Episode 33
சில்வர் க்ரே சட்டையில் கணவனைப் பார்க்க கண்ணுக்குக் குளிர்ச்சியாக இருந்தாலும், தாரகை முகத்தைத் திருப்பிக் கொண்டாள். அவளின் கோபம் மட்டுப்படவே இல்லை. துரைக்கே ஆச்சரியமாக இருக்கும், அவன் எதிர்ப்பாரா நேரம் சட்டென்று கோபத்தை விட்டுவிடும் தாரகை, சில விஷயங்களில் மட்டும் தன்னை மாற்றிக்கொள்ளாமல் இருப்பாள்.
தாரகை முகம் திருப்பி இருக்க, அவள் கன்னத்தைப் பற்றி “உன்னை என்ன செய்யணும் எனக்கு தெரியும்?” என்றவன் சட்டென்று அவள் இடையைக் கிள்ளி விட துள்ளினாள். தடுமாறியவள் அவன் காலரை பிடித்து இழுத்துவிட்டாள்.
“கோவம் போச்சா?” புன்னகையுடன் ராஜதுரை கேட்க, அவன் அருகாமை இனிக்க உடல் சிலிர்க்க தாரகை அவனை பார்த்தாலும் சட்டென்று அவனை தள்ளிவிட்டு,
“இந்த கட்டிப்பிடிச்சு கன்வீன்ஸ் பண்றதெல்லாம் எங்கிட்ட நடக்காது” என்று எழுந்தாள்.
தாரகையின் குரலில், “இந்த கோவத்தோட இருடி, தலை தீபாவளி சூப்பரா கொண்டாடலாம்” என்று துரையும் எரிந்து விழுந்தான். இருவரும் தடதடவென படிகளில் இறங்கி சென்றனர்.
அரியிடம் நேரே சென்ற துரை, “வாங்க அரி” என்று வரவேற்று அவனருகே உட்கார்ந்து கொண்டான். அரிக்கு மறுபுறம் இருந்த அறிவு,
“ஹலோ மாப்ள சார்! என்னை எல்லாம் கவனிக்க மாட்டீங்களா?” என்று கேட்கவும்
“ஏண்டா நம்ம வீட்டுக்கு வரது உன்னை கூப்பிடணுமா?” என்று கேட்டு முறைத்தான்.
“நான் ஒன்னும் உன் பங்காளியா வரல, என் மாமா பொண்ணுக்கு வரிசை கொண்டு வந்திருக்கேன். போ போ இதான் பொண்ணு வீட்டுக்காரங்களை கவனிக்கிறதா? ஏற்கெனவே உன் பெரியப்பா எங்களை மதிக்கவே இல்லை” என்று அறிவு கடுப்பாக சொல்ல
“சாரி அரி! அவருக்கும் தாரகைக்கும் போன வாரம் சண்டை. அந்த கோவத்துல இருக்கார்” என்று துரை அரிச்சந்திரனிடம் மன்னிப்புக் கேட்டான்.
துரையின் மடியில் தட்டி , “அட! அவர் என் மேல எப்பவும் எக்ஸ்ட்ரா காண்டுல இருப்பாருனு தெரியும். நீங்க ஃப்ரீயா விடுங்க” என்று அரிச்சந்திரன் சொல்லவும்தான் துரைக்கு முகம் தெளிவானது. அப்போதும் தாரகையின் கோபம் மனதை வாட்டியது. இப்போது பேசினால் இன்னும் கொதிப்பாள் என்பதால் பொறுமை காத்தான்.
சமையல்கட்டில் சுமித்ரா தாரகையிடம்,
“என்ன தாரா அம்மா, சின்னம்மாவெல்லாம் சினிமாவுக்கு அழைச்சிட்டு போனியாமே?” என்று கேட்டாள்.
“அதை ஏன் கேட்கிற? ஒரு நாள் சினிமாவுக்குப் போனதுக்கு உங்கப்பாரு தெனைக்கும் எனக்குப் படம் காட்டுறாரு” என்று அங்கலாய்த்தார் சரோஜா.
