Episode 35

ஆவல் 35 ( நிறைவு)

“டேய் அரி! பேசாம இந்த பம்பில்(bumble), ஹேப்பன்(happn), டிண்டர்(tinder) அதுல ஒரு அக்கவுண்ட் க்ரீயேட் பண்ணி ஒரு பொண்ணை பாரு, மீட் பண்ணி டேட் பண்ணு. இல்லையா கோர்ட்ல எதாவது கவுன் போட்டா பொண்ணா பார்த்துடு. இல்லை யாராச்சும் பிடிச்சா வெட்கப்படாம சொல்லுடா, நான் சேர்த்து வைக்கிறேன்” என்று தாரகை சொல்ல, எப்போதும் போல் இந்த அண்ணன் தங்கை சம்பாஷணை துரையை ரசிக்க வைத்தது.

“முதல்ல சாப்பிடு தாரா. யாரையாச்சும் பிடிச்சா உடனே சொல்லிடப்போறேன்டி” என்ற அரி

“சரி, டிரஸ் மாத்திட்டு வரேன்” என்று அறைக்குள் செல்ல,

துரை அவன் இலையில் இருந்த எலும்பை தட்டி தாரகையின் இலையில் வைத்தான். இலையைப் பார்த்தவளின் கண்கள் நிறைந்து விட்டன. முகம் காட்டாது ராஜதுரையின் தோளில் தன்னை புதைத்தாள் தாரகை.

“அம்மாடி! என்ன ஆச்சு?” என்று கேட்க, தாரகையிடம் பதில் இல்லை.

தாரகைக்கு அப்பாவின் ஞாபகம். அவரும் இப்படித்தான் சின்ன வயதிலிருந்தே நல்லி எலும்பைத் தட்டி அவளுக்குக் கொடுப்பார். அண்ணன் இவ்வளவு செய்திருந்தாலும் வெகு நாட்கள் கழித்து அப்பா, அம்மா இல்லாத வெறுமை மிக கொடுமையாக இருந்தது. கண்ணீர் ராஜதுரையின் சட்டையை நனைக்க,

“தாரகை! என்னாச்சு? ஏன் அழற?” பதட்டமாக துரை கேட்டான்.

“ஷ்! கத்தாத” என்றவள் மூச்சை உள்ளிழுத்து அவன் தோளிலே முகத்தை துடைத்தாள். அழுதால் நிச்சயம் அரிச்சந்திரன் திட்டுவான்.

“ஒன்னுமில்லை” என்றவள் பெருமூச்சுடன் சிரித்தாள்.

தாரகை அழுகையின் தாக்கம் ராஜதுரை முகத்தில் அப்படியே பிரதிபலித்தது.

‘க்யூட் வெங்காயத்தோட!’ என்று காதலாக சலித்தவள்

“அப்பா இப்படி செய்வாரா.. அப்புறம் அரி அம்மா மாதிரியே சமைச்சிருந்தான். அவங்களை மிஸ் பண்ணினேன்” என்று காரணம் சொல்லி

“சிரிங்க பூமர்! இல்லைன்னா அரி வந்து பேசுவான். உங்க பொண்டாட்டி சரியாகிட்டா துரை” என்று அவனை சமாதானம் செய்தாள்.

“அரியைப் பார்த்து ரொம்ப பயம் மாதிரி நடிக்காத”

“பயமில்லை! ஆனா திட்டுவான். அப்போ ரொம்ப அழுவேன், சரியா சாப்பிட மாட்டேன். அவன் சொல்லுவான் எத்தனை பேர் அம்மா, அப்பா இல்லாம போனா நடுரோட்டுக்கு வந்துடுவாங்க ? நமக்கு அப்படியா? அவங்க இல்லைன்றது மாறாது. அதுக்காக அதை நினைச்சு அழுதுட்டே இருக்க முடியாது, அக்செப்ட் பண்ணிட்டு அதோட வாழணும் சொன்னான். அவன் முன்னாடி அழறதே இல்லை, அவனுக்காகவும்தான்!” என்றாள் தாரகை வேகமாக.

சுவரில் மாட்டியிருந்த தயாளன் ராஜலஷ்மியின் புகைப்படத்தை கை காட்டி, “உன் அப்பா கிட்ட சொல்லு, அவர் அளவுக்கு இல்லனாலும் சுமாராவாச்சும் அவர் பொண்ணை பார்த்துப்பேனு” தாரகையிடம் துரை இப்படி கூற,

தாரா “உன் அப்பா கிட்ட நீ என்ன சொல்லுவ?” என்று கேட்டாள்.

