Episode 19
பொதுவாக பேசியபடி சந்தியாவும் தாரகையும் நடந்தனர். தாரகை அந்த கோவிலின் பெருமைகளைப் பற்றி பேசிக்கொண்டிந்தாள்.
“இந்த கோவிலை குருவாயூரோட சேர்த்து தக்ஷின துவாரகை சொல்லுவாங்க. இந்த மன்னர்கள் எல்லாம் கோவில் கட்டினதால் மன்னார்கோவில்னு பெயர் வந்து அது மன்னார்குடி ஆச்சுனு சொல்லுவாங்க. நிறைய வேதம் படிச்சவங்க இங்க வாழ்ந்ததால் ராஜாதி ராஜ சதுர்வேதி மங்கலம் அப்படினு ஒரு பழைய பெயர் உண்டு. இந்த கோவிலை குலோத்துங்க சோழன் கட்டினார் சந்தியாக்கா” என்றாள் தாரகை.
“துரை, நீ போய் அர்ச்சனைத் தட்டு வாங்கிட்டு வா. இந்த ஜகன் போன் பேசிட்டு வெளியே நிக்குறார், அவருக்கு நான் கால் பண்றேன்” என்று சொல்லவும் தாரகை
“நானும் வாங்கிட்டு வரேன்” என்று சொல்லிவிட்டு முன்னால் நடந்தாள். துரையும் அவளோடு போனான்.
சாமி தரிசனம் முடியவும், கோவிலுக்கு வெளிப்புறம் இருக்கும் சன்னிதியில் சாமியைத் தரிசிக்க, அந்த மணல் பாதையில் நடந்து கற்படிகளில் ஏறினார்கள். ஏறியதுதான் தெரியும்!
சட்டென்று பெருமழை! ராஜதுரைக்கு ‘என்னடா இது சோதனை?’ என்று வருத்தமாக இருக்க, தாரகையின் பார்வை துரை மீதுதான். அதை சந்தியாவும் கவனித்தாள்.
“என்னாச்சு தாரகை, மழைதானே?” என்று சந்தியா கேட்க
“இல்லை, பாவம் இவர். உளுந்து போட்டிருக்கார்” என்று தாரகை வருத்தமாக சொல்ல
“அது என்ன அவனுக்கும் சேர்த்து நீ ஃபீல் பண்ற?” என்று சந்தியா கேட்க, ராஜதுரை தோழியை முறைத்தான்.
“ஏன் ஃபீல் பண்ணக்கூடாது? அவர் ஏற்கெனவே ஒரு தடவை உளுந்து போட்ட நேரத்துலயே பெரிய மழை எங்க ஊர்ல, மறுபடியும் விதைச்சிருக்கார். உங்களுக்கும் ப்ரண்ட் தானே? அப்போ கஷ்டமா இருக்காதா?” என்று சட்டென்று சந்தியாவைக் கேட்க, துரைக்கும் ஜகனுக்கும் சிரிப்பு.
“உன் ப்ரண்ட் கஷ்டப்பட்டா உனக்கு சந்தோஷமா சந்தியா?” என்று கேட்டு அவள் கணவன் ஜகன் வேறு வம்பு செய்தான்.
“டேய்! விவசாயி! உனக்குக் கஷ்டம்தான் டா, எனக்கும் கஷ்டம்டா” என்று சந்தியா சிரிக்க
“நம்ம ஊர்ல மழை இருக்கான்னு கேட்கிறேன்” என்று பொதுவில் சொன்னவன் அறிவின் அப்பாவுக்கு அழைத்து அங்கே மழையா என்று விசாரித்தான்.