“எனக்கும் சின்ன வயசுல குடும்பத்தோட போகணும்னு ஆசை தாரா, ஆனா அப்பாவை கேட்க பயம். காலேஜ் போனப்போ வீட்டுக்குத் தெரியாம கட் அடிச்சிட்டு போயிருக்கேன்” என்றதும்
“அடியாத்தீ!” என்று சரோஜாவும் அருணாவும் வாய்ப்பிளக்க,
“பின்ன அப்பாவை கேட்டா காலேஜே போகாதனு சொல்லிடுவார். வேற என்ன செய்றதும்மா? நல்ல வேளை என் வீட்டுக்காரர் சினிமான்னா ரொம்ப விரும்பி பார்ப்பார். அவரால வருஷத்துக்கு இரண்டு மூணு தடவ தியேட்டர் போவோம்.” என்றாள் சுமித்ரா.
“ஏண்டி என்னமோ நாங்க மட்டும் வாரவாரம் போனதாட்டம் பேசுற? நாங்களும் வீட்லதானே இருந்தோம்?” சரோஜா மகளை பேச
“ஏன்மா உன் ஜெனரெஷன் என்ன? எங்களோடது என்ன?” என்று அவரை முறைத்தவள்
“துரை சென்னைக்குக் காலேஜ் படிக்க போனதுல இருந்து போவான். இங்க இருக்கும்போதே அவனும் அறிவும் அடிக்கடி சுத்துவானுங்க, எங்களுக்கு மட்டும்தான் ரூல்ஸ்” என்றாள்.
“அதை நான் கேட்டதுக்குதான் சண்டை அத்தாச்சி” என்று தாரகை சொல்ல, சரோஜா உடனே
“இவ உங்க அப்பா பேசுறதுக்கெல்லாம் கூட கூட பேசுறாடி, அப்புறம் அந்த மனுஷன் இன்னும்தானே கத்துவார்.” என்றார்.
“இல்லைன்னா மட்டும்” என்று தாரகை முணுமுணுத்தாள்.
“விடு சுமி! இப்ப சந்தோஷமா இருக்கதானே நீ? சீக்கிரம் சமையலை முடிப்போம்” என்ற அருணாவிடம்
“சின்னவதான் என்ன பண்றானு தெரியல” சரோஜா அம்மாவாக புலம்பினார்.
“அதெல்லாம் அவ அண்ணா தீபாவளி வரிசை கொடுத்துட்டார்” என்று தாரகை சொல்ல, மூவரும் அதிர்ச்சியாக பார்த்தனர்.
துரை இந்த வருடம் தீபாவளிக்கு மைதிலிக்கு வரிசை கொடுக்க சொல்லி அரிச்சந்திரனிடம் பணம் கொடுத்துவிட்டான். ராஜதுரைக்கு மனத்தில் ஒரு உறுத்தல், தாரகை வேறு அடிக்கடி அவனிடம்
“உன் பெரியப்பா உன் லவ் மட்டும் ஒத்துக்கிட்டார், அப்போ பொண்ணுங்களுக்கு உங்க வீட்ல நியாயமே கிடைக்காது” என்று பேசுவாள். துரையால் முழு மனதாக, பரந்த எண்ணத்துடன் மைதிலியை ஏற்க முடியாவிட்டாலும் அவன் கடமையை செய்ய நினைத்தான்.
“இதை நீ எங்கிட்ட சொல்லவே இல்ல தாரா? அவ மட்டும் இப்படி ஒட்டில்லாம உறவில்லாம இருக்கானு நான் எவ்வளவு வருத்தப்பட்டிருக்கேன்” என்று சரோஜா கண்ணீருடன் சொல்ல,
“அவர் சொல்ல வேண்டாம் சொல்லிட்டார் அத்த, அதான் சொல்லல. இப்போ நீங்க ஃபீல் பண்றதால சொல்றேன்” என்றாள் தாரகை.