“அவரை விட நல்லா பார்த்துக்கிறா என் பொண்டாட்டினு சொல்லியிருக்கேன்” என்றதும்

“க்யூட் ஆனியன்!” என்று கிண்டல் செய்தாள்.

அரிச்சந்திரன் உடைமாற்றி வர அவனுடன் சாதாரணமாக பேசினாள். அப்படியே அன்றையை பொழுது அருமையாக சென்றது. மாலையில் வானவேடிக்கை, பட்டாசு என்று அமர்க்களம் செய்தனர். இரவில் பல மாதங்கள் கழித்து வீட்டு வாசல்படியில் அரியும் தாரகையும் உட்கார்ந்திருந்தனர். அவர்கள் பேசட்டும் என்று துரையும் தாரகையின் அறையில் உறங்க போய்விட்டான்.

“எப்படி போது எங்க ராஜாத்திக்குக் கல்யாண வாழ்க்கை?” அரி தாரகைக்குக் கீழே ஒரு படியில் உட்கார்ந்து கேட்டான்.

“நகைச்சுவை திங்கள், காதல் செவ்வாய், காவிய புதன், அதிரடி வியாழன், சூப்பர்ஹிட் வெள்ளி அப்புறம் ரொமாண்டிக் சனி ஞாயிறுனு எல்லா வகையாவும் போகுது” என்று தாரகை பாவனையாக கையை ஆட்டி சொல்ல,

“கொழுப்புடி” என்று சிரித்த அரிச்சந்திரன்

“நான் பயந்த அளவு இல்லனாலும் நீ மேனேஜ் பண்ற தாரா, பட் துரை பெரியப்பா வச்சு நீ துரையோட சண்டை போடாத” என்று அறிவுரை சொன்னான்.

தாரகை அண்னனை முறைத்தாள்.
“வக்கீல் வேலையெல்லாம் எங்கிட்ட காட்டாதடா” என்றதும்

“தங்கச்சி வேற காதல் திருமணம் பண்ணியிருக்கீங்களே, வாழ்க்கை எபடி போகுதுனு கேட்டா, ஓவரா பண்ற?” என்றான் அரிச்சந்திரன் .

“காதல் திருமணமா? வாய்ல அடிங்க வக்கீல்! என் வீட்டுக்காருக்கு காதல் பிடிக்காது, தாரகைத்தான் பிடிக்கும்” என்று சொல்லும்போது கணவன் தன் மீது கொண்டுள்ள அபிமானம் அப்பட்டமாக தெரிந்தது.

“ரியலி?”

“ரியலி ரியலி” தலையாட்டிய தங்கையின் தலையில் கைவைத்தவனுக்கு முகத்தில் சந்தோஷம் மட்டுமே.

“இந்த ஜாதி மத சண்டையிலெல்லாம்”

“துரை இப்ப பேசுற ஒரே ஜாதி அவர் பெண்ஜாதி மட்டுமே!!” சிரித்துக் கொண்டே சொன்னாள் தாரகை.

“மைதிலிக்கு அவ பேரண்ட்ஸ் ஞாபகம்னு மோகன் சொன்னான். அவங்க அக்செப்ட் பண்ண மாட்டங்க இல்ல?” அரி கேட்க

“பெரிய பூமர் கண்டிப்பா நோ தான்! துரைக்குப் பாசம் இருந்தாலும் அவளுக்காக பேச மாட்டார், அவருக்கும் கோவம் உண்டு.” என்றாள் தாரகை.

“அப்புறம்?” அரி இழுக்க,

அண்ணன் தன் நலனை அறிய ஆசைப்படுகிறான் என புரிந்து,

“லவ் மேரேஜ் மீன்ஸ் சண்டையில்லாம் இருப்பாங்கனு கிடையாது. ஏண்டா கட்டினேன்னு இரண்டு பேருக்குமே தோணும். பட் இரண்டு மூணு நாளுக்கு மேல சண்டை வளர விடுறது கிடையாது. வெயில், புயல், மழை, சாரல்னு எல்லாமே உண்டு. சில நேரம் இவனை எப்படி கல்யாணம் செஞ்சோம்னு ஒரு கடுப்பு வரும், சம் டைம் இவனை தவிர யாரையும் அப்படி நினைக்கவே முடியாதுனு தோணும்.” என்று அண்ணனிடம் சொன்னாள் தாரகை.