“ஆமா சந்தியாக்கா, எப்படி நீங்க இவரோட ப்ரண்ட் ஆனீங்க? ரொம்ப ரொம்ப கன்சர்வெடிவ்ல இவரு?” என்று தாரகை அவள் சந்தேகத்தை சந்தியாவிடம் கேட்க
“காலேஜ்ல ப்ரண்ட்ஸ் நாங்க எல்லாம். அதுவும் ஆர் அப்புறம் எஸ்ல, ஸோ லேப்ல எல்லாம் நானும் இவனும் ஒன்னா இருப்போம். அப்படியே ப்ரண்ட்ஸ் ஆகிட்டோம், அதுவும் இவன் இருக்கானே, எங்கப்பா எல்லாம் பாய்ஸ் ப்ரண்ட்ஷிப் அலோவ் பண்ணாத ஆளு, ஒரு நாள் இவனோட ப்ராஜக்ட் செய்யணும்னு வெளியே போக பெர்மிஷன் கேட்டப்ப எங்கப்பாகிட்ட இவனே வந்து பேசினான். அப்போதான் நீ சொன்ன மாதிரி இவனும் ஒரு பூமர்னு புரிஞ்சது” என்று கிண்டலாக சிரித்த சந்தியா
“எங்கப்பாவுக்கும் இவனுக்கும் நல்லா ஒத்துப்போச்சு. இவனோட வெளியே போனா அவ்வளவுதான், கத்திப் பேசாத, ஷால் போட்டு வான்னு ஆயிரம் சொல்லி வெறுப்பேத்துவான். இவன் மொக்க போடுவான்னுதான் இன்னிக்கு நான் புடவை கட்டிட்டு வந்தேன். ஜகன் கூட இப்படி ரூல்ஸ் போடமாட்டார்” என்றாள் சலிப்பாக.
“அப்போ உங்க ப்ரண்டை பூமர்னு சொன்னது தப்பில்லைதானே?” என்று தாரகை அவளைக் கேட்க
“என் ப்ர்ண்டை நான் பேசுவேன், மத்தவங்க பேசினா எனக்குப் பிடிக்காது!” என்று சொன்னாள் சந்தியா.
“அவன் சொல்றது சிலது எனக்கு அப்போ இரிட்டேட் ஆச்சுனாலும், இப்ப அப்படி இருக்கிறதால ஒன்னும் குறைஞ்சுப் போகலனு தோணும், எந்த பிரச்சனையும் இல்லாம ஸ்முத்தா இருக்கலாம்” என்றதும்
“இதான் கா பிரச்சனை, நமக்குப் பிடிச்ச மாதிரி இருக்கவும் இவங்களோட அங்கீகாரம் வேணும் நமக்கு. இந்த பழமைவாதிங்க எல்லாம் இப்படித்தான் சின்னதா ஒரு தப்பு நடந்துட்டாலும் இதனாலதான் சொல்லி நம்மை நம்ப வச்சிடுவாங்க, நம்மளோட சுயத்தை எண்ணத்தை வெளிப்படுத்தி வெளியே வந்தா இவங்களுக்குப் பிடிக்காது. இதே ஒரு லேடி பெரிய கம்பெனில பெரிய பொசிஷன்ல இருக்காங்க, புடவை கட்டினா பாரேன் எவ்வளவு பொறுப்பான இடத்துல இருந்தாலும் பாரம்பரியத்தை மதிக்கிறாங்கனு பாராட்டுவாங்க. ஆனா அவங்களே ஃபார்மல்ஸ் இருந்தா அதே வார்த்தை வராது!”
“உங்க ப்ரண்ட் மட்டும் இன்னிக்கு என்ன வேஷ்டி கட்டிட்டா கோவிலுக்கு வந்துருக்கார், பேண்ட் சட்டை என்ன கலாச்சாரமா? அவர் வயல்ல வேலை செய்யும்போது நீங்க பார்த்தது இல்லையே பனியனோட இருப்பார், அது அவருக்குக் கம்பர்ட், ஆனா அதே நமக்கு வசதியா போட்டா தப்பு.” என்று சந்தியாவிடம் தாரகைப் பேச பேச அதைப் பார்த்த
ஜகன் துரையிடம் “என்னடா இவங்க இரண்டு பேரும் இவ்வளவு பேசுறாங்க. இப்பதானே மீட் பண்ணீனாங்க, அப்படி என்ன இருக்கு பேச?” என்று புரியாது அவன் தோளை சுரண்ட
துரையோ, “அண்ணா! அது நான் இருக்கேனே, என்னை இரண்டு பேருக்கும் தெரியும்ல, என்னை கழுவி ஊத்துவாங்க” என்றான் சிரிப்புடன்.