சுமி “பார்த்தியம்மா இந்த பய’ல, அவளுக்கு சீக்ரெட்டா வரிசை கொடுத்திருக்கான்.” என்றிட
“எங்க காலத்துக்கு அப்பறம் யாரு இதெல்லாம் செய்வானு நான் கவலைப்பட்டிருக்கேன், ராஜதுரை பார்த்துப்பான்” கண்ணீரைத் துடைத்தபடி சரோஜா சொல்ல
“ராஜா எப்பவும் இவங்களை விட்டுக்கொடுத்ததில்லைக்கா, நீங்கதான் அப்படி நினைக்கிறீங்க” என்று குத்தினார் அருணா.
சரோஜா பேசுவதற்குள், “இப்படி பேசிட்டே இருந்தா எப்ப சமைக்கிறது?” என்று சுமித்ரா கேட்கவும் வேகவேகமாக சமையல் நடந்தது.
“என்ன அத்தாச்சி? அப்படியே பேச்சை மாத்தியாச்சு போல….” கிண்டலாக தாரகை சொல்ல,
“ஏன்?” என்று சுமித்ரா பாவமாக பார்த்தாள். துரையைக் கத்தி விட்ட வந்த தாரகைக்கும் மனத்தில் ஒரு சோர்வு, பன்னீரைப் பற்றி தெரிந்தும் அவனிடம் அப்படி நடந்திருக்க கூடாது என்று அறிவுக்குப் புரிந்தாலும் எப்போதும் மனது மட்டும் துரை அப்படி இருக்கலாமா என்று குறை கண்டுபிடித்தது.
மதிய விருந்து தடபுடலாக இருந்தது.
“ரொம்ப நல்லா இருக்கு அத்த” என்று வாய் திறந்து பாராட்டவும் செய்ய, அருணா மகனை முறைத்தார்.
‘இந்தம்மா ஊரான் விட்டு பிள்ளைகள மட்டும்தான் பாராட்டும்’ என்று துரை உள்ளுக்குள் புகைந்தான். அரிச்சந்திரன் எல்லாரிடமும் நன்றாகவே பேசினான். அதனால் அவனை வீட்டினருக்குப் பிடிக்க, அறிவும் துரையும் கொஞ்சம் கடுப்பாகவே பார்த்தனர்.
“இப்ப தெரியுதா இவனை ஏன் வில்லங்கம்னு சொல்றேனு, பாரு வக்கீல் பேசி பேசி எப்படி எல்லாரையும் இம்ப்ரஸ் பண்றானு. எங்கம்மா வேற இவனை மாப்பிள்ளையாக்க ப்ளான் போட்டுச்சு, ஆனா அவன் அப்படி பார்க்கலனு சொல்லிட்டான். வயசும் அதிகம்!” என்று அறிவு சொல்ல துரை அவன் தோளில் கை போட்டு,
“அது சரிதான் பங்காளி! ஆனா எல்லாரையும் சமாளிக்கிற சாதுர்யம் அரி கிட்ட இருக்கு. நம்ம கெரகம் நம்மகிட்ட கிடையாது. விடு என் மச்சானுக்கு மச்சான் ஆகுற பாக்கியம் உனக்கு இல்லை” என்று சோகமாக சொல்ல,
“என்னடா? மச்சான்ங்கிற? உன்னை நம்ப மாட்டேண்டா! கொஞ்ச நஞ்ச பேச்சாடா பேசுன, கடைசியில இன்னிக்கு தாரகையோட தலை தீபாவளி கொண்டாட போற, என் பங்காளி முரட்டு சிங்கிள்னு நம்பினேனேடா நம்பினேனே…. கொய்யால” என்று அவன் முதுகில் குத்தினான் அறிவு.
“டேய்! விடுடா! என் பொண்டாட்டி பார்த்தா அப்புறம் அவ்வளவுதான், என் மச்சான் லாயர், கம்ப்ளையண்ட் பண்ணிடுவேன்” துரை சிரிப்பை அடக்கி மிரட்ட,
அறிவோ, “பாலைக் குடிச்சிப்புட்டு பாம்பா கொத்துறியே பங்கு!!” என்று முறைத்தான்.