“எங்கயோ படிச்சேன், அக்சுவலி லவ்னா ஒருத்தரை முழுசா பிடிக்கிறது இல்லை! ஏதோவொன்னு அவங்ககிட்ட பிடிச்சு போகும், அவங்களையே பிடிக்கிறதா மனசு நினைக்கும். யாரையும் முழுசா நேசிக்கவே முடியாது!” என்று தத்துவம் சொன்னான் அரிச்சந்திரன்.

“கரெக்ட் டா அரி” தாரகை சொல்லிவிட்டு வானத்தை வேடிக்கை பார்க்க, அரிச்சந்திரன் “உன் போன் கொடு” என்று கேட்டு தாரகை போனை வாங்கி பார்த்தான். அதில் துரையின் ஸ்டேட்டஸ் பார்த்துவிட்டு,

“அதானே பார்த்தேன், இன்னும் இதெல்லாம் ஓடுதா?” என்றான் கிண்டல் பாவனையில்.

“என்ன என்ன?” என்று வேகமாக போனை பறித்தவள்,

“இண்டீசண்ட் இடியட்!” என்று அண்ணனை திட்டினாள்.

“போ, போ! உன் பூமருக்கு நாள் பார்க்கணுமாம்” என்று அரிச்சந்திரன் விடாது கிண்டல் செய்தான்.

பார்த்தால் துரை,

‘அடி உன்னை காணத்தான்
நான் கண்கள் வாங்கினேன்
உன்னோட சேரத்தான்
என் உயிரை தாங்கினேன்
வெண்ணிலவே வெண்ணிலவே
நல்ல நாள் பார்த்து வா
உன்னுடைய கூந்தலிலே
புது பூச்சூடவா..!” என்று ஸ்டேட்டஸ் வைத்திருந்தான்.

அரிச்சந்திரன் விடாது கிண்டல் செய்து சிரிக்க, “போடா!” என்று சொல்லி அறைக்குள் போய்விட்டாள் தாரகை.

ராஜதுரை மெத்தையில் சாய்ந்து உட்கார்ந்திருந்தான். லேசாய் கண் சொக்கியிருக்க, தாரகை வந்து உட்காரவும் விழித்துக் கொண்டான்.

ராஜதுரை, “பேசியாச்சா?” என்று கொட்டாவி விட்டபடி கேட்க,

தாரகை கணவனை வந்து கட்டிக்கொண்டவள், “உன் ஸ்டேட்டஸ என் போன்ல பார்த்துட்டு அந்த அரி பய என்னை கலாய்க்கிறான்” என்றதும் மனைவியை தோளோடு அணைத்து சாய்ந்து கொண்டான்.

“கேடி ஃபெலோ! பேசுங்கனு சொல்லிட்டு இங்க நல்ல நாள் பார்க்கவான்னா ஸ்டேட்டஸ் வைக்கிற?” அவன் கன்னத்தைப் பிடித்து தாரகை கேட்க

“பின்ன, பேசினா இரண்டு வார்த்தையோட வருவனு நினைச்சேன். எனக்கு தீபாவளி பரிசெல்லாம் கிடையாதா?” அவளிடம் தேடலை தேடியது அவன் குரல்.

தாரகையோடு திளைத்திட ஆவல் அலைமோதியது! கணவனின் நெருக்கத்தில் அவன் மயக்கம் உணர்ந்தவள் அவனுடன் இன்னும் நெருக்கம் கூட்டினாள்.

“இன்னிக்கு தாத்தா, அண்ணா எல்லாம் பார்த்தா தாரகை ரொம்ப ஹாப்பி, என்னை கேட்டாலும் ஓகே!”

“என்ன கேட்டாலுமா?” ராஜதுரை கேட்க

“பூமர்! ‘என்னை’ கேட்டாலும்” என்றாள் அழுத்தமாக. ராஜதுரையின் கண்கள் மின்ன, தொடர்ந்த இரவெல்லாம் காதல் தாரகையில் கவிதை இயற்றினான்.

*******

திருமணமாகி ஒரு வருடத்திற்கு பின்…

தாரகை தியேட்டரில் துரைக்காக காத்திருந்தாள். அலுவல் அறையில் இருக்க, துரை போன் செய்யவும் கார் பார்க்கிங் சென்றாள். ஆயிரம் முறை அங்கு சென்றாலும் ஆதி நினைவுகள் அவளை சூழும்!!