“அப்புறம் எப்படி தாரா நீ அவங்கிட்ட இப்போ சாதாரணமா பேசுற?” ஆச்சரியமாக கேட்டாள் சந்தியா.
“அது தெரியல! இந்த வானிலை மாதிரிதான் எங்க ப்ரண்ட்ஷிப்பும் எப்போ வெயில், எப்போ மழைனு தெரியாது” என்று கிண்டலாகவே பதில் சொன்னாள் தாரகை. இருவரும் பேசியபடி இருக்க, கொஞ்ச நேரம் என்றாலும் பரஸ்பரம் ஒரு பிடித்தமான நட்பு உருவானது.
மழை வேறு விடாமல் இருக்க, ஜகன் மனைவி உட்கார்ந்த இடத்திற்கு வந்தவன்
“டைமாச்சு தியா, எப்போ போய் புடவை எடுக்கிறது? கிளம்புவோமா?” என்று கேட்கவும்
“பஸ் ஸ்டாண்ட் தானே போகணும், நான் கார்லதான் வந்தேன், நான் ட்ராப் பண்றேன் கா” என்று சந்தியாவிடம் சொல்ல
“உனக்கு ஏன் சிரமம்?” என்று துரை கேட்க
“நான் சந்தியாக்காவைத்தான் கேட்டேன், உங்களை இல்லை” என்றாள் முறைப்புடன்.
பேருந்து நிறுத்தம் வரவும் “நெக்ஸ்ட் டைம் எங்க வீட்டுக்கு வரணும்கா” என்று தாரகை விடைப்பெற்றுக் கொண்டாள்.
அவர்கள் மூவரும் அங்கிருந்து கும்பகோணம் சென்றனர். அங்கே சென்று பேருந்தில் இறங்கிய நேரம், புது எண்ணிலிருந்து அழைப்பு வந்தது.
“ஹலோ!” என்று துரை பேச
“துரை, நான் தாரகை” என்றாள் தாரகை.
“சொல்லு தாரக! உனக்கு எப்படி என் நம்பர் கிடைச்சது?” என்று ஆச்சரியமாகக் கேட்க
“கமலாத்த கிட்ட வாங்கினேன், அது சந்தியாக்கா திருபுவனத்துல புடவை எடுக்கனும் சொன்னாங்க, அங்க தெரிஞ்ச கடையில் டிஸ்கவுண்ட் உண்டு எங்களுக்கு. அவங்களுக்கு நம்பர் தரேன் சொன்னேன், மறந்துட்டேன்”
“அப்படியா சரி எனக்கு வாட்ஸப்ல அனுப்பிவிடு, நான் சந்தியாகிட்ட சொல்றேன்” என்றான் துரை.
“சரி, அப்படியே சந்தியாக்காவுக்கு என் நம்பர் அனுப்பிடுங்க” என்று உத்தரவிட்டு போனை வைத்தாள்.
துரை இந்த விஷயத்தை சந்தியாவிடம் சொல்ல அவளோ “டேய் என்னடா இரண்டு பேரும் அவ்வளவு க்ளோஸா, நீ சொந்தக்கார பொண்ணுன்னு சொன்ன, அவ ப்ரண்டுன்னு சொல்றா?” என்று விசாரிக்க
“ஹே லூசு! அவ இன்னிக்குத்தான் நம்பர் வாங்கி எங்கிட்ட பேசுறா, அதுவும் உன் நம்பர் கிடைக்கலன்னு என்னைக் கூப்பிட்டா” என்று துரை தோழியை முறைத்தபடியே பதில் சொன்னான்.
“ஏதோ உருட்டுற, உருட்டு எவ்வளவு தூரம் போகுதுனு நானும் பார்க்கிறேன்.”
“என்ன உருட்டுறேன் நான், உண்மையைத்தான் சொல்றேன்” என்றான் துரை எரிச்சலாக. அவன் உண்மையை சொல்லியும் தோழி புரிந்து கொள்ளவில்லையே என்ற கடுப்பில் இருந்தான்.
