைப்பில் ஆசை அலைமோதியது.

“அரி தூங்கணும்” ஆதினி சொல்ல,

“இப்படியே தூங்கு” என்றவனின் பேச்சு காதருகே கூச, உடல் சிலிர்த்தது. அரிச்சந்திரன் அங்கேயே முத்தமிட்டு,

“நாளைக்கு தூங்கலாம், அடுத்த நாள் காலேஜ் போகணும். இன்னிக்கு மட்டும் தூக்கத்தை விடேன், எத்தனை நாள் என்னை டென்ஷன் பண்ணி தூங்க விடாம பண்ணீயிருக்க” அரி வழக்காட,

“ஆர்கியுமெண்ட் வேறயா? நீங்க கூட என்னை பார்க்காம பேசாம தூங்க விடல, அதுக்கு உங்களை கடிச்சு வைக்கிறேன் இருங்க” என்று ஆதினி அவன் கன்னத்தில் கடிக்க, உள்ளாடும் உணர்வில் தள்ளாடி போன அரிச்சந்திரன் ஆதினியின் இரவினை இனிமையாக திருடினான். ஆதினியும் பதிலுக்குத் திருடிட, இரவுக்கு இவர்களால் உறக்கமில்லை.

அன்றோடு இல்லாது அடுத்த நாள் இரவும் இப்படியே கழியே, மூன்று நாள் மிக மிக வேகமாய் பறந்து போனது இருவருக்கும். அரிச்சந்திரன் ஆதினியை மீண்டும் விடுதி போகாதே என்று சொல்லவில்லை, ஏன் முன்பு போக சொன்னான் என்றும் சொல்லவில்லை. ஆதினிக்கு அதெல்லாம் நினைப்பில் இல்லை.

போன முறை என்னை போக சொல்கிறான் என்ற வருத்தமிருந்தது, ஆதினி முக்கியமில்லையா என்றெல்லாம் தோன்றியது. இப்போது இரவின் தேடல் தாண்டி, பகலெல்லாம் அவளின் அருகாமையில் இருந்த அவளின் கணவன், தான் இல்லாது என்ன செய்வான் என்று கவலையானது.

நான் என்ற நிலை மாறி, நான் இல்லை என்றால் இவன் என்னை மிகவும் தேடுவான் என்று தெளிவு இருந்தது. இருக்கிறேன் என்றால் அதற்கும் வழக்குப் பேசுவான்.

ராமசாமி வேறு, “நீ இருந்தா சீக்கிரம் வீடு வரான், எதாவது சமைக்கிறான். இல்லை வயசானவன் எனக்கு சமைக்கிறதையே சாப்பிடுறான். நீ இருந்தா வீடு நல்லாயிருக்கு ஆயீ, இங்கேயே இரேன்” என்று கேட்டார்.

ஆதினிக்கு அரிச்சந்திரனை மிகவும் பிடித்தது, இருக்க ஆசை இருந்தாலும் ஒரு பிடிவாதம், அவன் சொல் மீற வேண்டாம் என்று விடுதி செல்ல தயாரானாள். அரி இந்த முறை தெளிவாக இருந்தான், ஆதினி இங்கே இருந்தால் கவனம் சிதறிப் போகும், விடுமுறைக்கு வருவதே நல்லது என்ற எண்ணம்.

ஆதினிக்கு எல்லாம் சரியாகி விட்டது என்று எண்ணம். அது அவர்களின் இணக்கத்தினால் உண்டான பரவசம், பரவசம் எல்லாம் காதலின் துவக்கத்தில் இருக்கத்தான் செய்யும், பரவசம் மீறி சலிக்க வைக்க வேண்டும் காதல். சலித்தாலும் பிடிக்க வேண்டும் காதல்! பிடித்து வைக்க வேண்டும்!!

பிடித்தங்களுக்கும் புரிதலுக்கும் மிகப்பெரிய இடைவெளி உண்டே! அதனை நிரப்பினால் மட்டுமே நேசம் பெருகும். வானமென்றால் வளர்ப்பிறையும் தேய்ப்பிறையும் உண்டல்லவா?!

ராசாவே உன்னால ஆகாசம் விடியம்
லேசாக என் நெஞ்சம் பூக்கின்றதே!

✅ End of Episode 14
How did you feel about this episode?
❤️ 2 more...

You must Log in or Register to react here

💬 2 Replies
Srichitra Reader 2 months ago

Very nice.

Mrs Beena loganathan Reader 1 month ago

அழகிய தருணங்கள்

அனாவசிய எண்ணங்களை
அழித்து விடும் 
அன்பின் புரிதலில் 
அனைத்தும் சரியாக அறிந்து கொள்ளும்....
❤️ 1 more...
Log in or Register to reply

🔗 Insert Link

Scroll to Top