“பால் இல்லை பங்காளி, பாயாசம்” என்றான் கையில் இருந்த டம்ப்ளரை தூக்கி காட்டி.
அறிவு கடுப்பாக பார்க்க, “சரி நீ எப்போ கல்யாணம் பண்ண போற, வயசாகுதுல” என்று துரை கேட்கவும்
“டேய், பங்கு! என்னை விட பெரியவன் நீயே ஆறு மாசம் முன்னாடி கல்யாணம் பண்ணிட்டு என்னை ஓட்டுறியா? ஆன்சைட் போகாம அறிவு கல்யாணம் பண்ண மாட்டேண்டா, இது என் மானேஜர் அந்த மண்ட கஷாயம் விஸ்வா மேல ஆணை!” என்றான்.
அன்றைய பொழுது ஓடிவிட, இரவில் அறைக்கு வந்த தாரகை ராஜதுரையை கழுத்தோடு கட்டிக்கொண்டாள்.
“ராஜாத்திக்கு கோவம் போச்சா?” ராஜதுரை அவள் கன்னம் பற்றி கேட்க
“கையை எடு!” என்று அதட்டினாள்.
“ஏண்டி நீ மட்டும் கை வச்சிருக்க?” ராஜதுரை கையை எடுக்காமல் முகம் சுருக்கி கேட்டான்.
தாரகைக்கு அவனை பார்க்க பார்க்க அள்ளி அணைத்திடும் ஆவல்! கட்டியிருந்தாலும் கட்டவிழ்க்க காத்திருந்தது காதல்! அதை விட ரோஷம் அதிகம் இருக்க, அவனை சீண்டினாள். தாரகைக்கு அவள் கணவன் எப்போதும் எழிலன்! இன்று வேஷ்டி சட்டையில் கண்ணை கவர்ந்தான். கொஞ்சவே நெஞ்சம் கொண்டாள். ஆனாலும் ஸ்ருங்காரத்தை தடுத்தது சிறு கோபம்!
“உன் மேல நான் கோவமா இருக்கேன், சோ நான் என்னை தொட அலோவ் பண்ண மாட்டேன்” என்றாள்.
“நியாயமே இல்லடி!” ஏக்கத்தில் அவன் சொல்ல,
“அப்படியா?” அவள் இதழ்கள் அவன் காதோரம் உரச,
“நம்ம ப்ரண்ட்லியா பேசினப்பவே உன்னை எனக்கு அவ்வளவு பிடிக்கும். அப்ப உன்னோட சண்டை வர மாதிரி டாபிக் பக்கம் நான் போகவே மாட்டேன். இப்ப உன்னோட சண்டை போட்டு சாப்பிட முடியல, தூக்கம் வரல” என்றவன் அவள் எதிர்ப்பை மீறி ஏக்கம் தீர்க்க, ஆவல் பெருக அள்ளி அணைத்துக்கொண்டான்.
“இரண்டு மீன் துண்டு, ஒரு மீன் தலை, நாலு நல்லி எழும்பு. இரண்டு வடை, நாட்டுக்கோழி கால்” என்று தாரகை சொல்ல ராஜதுரை அவள் முகத்தோடு முகம் சேர்த்து,
“என்ன தாரக இது? பசிக்குதா? வேணுமா?” என்று கேட்க அவன் கன்னம் கடித்தவள் “இதெல்லாம் நீ மதியம் சாப்பிட்டது” என்றதும்
ராஜதுரை, “ஏட்டி! கன்னம் வலிக்குது” என்று தேய்த்தவன் “கட்டின புருஷன் சாப்பிடுறதை கணக்கு எடுத்தியா?” என்று கடுப்பாக கேட்டான்.