“ஜகன்! நீங்களே சொல்லுங்களேன், துரை சார் அந்த பொண்ணோட தியேட்டரை டேமேஜ் பண்ணி மாமியார் வீடு வரைக்கும் போக வேண்டியது, அப்புறம் சமாதானம் ஆகியாச்சு. நம்ம கல்யாணத்துக்கு வரும்போது இவன் அவகிட்ட சொல்லியிருக்கான். அதனால அவ இன்னிக்கு எனக்கு விஷ் பண்ணினா. என்கிட்ட அவளைத் திட்டியிருக்கான் ஓகே, ஆனா என்னைப் பத்தி சொல்ற அளவு இவனுக்கு அப்ப அந்த பொண்ணு க்ளோஸா?” என்று சந்தியா ஜகனின் கையைப் பிடித்துக் கேட்க
“எங்க போறேன்னு கேட்டா, என்னோட ப்ரண்ட் சந்தியா கல்யாணத்துக்குப் போறேன்னு சொன்னேன். அதுக்கு க்ளோஸா இருக்கனுமா என்ன ஜகன் அண்ணா?” என்று அவனும் ஜகனிடம் தோளைப் பிடித்துக் கேட்க, ஜகனோ இருவரின் கையையும் தள்ளிவிட்டு
“ஹேய் அந்த பொண்ணு டிஸ்கவுண்ட்காக போன் நம்பர் கொடுத்திருக்கு. அதுவரைக்கும் எனக்கு சந்தோஷம். இந்த பஞ்சாயத்தை அப்புறம் வைங்க, இந்த ஊர்ல மழை வரதுக்குள்ள நம்ம பர்சேஸ் முடிச்சு ஊருக்குப் போகணும். பட் சந்தியா சொல்றதும் பாயிண்ட்!” என்றான் ஜகன்.
“அண்ணா! இவதான் இப்படி உளறிட்டு இருக்கான்னா நீங்களுமா? எப்பவும் ஒருத்தர்கிட்ட சண்டைப் போட்டுட்டே இருக்க முடியுமா? அந்த பொண்ணு அன்னிக்கு பஸ்ல வந்தப்ப நல்லா பேசிச்சு, நானும் பேசினேன். அவ்வளவுதான், அது மட்டுமில்லாம எங்க சித்திக்கு சொந்தம், அதனால் அவங்க வீட்டுக்குப் போறப்ப பார்க்கிறதால பேசுறா”
“மழை பெஞ்சா அவ ஏன் உனக்காக ஃபீல் பண்றா?” என்று விடாமல் கேட்டாள் சந்தியா.
“அவளே அதுக்குப் பதில் சொல்லிட்டாளே” என்று துரை கேட்க
“அப்போ உங்கிட்ட கேள்வி கேட்டா, அவ பதில் சொன்னா போதுமா?” என்று பேச துரை பொறுத்துப் பார்த்தவன் பதில் சொல்லவில்லை. துரைக்குக் கோபம் வந்துவிட்டது என்று புரிந்த சந்தியா
“டேய் ஓவரா பண்ணாத! சும்மா ஓட்டினேன் டா.” என்று சமாதானம் செய்ய
“சரி விடு, சீக்கிரம் புடவை எடுத்துட்டு போவோம்” என்றான் துரை.
அன்றிலிருந்து சந்தியாவுக்கும் தாரகைக்கும் இடையில் கூட நட்பு மலர்ந்தது.
****************
அந்த வாரக் கடைசியில் தாரகை திரையரங்கில் இருந்தாள். ஏழு மணி காட்சி நடந்து கொண்டிருக்க, இவள் அறையில் இருந்தாள். போனைப் பார்த்துக் கொண்டிருக்க, அதில் துரை வாட்ஸப்பில் ஸ்டேட்டஸ் வைத்திருக்க, அதனைப் பார்த்தவள் முகத்தில் புன்னகை.
‘யார் அந்த நிலவு
ஏன் இந்தக் கனவு
யாரோ சொல்ல யாரோ என்று
யாரோ வந்த உறவு
காலம் செய்த கோலம்
இங்கு நான் வந்த வரவு’
என்று டி.எம்.எஸ்ஸின் குரலில் பாடல் ஒலிக்க,
“என்ன ஒரே சோகம்? மழை கூட இல்லையே?” என்று அவனுக்கு குறுஞ்செய்தி அனுப்பினாள் தாரகை.