துரை தாரகை கார் அருகே நிற்க, வழக்கமான வஞ்சியின் பார்வை!

“எத்தன வருஷத்துக்குடி இந்த கிண்டல் பார்வை?”

“பேரப்பசங்க வந்தாலும் பார்ப்பேன். அவங்க கிட்ட சொல்லுவேன் உன் தாத்தா ஒரு பெரிய பூமர்டா. ஓவரா பண்ணினான்னு” என்று தாரகை சொல்ல

“இன்னும் பூமர்னு சொல்ற நீ!” என்று அவள் கன்னத்தைக் கிள்ளினான்.

கிள்ளியவனின் கையில் இருந்து காப்போடு சேர்த்து சட்டென்று முத்தமிட்ட தாரகை,
“வீட்லதான் பெரிய பூமர் காவலுக்கு இருக்காரே, நம்ம கொஞ்சம் தூரம் சும்மா கார் ஓட்டிட்டு போவோம்” என்று சொல்லவும் துரை இந்த முறை கார் எடுத்தான்.

பன்னீர் செல்வம் மட்டுமே வீட்டில் இருந்தார். மைதிலிக்கு குழந்தை பிறந்து இருக்கிறது, அவருக்கு தெரியாது. அரிச்சந்திரன் துரையிடம் கேட்க, குழந்தை பிறக்க ஒரு வாரம் இருக்கும் முன் சரோஜா, அருணா, கமலா மூவரையும் ஹரித்வார் யாத்திரை என்று பொய் சொல்லி தாரகை அனுப்பினாள். யாரிடமும் உண்மையை சொல்லவில்லை.

பன்னீரும் கோவில்தானே என்று விட்டுவிட்டார். தன்னை மீறுவார்கள் என்ற எண்ணமில்லை, அவரை மாற்றவே முடியாது, எத்தனை பேசினாலும் அவரால் அவர் ஜாதியை, கௌரவத்தை, பெண்கள் மீது செலுத்தும் அதிகாரத்தை மாற்ற முடியாது என்று தாரகையும் உணர்ந்துவிட்டாள். துரையின் மாற்றம் கூட அருணாவின் மகன் என்பதாலும், தன் மீது கொண்ட விருப்பத்தாலும் என்று தெரியும்.

முந்திய தலைமுறையை மாற்ற முடியாது. ஆனால் இன்றைய நாளைய தலைமுறையினரை மாற்றலாம், அவர்களாக மாறலாம்! யாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற ஊராயிற்றே?! தன் பிள்ளைகள் மனிதரை பாகுபாடு இன்றி மதித்து சமத்துவமாக வாழ வேண்டும் என்பதே தாரகையின் அப்போதைய ஆவல்! நிச்சயம் துரை இதற்கு துணை நிற்பான் என்பதை அவனுடனான நாட்களில் நன்கறிந்தாள்.

ராஜதுரை அவள் முதல்முறை பார்த்த ஜாதிப்பற்று ஊறிய, பெண்கள் மீது ஆதிக்கம் செலுத்தி முன் தீர்மானத்துடன் இருந்தவன் இல்லை இப்போது! அதற்காக மொத்தமாக மாறினான் என்றால் இல்லை. சாதி கூட்டங்கள் தவிர்த்தான், சிறுவர்கள் கூட சாதி பிடித்து தொங்க அதன் அபத்தம் அவனுக்கு நன்றாக உரைத்தது.

ஆனாலும் தாரகையை துப்பட்டா போட சொல்வதில் மாறவில்லை. அவள் கேட்பதுமில்லை! சமூக மாற்றங்களை ஏற்க சிரமப்பட்டாலும் மதிக்க கற்றான், புரிந்து கொள்ள முயன்றான்.

அரிச்சந்திரன் பெரிய வழக்கு ஒன்றில் ஜெயித்த பின் திருமணம் என்றான். அறிவு வெளி நாடு செல்ல வேண்டும் என்ற சத்தியத்தால் சம்சாரியாகாமல் காத்திருந்தான். தாரகை துரை வாழ்க்கை இயல்பாக சென்றது.

“பாட்டு போடுறேன், வீண்டோ ஓபன் பண்ணலாம்” என்ற தாரகை துரையின் போனை கனெக்ட் செய்து பாடல் போட்டாள்.

என் வானிலே
ஒரே வெண்ணிலா என்
வானிலே ஒரே வெண்ணிலா
காதல் மேகங்கள் கவிதை
தாரகை ஊர்வலம்

என்று பாடல் கேட்க

“எத்தன வாட்டி கேட்ப?” என்று கணவனை திட்டினாள்.