தாரகை சிரித்தவள் “பின்ன சாப்பிடல, தூங்கலன்னு உருட்டுற? நான் தமிழ் சினிமா பார்த்துதானே வளர்ந்தேன். தாரகை இந்த டயலாக்ஸ்க்கு எல்லாம் சாய மாட்டா” என்று சொன்னவள்
“உனக்கு அத்தகிட்ட சொல்லி திருஷ்டி சுத்தி போடணும். ஏண்டா இன்னிக்கு இப்படி ஹாண்ட்சம்மா இருந்து இம்சை பண்ற? உன்னை” என்றவள் அவள் இதழ் பேச்சை அவன் இதழில் நிறுத்தினாள்.
அன்பு பரிமாறலாய் ஒரு ஆழ முத்தம்!!
மனைவியின் முத்தம் பின்பற்றிய துரை, இடையோடு கரம் பின்னி இளைப்பாறி “அது நமக்கு பிடிச்சவங்க அழகாதான் தெரிவாங்க” என்று சொன்னான்.
“அப்படியும் வச்சுக்கலாம்! ஆனாலும் கல்யாணம் ஆன பின்னாடி எக்ஸ்ட்ராவதான் அழகாகிட்ட!” என்று தன்னை ரசிக்கும் மனைவியை துரைக்கு அவ்வளவு பிடித்தது.
“அது என் பொண்டாட்டி என்னை சந்தோஷமா பார்த்துக்கிறா” என்று துரை சொல்ல, அவன் கன்னத்தை கிள்ளி கொஞ்சியவள்,
“துரை நீ ஒரு க்யூட் ஆனியன்..” என்றவள் மீண்டும் ஆசையாய் கன்னத்தில் முத்தமிட்டாள்.
“சாரி!” தாரகை எட்டி அவன் நெற்றியை முட்டி முத்தமிட்டு
“காலையில இருந்து ட்ராக்டர் ஓட்டி டயர்ட்ல வந்த, பெரிய பூமர் மேல உள்ள கடுப்பெல்லாம் உன் மேல காட்டிட்டேன். சாரி” என்று மீண்டும் சொல்லி அவன் கையை பிடித்து நெட்டி முறித்தவள் இதமாக அழுத்திவிட்டாள்.
உடல் சோர்வு, உள்ளத்தின் சோர்வெல்லாம் காணாமல் போனது, மனம் காதல் கொண்டது! ஏதோ எல்லாரும் செய்கிறார்கள், அதனால் திருமணம் என்று நினைத்திருந்தான் ராஜதுரை. திருமணமான சில மாதங்கள் அதன் அர்த்தத்தை அளவில்லாமல் அனுதினமும் உணர்த்தியது.
சோர்வான தினங்களில் உற்சாகம் அளிப்பது வாழ்க்கைத்துணையே! சில நேரம் எரிச்சல், சண்டை என்று இருந்ததுதான். எல்லா உணர்வும் இருந்தாலும் அவளுடன் இருப்பதால் அதனை கடக்க முடிந்தது.
அந்தவுணர்வோடு தாரகையைப் பார்க்க, அவளோ “பேசாம ஆள் வச்சு ட்ராக்டர் ஓட்டு” என்றாள். ட்ராக்டரில் உடல் குலுங்க உட்கார வேண்டும், இடுப்பு வலியெடுக்கும். இரண்டு முறை அதில் ஏறிவிட்டு கணவன் படும் கஷ்டம் கண்டு தாரகைக்கு கவலை. இருந்தும் ஒன்றும் சொல்ல மாட்டாள், அவன் சுயமரியாதையைத் தாக்காத வண்ணமே தாரகையின் செயல் இருக்கும்.
“அதுக்கு சம்பளம் கொடுத்து, டீசல் போட்டு கட்டுப்படியாகாது தாரக” என்றவன் “அப்படியே காலை வச்சு முதுகுல மிதிம்மா, வலிக்குது” என்று சொல்லவும் தாரகை ஐந்து நிமிடம் மிதித்தவள் பின் அப்படியே அவன் அருகே உட்கார்ந்து தோள்களை பிடித்துவிட்டாள். இருந்த அயர்ச்சியில் அப்படியே கண் அசந்தான் ராஜதுரை.
✅ End of Episode 33
Very nice.
Nice