தாரகையிடமிருந்து பதில் வரும் என்று அவன் எதிர்ப்பார்க்கவே இல்லை. அவள் சாதாரணமாகப் பேச, இவனும் பதில் கொடுத்தான்.
“சோகமெல்லாம் இல்லை, அந்த பாட்டு நல்லாயிருக்கும். டி.எம்.எஸ் வாய்ஸ் பிடிக்கும் வச்சேன்” என்று அவன் பதில் அனுப்பினான்.
“எஸ், நல்லாயிருக்கு”
“அப்புறம் எனக்கு மழைன்னா பிடிக்காது இல்லை. என்னால மழையை முழுசா நேசிக்கவும் முடியாது வெறுக்கவும் முடியாது”
“ambivalent!” என்று தாரகை ஸ்மைலியுடன் பதில் அனுப்ப,
“அப்படின்னா?” என்று கேள்வி கேட்டான் துரை.
“கலவையான ஃபீலிங்க்ஸ்”
“அப்படித்தான்!”
“என்ன பண்றீங்க?”
“வீட்லதான், என் ரூம்ல இருக்கேன்” என்றவன் பேச்சுக்காக,
“தியேட்டர்ல இருக்கியா?” என்றான்.
அப்படியே ஒரு பத்து நிமிடம் குறுஞ்செய்தி வாயிலாகப் பொதுவாகப் பேசிக்கொண்டிருந்தனர் தாரகையும் ராஜதுரையும். பின் அவரவர் வேலையைப் பார்த்தனர்.
ராஜதுரை அவனுக்குப் பிடித்த பாடல் எதையாவது ஸ்டேட்டஸாக வைத்தால், தாரகைக்கும் அது பிடித்தால் அவளாகவே வந்து குறுஞ்செய்தி அனுப்புவாள்.
இன்னிசை தூதில் இருவருக்குமான இடைவெளி குறைந்து ஒரு இணக்கமும் நட்பும் உருவானது. பதினைந்து நாட்கள் கடந்த பின் இருவரும் தினமும் பேசுவது பழக்கமாகிப் போனது. அது வலிந்து ஏற்படுத்திய வழக்கமாக இல்லாது வாழ்க்கையில் அதுவும் ஒரு சாதாரண நிகழ்வு என்பது போல் மாறிப்போனது.
அன்றும் அப்படி ஒரு நாள்!
‘சொன்னது நீதானா? சொல் சொல் என்னுயிரே’ என்று பாடல் வைத்திருந்தான். எப்போதும் குறுஞ்செய்தியில் பேசுபவள் அன்று அழைத்துவிட்டாள்.
“என்ன தாரக? இந்த நேரத்துல கூப்பிட்டிருக்க?” என்று கேட்க
“ஹலோ மணி என்ன ஒன்பதரை தானே? இப்பதான் ஸ்டேட்டஸ் வச்சீங்க, தூங்கலைதானே அதான் கால் பண்ணினேன்” என்றாள்.
“எங்க வீட்ல எல்லாம் எட்டரைக்கே தூங்கிடுவாங்க, வேலை இருந்தா ஒன்பது மணி! நான் கூட டயர்டா இருந்தா இந்நேரம் தூங்கியிருப்பேன்”
“ஹாப்பி பர்த்டே!” என்றாள் பட்டென்று.
“ஹே! உனக்கு..?” என்று அவன் இழுக்க
“ஹாப்பி பர்த்டே சொல்லத்தான் கால் பண்ணினேன், இனிமே துரை சாருக்குக் காலே பண்ணமாட்டேன். இப்பதான் உங்க ப்ரண்ட்ஸ் எல்லாரும் ஸ்டேட்டஸ் பார்த்தேன், அதுக்குள்ள எனக்கு லெக்சர்” என்றாள் முணுமுணுப்பாக.