“என் காது கேட்கற வரைக்கும் கேட்பேன். இதுதான் எனக்குப் பிடிச்ச பாட்டு என்னைக்கும்! நீ சொன்ன மாதிரி என் பேரப்பசங்க கிட்ட சொல்லுவேன் என் ராஜாத்தி பாட்டு இது!” என்றவனின் ஆவல் ஆயுளுக்கும் தீராது!

ராஜதுரையின் காதல் வானில் என்றும் கவிதை தாரகை உலா !!

✅ End of Episode 35
How did you feel about this episode?
❤️ 2 more...

You must Log in or Register to react here

💬 11 Replies
Mrs Beena loganathan Reader 2 weeks ago

இரண்டு நாளாக என்னால் site la open ஆகல 🤧... அப்புறம் தேவி மனோகரன் sis கிட்ட சொல்லி 

இப்போ problem solved 👍🏻❤️🙏🏻
❤️ 2 more...
Mrs Beena loganathan Reader 2 weeks ago

Detailing......

1. ஆண் பெண் சரி சமம்
2. ஆணுக்கு ஒரு நீதி பெண்ணுக்கு ஒரு நீதி 
 3. அண்ணன் தங்கை பாசம் எப்படி இருக்க வேண்டும் எப்படி இருக்கக் கூடாது என்பதற்கு இரு எடுத்துக்காட்டுகள் 

4. அம்மாவின் ஆசை அவரின் எதிர்பார்ப்பு அப்பா இல்லாத தனிமை அப்பா அம்மா இல்லாத இருவர் தாத்தாவின் பிடியில் அருமையாய் வளர்ந்திருப்பது 
5. காதலை பிடித்து திருமணம் செய்யும் காதலியும் காதலை பிடிக்காத புரிதல் கொண்ட பெற்றோர்கள் சம்மதத்தோடு காதல் செய்த காதலனும் காதல் மட்டுமே ஒற்றுமையாக இருப்பது 
6. பெரியப்பாவின் பிற்போக்குத்தனம் அண்ணனின் முற்போக்குத்தனம் 
பெரியார் கொள்கைகள் அம்பேத்கார் மொழிகள் தாத்தாவின் துணிச்சல் என்று ஒவ்வொரு அத்தியாயத்தையும் ரசித்து சிரித்து படித்தோம்....

7. அறிவின் அறிவு மொழி அற்புதம் அறிவின் ஆதங்கம் அவனின் லட்சியம் 😂😂😂😂 நிறைவேறட்டும்...
8. அரிக்கு ஒரு புரட்சி பெண் வரட்டும் 👏🏻👏🏻💐💐💐👍🏻👍🏻👍🏻
9. ஸ்டேட்டஸ் பாட்டுக்கள் அனைத்தும் அருமை....❤️❤️❤️
10. பிடிவாதம் எப்போதும் பிடிக்காமல் புரிந்து நடந்து கொள்வதில் பெண்ணின் அழகு இருப்பது தாரகையின் விஷயத்தில் துரை புரிந்து கொண்டிருப்பான்....

அற்புதம்.....👏🏻👏🏻👏🏻👏🏻💐👍🏻❤️
❤️ 2 more...
Pavithra Narayanan 2 weeks ago

Pakka detailing sis. 

Thank you 😊 
❤️ 1 more...

@Pavithra Narayanan 

விமர்சனம் பண்ணிட்டேன் review பக்கம் 
❤️ 1 more...
Pavithra Narayanan 2 weeks ago

@Mrs Beena loganathan  will check sis. 😊

Srichitra Reader 2 weeks ago

Superb  story  Pavi ma.  Congrats. 

❤️ 1 more...
Mrs Beena loganathan Reader 2 weeks ago

ஆவல்கள் தீர வா 

❤️ 2 more...
Srichitra Reader 1 week ago

Daily login panna solgiradgu pavi ma.

Again ah?? Will check with developer ma. Today Sunday, Nalaiku kekuren. 

@Pavithra Narayanan ... எனக்கும் அப்ப அப்ப கேட்கிறது.... இத்தனைக்கும் நான் home screen la save பண்ணி வெச்சிருக்கேன்.....

❤️ 1 more...

@Mrs Beena loganathan soliten ma. Checking 

❤️ 1 👏 1 more...
Log in or Register to reply

🔗 Insert Link

Scroll to Top