“தேங்க் யூ!” என்று அவன் நன்றி சொல்ல
“வெல்கம்! அப்புறம் இன்னிக்கு என்ன சொன்னது நீதானான்னு சோகப்பாட்டு? பர்த்டே அதுவுமா?” என்று தாரகை கேட்க
“ஹே! அது ஒரு ப்ரோக்ராம் கேட்டேன். எம்.எஸ்.வி பாட்டு வரிக்காக கண்ணதாசன் வர வரை வெயிட் பண்ணினாரம், அவர் வர லேட் ஆனதும் கண்ணதாசனை திட்டியிருக்கார், அவர் வந்ததும் அங்க இருக்கவங்க இதை அவர்கிட்ட சொல்ல சிட்டிவேஷன் சம்மந்தமா யோசிச்ச கண்ணதாசன், எம்.எஸ்.வியே பார்த்து சிரிச்சிக்கிட்டே ‘சொன்னது நீதானா? சொல் சொல்னு’ பாடினாராம்.” என்றான் சிரிப்புடன்.
“அக்சுவலா வாலி பாட்டு எழுத காரணமே கண்ணதாசன்தானு அவரே சொல்லியிருக்கார். வாலிக்கு படவாய்ப்பு கிடைக்காம ஸ்ரீரங்கம் போகலாம்னு நினைச்சப்ப மயக்கமா கலக்கமா பாட்டு கேட்டு மனசு மாறினாராம். வாலி சொல்லுவார் உம் பாட்டைக் கேட்டு உனக்குப் போட்டியா வந்தவன்னு”
“உங்களுக்கு நிறைய தெரிஞ்சிருக்கே!” பாராட்டாக பாவை சொல்ல
“அது ரேடியோ நிறைய கேட்பேன். அதுல சொல்லுவாங்க”
“யூடூப்ல பிடிச்ச பாட்டு கேட்கலாமே, அது ஏன் ரேடியோ?” என்று கேட்டாள் தாரகை.
“இப்படி யோசிச்சு பிடிச்ச பாட்டு ஒன்னுமே கேட்காம இருந்திருக்கேன். ஆனா ரேடியோவுல எப்ப என்ன பாட்டு வரும்னே தெரியாது. நமக்குப் பிடிச்ச பாட்டோ, இல்லை நம்ம இருக்க சிட்டிவேஷனுக்கு சம்மந்தமாவோ வந்தா அதுவொரு மாதிரி சந்தோஷமா இருக்கும்ல” என்று துரை கேட்க
“சரிதான்” என்று தாரகை ஒத்துக்கொள்ள
“ஏதோ என் பர்த்டே அன்னிக்காச்சும் நான் சொல்றதை ஏத்துக்கிட்டயே, தேங்க்ஸ்” என்றான் துரை.
“அப்படி இல்லை, நீங்க என்னிக்க் சொன்னாலும் என் மனசுக்குப் பிடிச்சா ஏத்துக்கிட்டா, நான் ஒத்துப்பேன்! பர்த்டேன்னு எல்லாம் கிடையாது!” என்றதும்
“அதானே பார்த்தேன்!” என்று நக்கல் சிரிப்பு அவனிடம். மறைக்காது மொழியும் அவள் குணம் மேல் ஒரு அபிமானம் அவனுக்கு உண்டு. அன்றையை பேச்சு சிறிது நேரத்தில் முடிந்தாலும் அடுத்து வந்த நாட்களில் இவன் எதாவது பாடல் வைத்தால், தாரகை குறுஞ்செய்தி அனுப்பாது அழைத்தே பேசினாள். எதிர்ப்பாராமல் தொடங்கிய அழைப்புகள் எதிர்ப்பார்ப்பை உருவாக்கின!
இன்னிசைத் தூதில் இனிமை உணரத்தொடங்கிய பொழுதுகள் அவை!
நீளுமா என்று நினைத்த அந்த பொழுதுகளில் மீளாமல் மூழ்கிப்போனான் தலைவன் தாரகையிடம்!
ஆறாத ஆசைகள் தோன்றும் என்னைத் தூண்டும்
ஆனாலும் வாய் பேச அஞ்சும் இந்த நெஞ்சம்
✅ End of Episode 19
Nice.
Again log in or register panna solli varuthu ma
Logout panitangala ma or tab close panitengala? Will check with developer
Nice